யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு தளர்வு

21deva.jpgயாழ்ப் பாணக் குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து இயல்பு நிலை ஏற்பட்டு வருதால் அதற்கு ஏதுவாக இரவு 11 மணிக்கு அமுல் செய்யப்படும் ஊரடங்குச் சட்டம் அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என பலாலி பாதுகாப்பு தலைமையகம் அறிவித்துள்ளது. இதுவரை யாழ்.மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு அமுல் செய்யப்பட்ட ஊரடங்குச் சட்டம் அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டு வந்தது.

யாழ்ப்பாணம் வந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து படைத்தரப்பினர் அதற்கு இணங்கி ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியுள்ளனர். இதேநேரம், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைக்கப்பட்டிருந்த சகல பாதுகாப்பு தடைகளும் நீக்கப்பட்டுள்ளதுடன் இந்த வீதியூடாக சகல வாகனங்களும் சென்று வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply to thevi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

23 Comments

  • Thalaiyaaddi
    Thalaiyaaddi

    மத்தியில் கூட்டாட்சி
    மாநாலத்தில் கூயாட்சி
    ஆனால் அந்தக் கட்சி இன்று தனது
    கட்சிச் சின்னத்தில் போட்டியிடக் கூடத் திராணியற்று நிற்கிறது

    தலையாட்டினத்துக்கு தகுந்த பாடம்

    Reply
  • thaya
    thaya

    பிரபாகரன் அரசியல் தீர்வுற்கு தலையாட்டி இருந்தால் பழரபாகரனக்கும் இந்த நிலை வந்திருக்காது.. தமிழ் மக்களும் நடுத்தெருவில் நிற்க வேண்டி வந்திருக்காது…. அரசியல் தீர்விற்கு ஆம் என்று தலையாட்டிய டக்ளஸ் போன்றவர்களின் பாதையே இறுதியில் வெற்றி பெறும். இருந்து பாருங்கள்.

    Reply
  • santhanam
    santhanam

    இவர்களையும் ஒடுக்கவேண்டும் அப்பதான் தமிழன் மானத்தோடு வாழலாம் யாழ்வணிகம் இவர் கையில் சனநாயகம் கதைக்கிறார்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அரசாங்கத்துடன் முறைப்புக் காட்டி தலையில் கோடலி வெட்டு வாங்கி தமிழ் மக்களையும் தெருவில் நிறுத்துவதை விட டக்ளஸின் பாதை எவ்வளவோ மேலானது.

    முப்பது வருடயுத்தத்தின் கோரத்திற்குள் அகப்பட்டிருந்த மக்களே தமது தலைவிதியை இனியாவது தீர்மானிக்க விடுங்கள். தாம் போகும் பாதை தவறென்றால் அவர்களே திருந்திக் கொள்வார்கள். நீங்கள் இங்கிருந்து எப்படியும் நக்கலடியுங்கள். புலியின் துரோகம் தமிழ்இனம் உள்ளவரை மறையாது.

    Reply
  • thaya
    thaya

    கோட்டை கொத்தளங்கள் என்றும் வான்படை கடற்படை தரைப்படை தற்கொலைப்படை என்று வைத்திருந்த புலிகளே இறுதியில் வெள்ளைக்கொடி பிடித்து சரணடைந்து கொல்லப்பட்டு விட்டார்கள். அரசாங்கத்தை எதிர்த்து டக்ளஸ் போன்றவர்களும் இந்த நிழலைக்கு ஆளாக வேண்டுமா?… முதலில் எமது போராட்ட வரலாற்றை பாரம்பரிய அரசியல் தலைரமையில் இருந்து ஆய்வு செய்து பாருங்கள். அனுபவம் வரும். அதிலிருந்து இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். அதற’;காக அரசாங்கம் செய்யும் அனைத்தையும் ஆதரிக்க வேண்டும் என்று அர்த்தமல். இதையும் கருத்தில் எடுத்து செயற்பட்டால் டகளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்க முடியும்!…..

    Reply
  • மாயா
    மாயா

    புலிகள் முள் வேலிக்குள் தம் மக்களை அடைத்தனர்.
    டக்ளஸ் அவர்களது வேலிக்குள்ளே வாழ வைத்திருப்பது பெருமை.
    கல்லில் மண்டையை மோதி உடைத்துக் கொள்ளும் மதி இல்லாதவகைவிட கல்லைச் சுற்றிப் போறவன் மதியுள்ளவன்.

    தவிரவும் டக்ளஸுக்கு இருக்கிற துணிவு பிரபாகரனுக்கு இருந்ததில்லை.
    பிரபாகரன் ஆகக் குறைந்தது சுனாமி நேரத்தில் கூட வெளியே வந்து மக்களுக்கு ஆறுதல் சொல்ல வராது பங்கரில் பதுங்கி நின்ற பயந்தாங் கொள்ளி. குப்பி கூட கடிக்காது சரணடைந்தவர். டக்ளஸ் உண்மையிலேயே வீரன். சாவை வென்றவனென்று டக்ளஸுக்கு பட்டம் கொடுக்கலாம். பிரபாகரன் சும்மா பம்மாத்து மட்டுமே.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லினங்களையும் பலமதங்களையும் கொண்டநாட்டில் ஒரு இனத்தின் பெயரிலும் மதத்தின் பெயரிலும் கட்சிநடத்துபவனும் அரசியல் நடத்துபவனும் இறுதியில் அந்த தேசத்தை அழிவுக்கே கொண்டு செல்வான். தமிழ்மக்கள் இதை அனுபவத்தால் கண்ட மறக்கமுடியாத உண்மை. காலத்திற்கேற்ப தேசியகட்சிகளுடன் கூட்டுவைத்து செயல்படுவதே நலிந்த தம்இனத்தை விடிவுக்கு இட்டுசெல்லும். பல எதிர்ப்புக்கு மத்தியிலும் இதை துணிகரமாகச் செயல் படுத்துபவனே! சிறந்த தொண்டனாகவும் தலைவனாகவும் மாறமுடியும். இதுவே தீயை மிதித்து நடத்துகிற போராட்டம்.

    Reply
  • BC
    BC

    //டக்ளஸுக்கு இருக்கிற துணிவு பிரபாகரனுக்கு இருந்ததில்லை.பிரபாகரன் ஆகக் குறைந்தது சுனாமி நேரத்தில் கூட வெளியே வந்து மக்களுக்கு ஆறுதல் சொல்ல வராது பங்கரில் பதுங்கி நின்ற பயந்தாங் கொள்ளி. குப்பி கூட கடிக்காது சரணடைந்தவர். டக்ளஸ் உண்மையிலேயே வீரன்.டக்ளஸ் உண்மையிலேயே வீரன். சாவை வென்றவனென்று டக்ளஸுக்கு பட்டம் கொடுக்கலாம்.//

    உண்மை தான் மாயா.டக்ளஸை கொல்ல பிரபாகரன் எவ்வளவு முயற்ச்சி செய்து பார்த்தார்.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    புலம்பெயர் நாடுகளில் ஒவ்வொரு அரசியல் ஆர்வலர்களுக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. சிலருக்கு இலங்கை தழுவி புரட்சி வரவேண்டும் என்பது ஒருவகை. சிலருக்கு தமிழர் தனிநாடு அமைத்து பிரிந்து போக வேண்டும் என்பது ஒருவகை. சிலர் தமிழர்கள் வர்க்கப் புரட்சியில் ஈடுபட்டு சோசலிசத்தை காணவேண்டும் – அதை சிங்கள பகுதிகளுக்கு விஸ்தரிக்க வேண்டும் என்பது இன்னொரு வகை. வேறு சிலர் ஏதோ ஜனநாயகப் புரட்சி தலித்தியம் என பல வகையினர் உலாவுகின்றனர். இதில் துயரம் என்னவெனில் இவர்களில் எவரும் மக்களோடு இல்லை. அவர்களின் நாளாந்த துயரங்கள் குறித்து எந்த வேலைத் திட்டமும் இல்லை. தேங்கிய குட்டையாய் ஓட்டமில்லாது நிற்கிறார்கள். அசைவற்ற இவர்களின் அரசியல் தமிழ் மக்களுக்கு ஒரு தொல்லையே. அந்த வகையில் டக்ளஸின் அரசியல் மேலானது. டக்ளஸ் போடும் பாதையில் ஒரு காலத்தில் இவர்கள் நடந்து போவார்கள்.

    Reply
  • rohan
    rohan

    //புலிகள் முள் வேலிக்குள் தம் மக்களை அடைத்தனர்.
    டக்ளஸ் அவர்களது வேலிக்குள்ளே வாழ வைத்திருப்பது பெருமை.//

    மொத்தத்தில் தமிழ் மக்கள் வேலிகளுக்குப் பின்னால் தான் என்பது தான் அவர்களது நிரந்தரத் தலை விதியா?

    தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட வக்கில்லாத டக்ளசுகக்கு துணிவாளர் என்ற பெயரா? யாரிடம் சொல்லி அழ?

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    “தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட வக்கில்லாத டக்ளசுகக்கு துணிவாளர் என்ற பெயரா? யாரிடம் சொல்லி அழ”

    முதலாவது இது 1983 காலப் பகுதியல்ல தமிழ மக்கள் சுதந்திர உணர்வோடு தமக்குப் பிடித்த அரசியலை மிக உற்சாகத்தோடு பங்குபற்றிய காலமல்ல.

    டக்ளஸை மட்டுமல்ல தமிழ் மக்களையும் கூனிக் குறுக வைத்திருப்பது பிரபாகரனின் போராட்டமே. இவ்வளவு வீராப்புக்கள் பேசி கடைசியில் தனது உயிருக்காக எதிரியிடம் காலில் விழ தயாராகி காட்டிக் கொடுத்த பிரபாகரனின் துரோகத்தை யாரிடம் சொல்லி அழ?

    Reply
  • accu
    accu

    றோகன் நன்றாக அழுங்கள் தோற்றவர்கள் அழுவதுதானே உலகநியதி. ஒன்றுக்குமே லயக்கற்றவனை தலைவனாக்கி அவன் மூலம் எல்லாமே சாதிப்போம் மற்றவர்களை வாய்பொத்துங்கள் என்று தசாப்த்தமாக பீற்றியவர்கள் இன்று அந்தக் கோழையின் முடிவையும் எம்மக்களின் இழிநிலையும் கண்டபின்பும் எந்தவித குற்றவுணர்ச்சியோ அன்றி வெட்கமோ இல்லாமல் மற்றவர்களை எழுந்தமானமாய் விமர்சிப்பதை நாம் யாரிடம் சொல்லி அழ?

    Reply
  • BC
    BC

    //vanthijathevan – டக்ளஸ் போடும் பாதையில் ஒரு காலத்தில் இவர்கள் நடந்து போவார்கள்.//
    டக்ளஸ் போடும் பாதையால் இவர்ககளே அல்லது இவர்கள் உறவினர்களே பயன் அடைவது நிச்சியம்.

    Reply
  • palli.
    palli.

    //றோகன் நன்றாக அழுங்கள் தோற்றவர்கள் அழுவதுதானே உலகநியதி//
    இல்லை அக்கு தோற்றவர்கள் அழுவது நியதியல்ல; அது அவர்கள் வெற்றிக்கான அனுபவம் என்பதுதான் நியதி, இதுக்கு உலகத்தில் பல உதாரனங்கள் சொல்லலாம்; அன்று வெலிகடையில் எம்மின வீரர்கள் கொலை செய்ய பட்டபோது தோற்று விட்டோமே என்று தமிழர் அழுதார்களா?? அதன் பின் எப்படி மிகபெரிய அமைப்புகளாக வெற்றி கொண்டனர் (ஆனால் இப்படிதான் புலிபோல் அமைப்பு உருவாகுமானால் அழுதே இருக்கலாமோ என பல்லி சிந்திக்கிறேன்) ரெலோவை புலி வெற்றி (வெறி) கொண்டபோது ரெலோ மட்டுமல்லாது தமிழினமே அழுது வடித்ததால் அதுவே புலிக்கு பலமாகி அந்த அபலமே இன்று தமிழருக்கு வினையாகி விட்டது; ஆக அவர்கள் அழ வேண்டும் என்பது எமது கருத்தாகாது; ஆனால் சிந்திக்க வேண்டும் திரும்பவும் கடைபோட நினைத்தால் அது பல்லியை அழிக்க வீட்டுக்குள் பாம்ப்பை விட்ட சரித்திரமாக போய்விடும்; அதேபோல் அவர்கள் தலமை தவறிய பின்னும் அவர்கள் தங்கள் தவறை புரியவில்லைஎனில் பல்லியும் அக்குவுடன் சேர்ந்து ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    றோகன்,
    தன்னைத் தானே தமிழர்களின் ஏகபிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு, பதுங்குகுழியே கெதியென வாழ்ந்தவர்களை வீரர்களாகப் பார்த்த உங்களுக்கு, புலிகளால் 14 தடவைகளுக்கு மேல் கொலை செய்ய முயன்றும் அதிலிருந்து தப்பி இன்றும் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்பவர்களைப் பார்த்தால் கோழைகள் போல்த் தான் தெரியும்.

    Reply
  • மாயா
    மாயா

    //rohan on June 26, 2009 8:54 am
    மொத்தத்தில் தமிழ் மக்கள் வேலிகளுக்குப் பின்னால் தான் என்பது தான் அவர்களது நிரந்தரத் தலை விதியா?
    தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட வக்கில்லாத டக்ளசுகக்கு துணிவாளர் என்ற பெயரா? யாரிடம் சொல்லி அழ?//

    தன் சொந்த வேலிக்குள் இருப்பது பெருமையே.
    தன் சொந்த பூமியில் இருப்பது பெருமையில்லையா?
    அடுத்தவன் முள்வேலிக்குள் தள்ளிவிட்ட புலி பினாமிகளுக்கு இதுவெல்லாம் எங்கே விளங்கப் போகுது?

    தமிழீழம்தான் முடிந்த முடிவு என்ற பிரபாகரன், திம்பு பேச்சு வார்த்தை வரை பின்னோக்கி வந்த துணிவை என்னென்று சொல்வது? உலகத்துக்கே பாடம் படிப்பிப்பதாக சொன்ன பிரபாகரன் உலகமே நாங்கள் சரணடைய தயார், எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள். ஆயுதங்களை கீழே வைத்துவிட்டோம் என வெள்ளைக் கொடி தூக்கிக் கொண்டு குப்பியும் இல்லாமல் சரணடைந்து மண்டையயை போட்ட முட்டாள்தன விவேகத்தை என்னென்று சொல்வது?

    சரி, உங்கள் தேசியத் தலைவரை எத்தனை பேர் நேரில் பார்த்திருக்கிறீர்கள்?

    டக்ளஸ் – சித்தார்த்தன் ஆகியோர் இவர்களையெல்லாம் விட மேல்தான். நாளைக்கு இவர்கள்தான் மக்களால் மதிக்கப்படப் போகிறவர்கள். பிரபாகரனை மதிக்கிறவன் மந்தையாக மட்டுமே இருப்பான். நிச்சயம் மனிதனாக இருக்க மாட்டான்.

    Reply
  • thevi
    thevi

    அது மட்டுமல்ல பார்த்திபன் சிறைச்சாலைக்கு சென்று புலிகளை சந்தித்து உதவ சென்ற வேளை புலிகள் அவரை கடுமையாக தாக்கி ஒரு கண்பார்வையையும் டக்ளஸ் இழந்துள்ளார். பின்னர் தாக்கியவர்களை அடையாளம் காட்டுமாறு நடந்த அணிவகுப்பிற்கு செல்லாமல் அப்புலிகளை காட்டிக் கொடுக்க மறுத்தவர் கோழைதான் என்று இவர்கள் சொல்லுவார்கள்.

    Reply
  • rohan
    rohan

    என்ன கொடுமை சார் இது?

    புலி வசை பாடாத காரணத்துக்காக எனக்கு எல்லோரும் சேர்ந்து புலிச் சாயம் பூசுகிறார்கள்!

    எனக்கும் புலிக்கும் என்ன தொடர்பு? யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்.

    Reply
  • thevi
    thevi

    மொத்தத்தில் தமிழ் மக்கள் வேலிகளுக்குப் பின்னால் தான் என்பது தான் அவர்களது நிரந்தரத் தலை விதியா?

    தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட வக்கில்லாத டக்ளசுகக்கு துணிவாளர் என்ற பெயரா? யாரிடம் சொல்லி அழ?

    தமிழ் மக்களை முள்வேலிக்கு பின்னால் தள்ளியது யார்? புலிகள்தானே!

    எல்லாவற்றையும் தனதுபிடியில் வைத்திருந்த புலி குறைந்த பட்ச தீர்வைத்தன்னும் பெற்றுக் கொடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?

    புலி தமிழ் மக்களை மாட்டிவிட்டு போய்விட்டது. அதை உணராமல் நீங்கள் ஏன் டக்ளஸை பார்த்து கோபிக்கிறீர்கள்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    // rohan on June 26, 2009 12:20 pm என்ன கொடுமை சார் இது?புலி வசை பாடாத காரணத்துக்காக எனக்கு எல்லோரும் சேர்ந்து புலிச் சாயம் பூசுகிறார்கள்! எனக்கும் புலிக்கும் என்ன தொடர்பு? யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள்.//

    உன்னை நீயறிவாயோ யாமறியோம். ஆனால் நாமறிவோம். உங்கள் வரிகள் எழுத்தில் தெரிகின்றன.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கொடுமை இல்லை ரோகன். “புலிவசை” என்பது என்ன?
    மனிதஉயிரை உயிர்களுக்கு மதிப்பளிக்காத போது அது வசையே!
    ஒரு இனத்தின் விடுதலைக்காக குரல்கொடுக்க முற்பட்ட போராளிகளை தனது கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அழித்தொழித்தது வசையே!!
    சகோதரனை சகோதரன் கொல்ல விட்டதும் வசையே!!!
    உலகஅனுதாபங்களை தேடுவதற்காக சேகரித்துக் கொள்வதற்காக ஒரு குடும்பத்தையே தூக்கி தொங்கவிட்டதும் வசையே!!!!
    இதுவெல்லாம் ஆககுறைந்த கணக்கே. இதற்கெல்லாம் ஏதோ ஒரு கற்பனையில் இருந்தவனை இருந்தவர்களை வசைபாடாமல் நாம் என்ன?சார் பண்ணமுடியும்?? புலிவசை பாடியே தமிழ்மக்கள் தமது வாழ்க்கை பயணத்தை தொடரமுடியும் அதாவது நான் ஈழத்தில் வாழ்வுதேடும் தமிழ்மக்களைச் பற்றிச்சொல்லுகிறேன்.

    Reply
  • accu
    accu

    //புலி வசை பாடாத காரணத்துக்காக எனக்கு எல்லோரும் சேர்ந்து புலிச் சாயம் பூசுகிறார்கள்//றோகன். தன்னை எதிர்த்தவர்களை விமர்சனம் செய்தவர்களை மட்டுமல்ல தன்னை நம்பியிருந்த அப்பாவி மக்களையே அழித்தொழித்த புலிகளை பற்றி எந்தவித விமர்சனமோ,பிழையோ சொல்லாமல் மற்றவர்களில் தவறுகளை தேடி அலையும் உம்மைப் போன்றவர்களை நாம் எப்படிக் கணிப்பது?

    Reply
  • rohan
    rohan

    / /தன்னை எதிர்த்தவர்களை விமர்சனம் செய்தவர்களை மட்டுமல்ல தன்னை நம்பியிருந்த அப்பாவி மக்களையே அழித்தொழித்த புலிகளை பற்றி எந்தவித விமர்சனமோ,பிழையோ சொல்லாமல் மற்றவர்களில் தவறுகளை தேடி அலையும் உம்மைப் போன்றவர்களை நாம் எப்படிக் கணிப்பது? //

    இப்படியே வெற்று வார்த்தை பேசிக் கொண்டிருப்பவர்கள் புதிதாய் என்னத்தைப் படைக்கப் போகிறார்கள்?

    Reply