5ம் ஈழப் போரை விரைவில் பிரபாகரன் அறிவிப்பார்: நெடுமாறன்

07-nedumaran.jpgஅடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் பிரபாகரன் அறிவிப்பார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். “தமிழீழமும் நமது இன்றைய கடமையும்” என்பது குறித்த கருத்தரங்கு விழுப்புரத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவரது சொந்த மண்ணில் நலமுடன் உள்ளார். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அவர் அறிவிப்பார். இலங்கை ராணுவ முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் மின்சார வேலி அமைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மருந்துகள் கிடையாது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் திரும்புவது கிடையாது. இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்படாமல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்களுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும்.

ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், சர்வதேச பத்திரிகையாளர்கள் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்துள்ளனர். அண்டை நாடான இந்தியா வாய் திறக்கவில்லை. ஏன் இலங்கைத் தலைமை நீதிபதியே கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இருக்கும் உணர்வுகூட இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இல்லை என்றார் நெடுமாறன்.

Show More
Leave a Reply to xavier Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நெடுமாறன், வைகோ, இராமதாஸ் போன்றவர்களை இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல இந்தியத் தமிழர்களும் ஓரங்கட்ட வேண்டும். தம் சுயநலப் பிழைப்புகளுக்காக மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் இவர்கள் அடிக்கடி இப்படியான அறிக்கைகள் விடுவது வியப்பானதொன்றல்ல. தேர்தலில் மண்கவ்விய வைகோ, இராமதாஸ் போன்றோர் இன்னும் தமது இருப்புகளைக் காட்டிக் கொள்ள மாநில, மத்திய அரசுகளுக்கு எந்தளவு நெருக்கடி கொடுக்க முடியுமோ, அந்தளவு நெருக்கடி கொடுக்கவே முனைவார்கள். எனவே தமிழக மக்கள் இவர்கள் விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியதும் அவசியமாகும். இலங்கைத் தமிழர்களின் சார்பாக இவர்ககளுக்கு விடும் கோரிக்கை என்னவென்றால் “நீங்கள் யாரும் எமக்காக சுளகு எடுத்து விசிற வேண்டாம், தாமாக வரும் காற்றை எம்மை சுவாசிக்க விடுங்கள்” அது போதும் எமக்கு.

    Reply
  • xavier
    xavier

    i would like to ask mr nudumaran what evedence u got that prabhaharan still alive if u dont accept the reality we never forward and why u want 2 see him alive? what about 20 000 people sl aramy killed leave us alone we will fight when we need for that what we need now we resume our normal life

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    இந்திராகாந்தியின் எமர்ஜென்சிக்குப் பிறகு,தி.மு.க.ஆட்சிக்காலத்தில்,சென்னைக்கு வந்த இந்திரகாந்தியின் ஜீப்பில் பக்கத்தில் நின்றவர்(காங்கிரஸ் தலைவராக) பழ.நெடுமாறன்.ஒரு தி.மு.க. தொண்டர் இந்திராகாந்தியைநோக்கி கத்தியை வீசிய போது,அதை ஒரு டவலால் தடுத்து,அவரைக் காப்பாற்றியவர் பழ.நெடுமாறன்.நான் அரைக்கால் சட்டை அணிந்த சிறுவனாக இருந்த போது,ஷவரம் செய்யப்படாத “வெள்ளை நிற” தாடியுள்ள முகத்துடன் “பிரபாகரன்” என்று கூறிய அதே வாயால்,இன்றும் உறுதி தளராத மனதுடன்,அதே திசையில் சிந்திக்கும் உங்கள் உறுதியான கிழட்டுப் புலி மனதிற்கு நான் தலை வணங்குகிறேன்.

    Reply
  • msri
    msri

    “இயேசு சீவிக்கின்றார்” என்கின்ற மதப் பிரிவினர்>தமிழகத்தில் தங்கள் அமைப்பிற்கு ஓர் நல்லதொரு பிரச்சாகரனை தேடுகின்றனர்! நீங்கள் விண்ணப்பித்தால்>நேர்முகப் பரீட்சையின்றியே தெர்ந்தெடுக்கப் படுவீர்கள! நீங்கள் நிச்சயம் இருக்கவேண்டிய இடம் அங்கேதான்!

    Reply
  • palli.
    palli.

    ஜயா அடுத்த கட்ட போராட்டத்தை பிரபாகரன் அறிவிப்பார்; மிக்க மகிழ்ச்சி; அப்படியானால் இதுவரை ஆயிரகணக்கில் பலி கொடுத்தோ அல்லது காவு எடுத்தோ நடந்தது பல்லி சொல்வது போல் கரகாட்டமா? சொந்த மண் எங்கள் சொந்த மண் அது எது என்பதுதான் இன்றய கேள்வி மட்டுமல்ல பலரது கேலியும் கூட:

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    msri,
    நெடுமாறன் பிறகு பழக்க தோசத்தில் யேசு பெத்தலகேமில் தான் மறைந்து வாழ்கின்றார் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது??

    Reply
  • joseph
    joseph

    msri please think before you write things, this is christian country and we christian insult by you.

    Reply