உலகை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் நோய் 76 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த நோயால் 35, 928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் 163 பேர் பலியாகியுள்ளனர்.
இங்கிலாந்தில் 1,226 பேரும், அவுஸ்திரேலியாவில் 1,823 பேரும் சீனாவில் 318 பேரும் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சல் நோய் தற்போது மொராக்கோ, மேற்கு கரை மற்றும் காசா கரையோரப் பகுதிகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
pandithan
பன்றிக்கச்சலை குணமாக்கும் மருந்து அதிக விலையாமே. அப்படியென்றால் இக்காச்சல் மருந்து வியாபாரத்திற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரணையுடந்தான் உருவாக்கப்பட்டதோ?
பரவாயில்லை- திறமான வியாபார தந்திரம்தான். உலக வர்த்தகம் எப்படியெல்லாம் முன்னேறுகின்றது. ஆச்சரியம்தான். –வாழ்க உலகம். வீழ்க மானிடம். வளர்க பன்றிகள்.