தமிழ் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றும் கருத்து குறித்து கவலைப்படவில்லை – ஸ்ரீ காந்தா பா.உ.

srikanthaa.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென கூறப்படும் கருத்துகளையிட்டு நாம் கவலைப்படவில்லையென அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; பாராளுமன்றத்திலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற முடியுமென்று எவராவது நம்பினால் அந்த அரசியல்வாதிகள் இலங்கையின் சாசனத்தைப் படித்து பார்ப்பது நல்லது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பொறுத்த மட்டில் நாம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து எமது மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றோம். எமது வெற்றி தொடர்பாக தரக்குறைவான அரசியல் விமர்சனங்களை இப்போது முன்வைப்பவர்கள். யாழ். குடாநாட்டில் 1994 மற்றும் 2000 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் என்ன நடைபெற்றது என்பதை தயவுசெய்து நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

அது ஒருபுறம் இருக்க அரசியல்சாசனத்துக்கு விரோதமாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது செயற்பட்டிருந்தால், அதற்கான ஆதாரங்கள் முதலில் சமர்ப்பித்து சட்டரீதியாக சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமே தவிர, கூட்டமைப்பை கூண்டோடு பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றமுடியாது.

எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவிருந்தாலும் கூட அந்த விவகாரம் நீதி மன்றத்திலேயே முடிவு செய்யப்பட வேண்டிய விடயமாகும். எனவேதான் கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றவேண்டுமென கூறப்படும் கருத்துகளையிட்டு நாம் கவலைப்படவில்லை என்றார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    விரைவில் வரப்போகும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களே இவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள், அதற்குள் ஏன் மற்றவர்கள் அவசரப்பட வேண்டும்.

    Reply
  • Constantine
    Constantine

    No .. They will join with the winning party… Thats history.

    Reply
  • msri
    msri

    மகிந்தா உஙகளையல்ல> எல்லாக் கட்சி அமைப்புக்களையுமே இல்லாதொழிக்கப் போகின்றார்!
    மகிந்தா இன்னொரு புலியாகியுள்ளார்!> இதனூடே அரசபயங்கரவாதத்தின் கோரத்தாண்டவத்தை நாட்டுமக்கள் அனுபவிக்கப் போகின்றனர்! சொல்லில் தார்மீக-ஐனநாயகம்! நடைமுறையில் பாசிச சர்லாதிகாரமே! இதற்குப் பெயர்தான் மகிந்த சிந்தனை! எதர்காலம் தனிநபர் தனிக்கட்சி ஆட்சிமுறையே இலக்கு:> இதற்கு டக்களசு +கருணா+பிள்ளையான்கூட்டம ரெடி? நீங்கள் என்ன செய்ய உத்தேசம்? இனி எதற்கும் கவலைகொள்ளமாட்டோம் என சொல்லிக்கொண்டு இருக்கலாமோ?

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    dear msri you are wright
    mahindha = pirabhakaran
    srilanka= cemetery

    Reply