பிரித்தானியாவில் தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

0706.jpgதமிழீழ தாயகத்தில் மாணவர்களின் கல்வி சிறிலங்கா அரசாங்கத்தினால் பறிக்கப்பட்ட நிலையில் அவர்களின குரலாக மாறியுள்ள புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் அவர்களுக்கு நீதி கிடைக்க உழைப்போம் என்ற உறுதியுடன் இன்று தமிழீழ மாணவர் எழுச்சி நாளை பிரித்தானியா நாடாளுமனற சதுக்கத்தில் முன்னெடுத்தனர். மாலை 3 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட எழுச்சி நிகழ்வில் பொன சிவகுமார் அவர்களின் உருவப்படத்திற்கும், தமிழீழத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மாணவர்களின் நினைவு படத்திற்கும் அங்கு கூடியிருந்த இளையோர் உட்பட அனைத்து மக்களும் மலர் செலுத்தினர்.

அதனைத் தொடரந்து ஐக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினால் பிரித்தானியா பிரதமருக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மக்கள் முன் வாசிக்கப்பட்டது. தடுப்பு முகாம்களில் வாழும் தமிழ் மக்களை ஜ.நா பொறுப்பேற்று அவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 24 மணித்தியால அடையாள உண்ணாவிரதத்தை இளையோர்கள் இன்று மதியம் 1 மணியளவில் ஆரம்பித்துள்ளனர்.

இதே நேரம் 20 ஆவது நாளாக மனிதநேயப் பணியாளர் ரிம் மாற்றின் அவர்கள் உன்னத உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார் இவருக்கு துணையாக 5 தாய்மார்கள் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்கின்றார்.  இறுதி காலப் போராட்டத்தில் வன்னி மக்களின் அவலத்தை பிரதிபலிக்கும் ஓவியக் கண்காட்சி தொடர்ந்தும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை பல வெளிநாட்டவர்கள் பார்ப்பதுடன் ஒவ்வொரு ஓவியங்களாக புகைப்படங்களும் எடுத்து வருகினறனர்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இவர்கள் தொடர்ந்து இப்படியான போலி ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்துவதை விட, அந்தச் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக தேவையான வழி வகைகளை மேற்கொள்ளலாமே. இதற்கு நிதி சேர்ப்பதற்கு வேண்டுமானால் மாதக்கணக்காக உண்ணாவிரதம் எப்படி சோர்வின்றி இருப்பது போன்ற, அதிசயத் தகவல் அடங்கிய வெளியீடுகளை வெளியிட்டு அதனை விற்பனை செய்தும் நிதி திரட்டலாம்.

    Reply