யுத்த வலயத்தில் கடமையாற்றிய மருத்துவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மருத்துவப் பேரவையின் தலைவர் டொக்டர் யோர்மன் பிளெச்சர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
வன்னிப் பகுதியில் கடமையாற்றிய மூன்று மருத்துவர்களில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்றையவர் எங்கு இருக்கின்றார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை எனவும் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த மருத்துவர்கள் சட்டத்தரணிகள் ஊடாக தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதிலும் மருத்துவ சேவைகளை ஆற்றி வரும் மில்லியன் கணக்கான மருத்துவர்களின் சார்பில் இலங்கை அரசாங்கத்திடம் தாம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது மனிதாபிமான விவகாரம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாயா
இவர்கள் செய்த சேவையை பாராட்ட வேண்டும்.
அவர்கள் உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்.
பிரபாகரன் செத்த பிறகும், தலைவர் செத்துட்டாரே? என்று கேட்டாலே துரோகியென்று சொல்லிப் போடுற சனம் புலத்தில மட்டுமா? கலைஞரே பயப்படுறாராம். வாக்குகளுக்கு குந்தகம் வந்திடும் என்று… இனி இந்த டாக்குத்தர்மார் நிலை உணரேலாதோ?