பல தசாப்த காலமாக தீவிரவாதத்தினால் துன்பப்பட்டு வந்த மக்கள் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதால் வீதிகளில் குழுமி ஆரவாரம் செய்தனர். அவர்கள் தற்போது முழுமையான சுதந்திர மனநிலையுடன் காணப்படுகின்றனர் என்று பிரதமர் ரத்தனசிறி விக்ரமநாயக்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபேதே பிரதமர் இதனைக் கூறினார்.
நாட்டை துரிதகதியில் அபிவிருத்தி செய்ய அரசாசாங்கம் ஆரம்பித்துள்ள அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலையைப்பாதுகாக்க அரசாங்கத்தால் மாத்திரம் முடியாது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் இந்தப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தீவிரவாதத்துடன் தொடர்புடைய சகல சக்திகளையும் அழிப்பதற்கு அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
msri
தீவிரவாதத்தடன் தொடர்புடைய சகல சக்திகளையும் அழிப்பதென்றால்!?> அப்போ ஆயுததாரி கருணா உட்பட்ட >எல்லா ஐனநாயக நீரோட்டக் கூட்டக்காரருக்கும் சொல்லுற மாதிரியெல்லோ இருக்கு!