முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அண்ணா அறிவாலயத்தில் அவர் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.
இன்று காலை பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் பின்னர் அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு அவரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரிசையில் நின்று சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
msri
உங்களின் 86- வருட அரசியல் வாழ்வின்> இவ்வாணடில் தொப்புள்கொடி உறவுகளுக்காக> மாபெரும் உண்ணா நோன்பிருந்து (இருமணிநேரம்) யுத்த்நிறுத்த்ததை ஏற்படுத்தி> மாபொரும் மனிதப் படுகொலையில் இருந்து தமிழ்மக்களை காப்பாற்றியவர்கள் நீங்கள்?! இது சரித்திரத்தில் (தமிழ்மக்கள்) பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்! உங்கள் இச்சேவையை உங்கள் கூட்டாளிகளுடன் செர்ந்து தொடர்ந்து முன்னெடுங்கள்! மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்!
palli
தமிழனாய் வாழ்த்த பல்லிக்கு தகுதி இல்லை;
தமிழனாய் வாழ்த்து பெற தங்களுக்கு தகுதியே இல்லை
;பல்லி
பார்த்திபன்
கலைஞரே, தங்கள் 86 வது அகவை கண்டு மனம் புளங்காகிதம் அடைகின்றது. மனமார வாழ்த்துகின்றேன், தாங்கள் நலத்தோடு பல்லாண்டு வாழ்கவென. தங்கள் காலத்திலேயே எங்கள் இலங்கைத் தமிழர்கள் பிரைச்சினை தீரவேண்டுமென ஆர்வமாய் உள்ளவர்களில் நானும் ஒருவன். தங்களைப் போற்றுவோர் போற்றட்டும் , தூற்றுவோர் தூற்றட்டும். ஆனால் தங்களுக்குத் தெரியும் எதை எப்படிச் செய்ய வேண்டுமென்று. எனவே தங்களால் முடிந்தளவு மத்திய அரசு மூலமாக இலங்கை அரசிற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்து ஒரு நியாயமான தீர்வை பெற்றுத் தர முயற்சியுங்கள். தற்போது அதற்கான நேரமும் காலமும் சேர்ந்து வந்துள்ளன.