புலிகள் அழித்தொழிக்கப்பட்டாலும், அதன் ஆவிகள் இன்னும் ஆடுகின்றன என்பதனால் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று கோருவதற்கு தமிழ்த் தேசியக் கட்டமைப்பிற்கு எவ்விதமான அருகதையும் இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுப்படைகளின் தளபதி சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: மீண்டும் பயங்கரவாதம் தோன்றிவிடாமல் இருப்பதற்கு சகல பிரிவுகளையும் பலப்படுத்த வேண்டும். அரசியல், நிர்வாக ரீதியில் மட்டுமல்லாது பாதுகாப்பு ரீதியிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலமாகவே பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்காது. முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் பதவி, பதவியாக மட்டுமே இருந்தது. ஆனால், இவரே நிர்வாக ரீதியில் இணைந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்.
எதிர்கால பாதுகாப்புச் செயலாளர்கள் நிர்வாக ரீதியில் மட்டுப்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. புலனாய்வுத் துறைகளை மத்தியஸ்தப்படுத்துவதற்கான நடவடிக்கை இருக்கவில்லை. அதிகாரம் தவறான ஒருவரின் கைக்குச் செல்வதனால் பிழைகள் இடம்பெறலாம். முகத்துடன் கோபித்துக் கொண்டு மூக்கை வெட்டிக்கொள்ள முடியாது. பொது ஒழுங்குப் பத்திரம் இன்றி தனித்தனி தாளத்திற்கு ஆட முயற்சித்தால் உருவாகபோவதைத் தடுக்க முடியாது.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் புலியின் ஆவிகள் பேயாக ஆடுகின்றன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை நிர்மாணிக்க வேண்டாம் என்று இந்தியாவிடம் கோருகின்றது
மாயா
புலிகளோடு TNAயையும் எரிக்க வேண்டும். இவர்களும் தேசியத் துரோகிகள்தான். அங்கே மக்கள் சாகும் போது வெளிநாடுகளில் புலிப் பிரசாரம் செய்தார்களே தவிர , அந்த மக்களைக் காக்க ஒரு மண்ணும் செய்யவில்லை. தமிழ் படங்களில வில்லனைத் துரத்துர மாதிரி ஓட ஓடத் துரத்த வேணும்.
chandran.raja
எப்பொழுது தேசத்திலுள்ள மக்களை பொருட்படுத்தாது சுயலநலத்திற்காக அரசியல் முன்னெடுக்கப்படுகிறதோ அப்பொழுதே பயங்கரவாதமும் ஜனனம் பெறுகிறது. பயங்கரவாதத்தை மட்டும் தனியே குற்றம் சாட்டி அரசியல் நடத்துவதும் பயங்கரவாதத்திற்கே வழிவகுக்கும். ஆவியாகாதவர்களும் ஆவிகளை வரவழைத்தவர்களும் இன்னும் இருக்கிறார்கள் என்பது மறக்கமுடியாத உண்மை.ஆவியை வரவழைக்க மறைமுகமாக பிராத்தனைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
rohan
//புலிகளோடு TNAயையும் எரிக்க வேண்டும். இவர்களும் தேசியத் துரோகிகள்தான். அங்கே மக்கள் சாகும் போது வெளிநாடுகளில் புலிப் பிரசாரம் செய்தார்களே தவிர , அந்த மக்களைக் காக்க ஒரு மண்ணும் செய்யவில்லை. தமிழ் படங்களில வில்லனைத் துரத்துர மாதிரி ஓட ஓடத் துரத்த வேணும்.//
புலிக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?
TNA ஐ எரிக்க இவர்கள் யார்? நவீன புலியா?
ஓட ஓட விரட்ட இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மக்கள் புள்ளடி போடுவார்கள். கள்ள வாக்கு இல்லது உண்மை வாக்குகள் விழுந்தால் TNA உம் கணிசமான வாக்குகள் பெறும்.