வட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே, யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமென அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடும். யாழ்ப்பாணத்தில் மட்டும் வாக்களிப்பு இடம்பெறுமாயின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்பதாலேயே இம் முடிவினை மேற்கொண்டுள்ளோம்.
இதேவேளை, வவுனியா நகரசபையில் நாம் போட்டியிடவுள்ளோம். இதற்கான வேலைகளை எமது அமைப்பாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம். தற்போது வடபகுதி மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ள நிலையில், இந்த உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையில்லை. எனவே இத்தேர்தலை காலம் தாழ்த்தி நடத்துமாறு நாம் கேட்கின்றோம்.
அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் குழப்பத்தின் மத்தியில் உள்ளமையினால் தற்போது இத் தேர்தல் வரவேற்கக் கூடியதல்ல. முதலில் இடம் பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றி அவர்களது அச்சத்தை போக்கிய பின்னர் தேர்தலை நடத்துவதன் மூலம் சுதந்திரமான தேர்தலை மேற்கொள்ளலாமென்றார்.
chandran.raja
வடபகுதியில்லிருந்து யரர்இந்த தமிழ்முஸ்லீம் மக்களை துரத்திவிட்டவர்கள்?.யார் அவர்களை வரவேற்று நேசக்கரம் நீட்டி அரவணைத்தவர்கள். இந்த பத்தொன்பது வருடத்து அஞ்ஞான வாசத்தையும் அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கவேண்டும் அதற்கு இந்த தேர்தல் களம் அமைத்துக் கொடுக்கும்.அவர்கள் திரும்பவும் தமது குடியிருந்த வாழ்ந்த தொழில் செய்ய சுலபமாக திரும்புவதற்கும் வழிசமைக்கும்.
காசன்அலியின் கோரிக்கை நியாமானது மட்டுமல்லாமல் ஐக்கியப்பட்ட இலங்கைக்கும் பெரியதொரு உந்துசக்தியையும் கொடுக்கும். உடனடியாக அவர் வேண்டுகோள்களை நிறைவேற்றி ஆவன செய்யப்படவேண்டும். அதிக கவனம் செலுத்தி முழுமூச்சுடன் செயல்படுத்த வேண்டும். யாழ்பாண இந்துக்களைப் பற்றி “அப்படியும் இப்படியும்” ஒரு கதை இருக்கிறது அல்லவா..? அந்த பாவங்களை கழுவிக்கொள்ளவும் இதையொரு சந்தர்ப்பமாக பயன்படுத்த முடியும்!.
சாந்தன்
ஹசன் அலியின் கோரிக்கை மிக மிக நியாயமானது. முஸ்லிம்கள் வாக்களிக்க அவரவர் வாழுமிடத்திலேயே வாக்களிப்பு நிலையங்கள அமைத்துக்கொடுக்க வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய் அவர்களை இந்த 15 வருடங்களின் பின்னர் (யாழ் மாவட்டம் இராணுவக்கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர்) குடியேற்றி வாக்களிக்கவைப்பது இன்னும் நல்லது.
இது பாலஸ்தீனத்தினை விட்டு வெளியேற்றப்பட்டு உலகின் பல நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் பாலஸ்தீனர்கள் காசா, மேற்குக்கரை தேர்தல்களில் வாக்குரிமையும் மீழக்குடியேறும் அனுமதியும் கோரும் செயலுக்கு ஒப்பானதும் கூட. அதேபோல வன்முறையினால் புலம்பெயர்ந்து உலகின் பாகங்களில் வாழும் முழுத்தமிழர்களும் வடகிழக்கில் நிகழும் தேர்தல்களில் வாக்குரிமை வழங்கப்படவும் வேண்டும். பாலஸ்தீன நட்புறவுச்சங்கத்தின் தலைவரான ஜனாதிபதி இதையும் கருத்திலெடுப்பார் என நினைக்கிறேன்!
chandran.raja
//புலம்பெயர்ந்து உலகின் பாகங்களில் வாழும் முழுதமிழர்களும் வடகிழக்கில் நிகழும் தேர்தல்களில் வாக்குரிமை வழங்கப்படவேண்டும்.// சாந்தன்
ஈழத்தமிழரின் கடந்தகால அவலங்களுக்கு புலிகள்மட்டும் காரணமாக இருக்கவில்லை பெரும் பகுதியை புலம்பெயர்தமிழர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தக்கருத்தை நான் மட்டும் சொல்லவில்லை. ஏராளமான “தேசம்நெற்”வாசகர்கள் கருத்துச் சொல்லி ஆயிற்று.
புலம்பெயர்தமிழரின் அரசியல்-சமூகஉறவுகள் வெவ்வேறானவை. ஈழமக்கள் யுத்தம் இல்லாத நாட்டில் ஐக்கியப்பட்டே வாழ விரும்புகிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் கடந்தகால அரசியலில் தமது அறிவை தீயகாரியங்களுக்கே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அவர்கள் சுயநலமிக்க தாயநோக்கு கொண்ட பிறவிகள்.இவர்கள் ஈழமக்களின் அரசியல் வாழ்வில் தலையிடுவதற்கும் உரிமைகொண்டாடுவதற்கும் அருகதையற்றவர்கள். இவர்கள் ஈழமக்களுக்கு துன்பம் விளைவிற்பவர்களாகவே இருப்பார்கள்.