ஈ.பி.டி.பி. தனித்தா, அரசுடன் இணைந்தா போட்டியிடும்- இரண்டொரு தினங்களில் முடிவு

21deva.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) போட்டியிடும் விதம் குறித்து இன்னும் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படுமென கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது அரசாங்கத்தின் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து கட்சிக்குள் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி அரசாங்கத்தின் தோழமைக் கட்சியென்பது தெரிந்ததே.

இவ்வாறான நிலையில் ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்னும் இரண்டொரு தினங்களில் மேற்படி உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் விதம்பற்றி அறிவிப்பாரெனவும் கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இறுதித் தினம் எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமையாகும். அன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இத்தேர்தல் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகரை சபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    ” ஈ “ ஐ கட்சியில வச்சுக்கொண்டு தனித்தா இல்லை இணைந்தா என தீர்மானிக்க இரண்டு நாள் வேணும் என்கிறியள்? ஒரு வேளை இனிமேல் “ ஈ” கோஷ்டியெல்லேம் இருக்கேலாது ஒண்டில் சேருங்கோ இல்லாட்டி இல்லாமல் போங்கோ எண்ட வோணிங் மண்டைக்க இடிக்குதோ?

    Reply
  • Ampalam
    Ampalam

    உமக்கு தெரியும் எப்படி சுழி ஓடுவது என்று ஓடி விளையாடும் எப்டி சரி உம்மை பாதுகாத்துக் கொள்ளும் பிறகு ஒரு வழிவகை வரும் தமிழர் உரிமைப்போர் தெடரலாம்.

    Reply
  • palli.
    palli.

    இதை இப்படி சொல்லலாமே; என்னும் இரண்டு நாளையில் மகிந்தவிடமோ அல்லது பஸிலிடமோ கேட்டு சொல்கிறேன்; அவர்கள் தான் நான் தனியாக காவடி எடுப்பதா.? அல்லது அவர்களுடன் கூடு தேர் இழுப்பதா என முடிவு செய்ய வேண்டும்; எது எப்படியோ மகிந்தா விலாஸ் எடுக்கும் முடிவு உறுதியானது இறுதியானது வெற்றியானதும்;

    Reply
  • மாயா
    மாயா

    தமிழ் பெயர்க் கட்சிகள் மட்டுமல்ல, இனி எந்த ஒரு இனவாத சிங்கள கட்சியும் இருக்கப் போவதில்லை. அது மகிந்தவின் அடுத்த கட்ட திட்டம். இனவாதப் பெயர் இருந்தால்தானே இனி இனிவாதம். சொல்லிப் பார்ப்போம். இல்லை, தட்டிப் போடுவோம். நல்ல திட்டம்.

    Reply