‘சல்வார்’ உடையணிந்து சபைக்குள் பிரவேசித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிர்காமநாதன் படைக்கள சேவிதரால் வெளியேற்றப்பட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று முதலீட்டுச் சபை திருத்தச் சட்டமூலம் மற்றும் வாழ்க்கை தொழில்சார் தற்காப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவகம் சட்ட மூலம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவ்வேளையில் வெளிர் மஞ்சள் நிற சல்வார் உடையணிந்தபடி தங்கேஸ்வரி எம். பி. சபைக்குள் வந்தார்.
அப்போது சபையிலிருந்த உதவி படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ, ‘பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக உடையணிந்து வந்துள்ளீர்களே, இந்த உடையுடன் சபையில் அமர முடியாது’ என்று தெரியப்படுத்தினார். இதனையடுத்து தங்கேஸ்வரி எம். பி. சபையிலிருந்து வெளியேறிச் சென்றார்.
ramesh
தங்கை தங்கேஸ்வரி தங்கநிற உடையுடன் வந்தது ஏனோ தம்பி பெர்னாண்டோவுக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது. அது ஏன் தம்பி? சேலை கட்டிய மாதரை நம்பினாலும், சல்வார் கமிஸியை நம்பாதே என்பது என்ன புதுமோழியோ?
பார்த்திபன்
ramesh,
என்ன செல்வி தங்கேஸ்வரி கதிர்காமநாதன் என்றவுடன் இளையோர் என்று நினைத்து விட்டீர்கள் போல. அம்மணி 60 ஐ தாண்டியவர். அவருக்கு வயசு ஏற ஏறத தான் இளமை திரும்பி ‘சல்வார்’ ஆசை வந்திட்டுது போல.