இராணுவத் தளபதியாக ஜகத் ஜயசூரியவும், கடற்படைத் தளபதியாக திசர சமரசிங்கவும் நியமனம் – பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜெனரல் சரத் பொன்சேகா

sarath-pon.jpgபாது காப்புத் துறை உயர் பதவிகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய நியமனங்களையும் நேற்று வழங்கினார். பிரதான பாதுகாப்பு அதிகாரி, தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதியின் ஆலோசகர், புதிய இராணுவத் தளபதி, கடற் படைத் தளபதி ஆகிய பதவிகளுக்கே புதிதாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் புதன்கிழமை 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த புதிய நியமனங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. இதற்கமைய தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாகவும், தற்போதைய கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஏற்பட்டுள்ள இராணுவத் தளபதி பதவி வெற்றிடத்திற்கு புதிய இராணுவத் தளபதியாக தற்போதைய வன்னி பாதுகாப்புபடைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத்ஜயசூரியவும், கடற் படைத் தளபதி பதவி வெற்றிடத்திற்கு புதிய கடற்படைத் தளபதியாக கடற்படையின் தற்போதைய பிரதான அதிகாரி பதவி வகிக்கும் ரியர் அட்மிரல் திஸர சமரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நியமனங்களுக்கமைய மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய 19வது இராணுவத் தளபதியாகவும், ரியர் அட்மிரல் திஸர சமரசிங்க 17வது கடற் படைத் தளபதியாகவும் எதிர்வரும் புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பாதுகாப்பு படை உயர் தளபதிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தமது நியமனங்களை பெற்றுக் கொண்டனர்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Appu hammy.Perera
    Appu hammy.Perera

    Why is the president promoting these people. afterall the war was won by India and the most lethal weapons.

    1.Answer for those who cry about SL being another Myanmar or Rwanda. What do you guys suggest?

    2.Looks like we are going to fashion our country to end up as a military regime in the same way as the favourite countries visited by the President, i.e. Myanmar, Cuba etc

    3.How can a country be like Burma,Zimbabwe,Rwanda, Somalia, China by appointing new commanders in forces, which is a routine thing in any country?

    4.We think srilanka become same as burma,,very bad country in south asia

    5.What we need now is to rebuilt the country, not to decorate and promote military personnel.

    6.Please ask new commanders not to mingle in politics. The last one, though, won the war, did much damage by making unwarranted political statements. Commanders of the forces are not elected representatives of the people.

    7.Many Royalists have messed up the country. Hope not this Royalists!!!

    Reply
  • punju.menika
    punju.menika

    அரசுக்கு எதிராக சட்டத்தின் மூலம் போராடும் வழக்கறிஞர்களை தேசத்துரோகிகள் என்கின்றனர். அரசை எதிர்த்து எழுதும் பத்திரிகை, பத்திரிகையாளரை தேசத்துரோகி என்கின்றனர். கண்காணிப்பு, கடத்தல், அடி உதை மற்றும் படுகொலை மூலம் நாட்டை முழு அச்சத்தில் உறையவைத்து, தமது பாசிச இராணுவ ஆட்சியை மேலும் பல ஆண்டுக்கு நிறுவமுனைகின்றனர். பாசிசங்களில் ஒன்று மற்றொன்றை அழித்து, முழு நாட்டிலும் ஒரு கும்பலின் பயங்கரவாதத்தை உலகறிய நிறுவி வருகின்றது

    Reply
  • msri
    msri

    புஞ்சு மெனிக்கா!
    உங்கள் குரல்> ஐனநாயகத்தின் குரலாக> பாசிசத்திற்கு எதிரான> அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கின்றது!

    Reply