குடியரசு தலைவர் உரை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது : திருமாவளவன்

07thirumavalavan.jpgகுடியரசுத் தலைவர் உரையில் சேது சமுத்திர திட்டம்,  இலங்கையில் தமிழீழ  மக்கள் படுகொலை உள்ளிட்ட பல விஷயங்கள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரம் தொகுதி  எம்.பி.யும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான தொல். திருமாவளவன் இன்று சிதம்பரம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  முன்னதாக சிதம்பரம் சுப்பிரமணிய தெருவில் உள்ள மன்மதசாமி காமுண்டி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை துவக்கினார்.

தொடர்ந்து அவர் இத்தொகுதிக்கு உட்பட்ட அண்ணாமலை நகர், லால்பேட்டை, காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று திறந்த வேனில்  வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்தார். இதனையடுத்து தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கடந்த 2ஆம் தேதி எம்.பி.யாக பதவியேற்ற நான், அனைத்து தேசிய  தலைவர்களை நாடாளுமன்றத்தில் சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றேன். புகழ் பெற்ற நேரு, அண்ணா போன்ற தலைவர்கள் இருந்த நாடாளு மன்றத்தில் மக்களுக்காக வாதாட நான் சென்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

ஏழைமக்களுக்கு கூரை இல்லாத வீடு வழங்கப்பட வேண்டும் என்பது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையாகும். தற்போது ஜனாதிபதி உரையில் ஏழை மக்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனை நான் வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் ஜனாதிபதி உரையில் சேது சமுத்திர திட்டம், இலங்கையில் தமிழீழ  மக்கள் படுகொலை உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.  குறிப்பாக சேது சமுத்திர திட்டம் பற்றி எந்த குறிப்பும் ஜனாதிபதி உரையில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Show More
Leave a Reply to DEMOCRACY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    கவிஞர் ராஜ மார்தாண்டன் மரணம்,இந்த செய்தியை எடுத்துப் போட்டவருக்கு கிடைத்த சமூக அங்கீகாரம்கூட(இளையாப்துல்லா),இறந்தவருக்கு(மார்தாண்டன்)கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்.தொல்.திருமாவளவன்,”முன்னதாக சிதம்பரம் சுப்பிரமணிய தெருவில் உள்ள மன்மதசாமி காமுண்டி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை துவக்கினார்”,இந்தக் கோணத்தில்(மன்மத ராஜனாக)செய்தியில் அடிப் படுவது ஏன் என்று தெரியவில்லை.திணமணி நிறுவனர் திரு கோயங்காவை தேர்தலில் தோற்கடித்த,”திருக்குறள் முனுசாமி எம்.பி.”,பெருந்தலைவர் காமராஜை தோற்க்கடித்த விருதுந்கர் பெ.சீனிவாசன்,தி.மு.க.வின் ஆட்சி செல்வாக்கையும் மீறி புதிதாக கட்சி துவங்கிய எம்.ஜி.ஆரின் முதல் வேட்பாளராக(திண்டுக்கல்)வெற்றிப் பெற்ற திரு.மாயத் தேவர்,ஜவர்கல்லால் நேருவுக்கு சமமாக பாராளுமன்றத்தில் ஆங்கிலம் பேசிய அண்ணா காலத்தில் எம்.பி.யாக இருந்த திரு.நாஞ்சில் மனோகரன்,ஆகியோரின் பிற்கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன்,நெஞ்சை ஏதொ நெருடுகிறது.துலாபாரம் படத்தின் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.நாம் தீபம் ஏற்றுவதே,இருளை நீக்குவதற்ககத்தான்,ஆனால்,அந்த தீப ஒளியிலும் நடுவில் கருப்பாக ஒரு நிழல்(இருள்)இருக்கும் அதாவது,இருள்தான் நிதர்சனம்,தீபம் ஒரு மாயையே!.காற்றினிலே…வெறும் காற்றினிலே..ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்…

    Reply
  • msri
    msri

    தலைவரின் அகால மரணத்தையே> உங்களால் எப்படி சொல்ல முடியவில்லையோ? அப்படியே அவர்களும் தாங்கள் செயவித்த் கொலைகளைச் சொல்லமாட்டார்கள்!

    Reply