இலங்கையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயல்பட்ட தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி வெள்ளியன்று முதல் தடவையாக கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட தயா மாஸ்டர் நீதவானின் அறைக்குள் ரகசியமான முறையில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி தயா மாஸ்டர் மற்றும்விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்டர் எனப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்னம் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாயா
சூரியதேவன் நிலையை பார்த்தவர்தானே, உளறிக் கொட்டியிருப்பார். இவரோடு தொடர்பில் இருந்தவர்கள் அவதானம்.
sekaran
அவர் இனி எல்லாம் முடிந்துவிட்டது என்கிற உண்மையை உணர்ந்திருக்கவேண்டும். மனசுக்குள் ஒருவேளை இன்னும் மெல்லிசாய் ஏக்கம் இருக்கும் (ஈழம் வந்திருக்கக்கூடாதா?) என்றே நம்புகிறேன். ஆனாலென்ன சரணடைந்தவரை போட்டு மிதிப்பதா? அவர் மட்டுமல்ல லட்சக்கணக்கான மற்றும் மக்களையும் மனிதநேயத்துடன் நடத்தவேண்டும். செய்வார்கள் என்று நம்பிக்கை இருககிறது.
chandran.raja
பொதுநோக்குடன் மக்களின் தேவைக்காக செயல் பட்டவர்கள் மரியாதைக்குரியவர்கள் அவர்கள் யாரும் தவறு செய்யமாட்டார்கள் என்று யாரும் செல்லிவிடமுடியாது. தவறுகள் அவர்கள் நோக்கங்களை அவர்கள் கொண்ட இலட்சியங்களை சிதைக்கும் போது மேலும் மக்களுக்கு துன்பத்தின்மேல் துன்பங்கள் விளைவிக்கிற போதும் தங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொள்ளாதவர்களை எப்படி?வரையறுக்கமுடியும். அப்படியானால் அவாகள் நோக்கம் வேறானவை அல்லவா!
இலங்கையின் சமூகபொருளாதர நிலமைகளுக்கு அப்பால்பட்டு வாழ்தவர்களாலேயே அதாவது புலம்பெயர்ந்த கணிசமான தமிழ்மக்களாலே புலிஇயக்கம் மிருகபலத்துடன் வளர்ந்து வந்தது இல்லையேல் ஓர்யிருவருடங்களில் அழிக்கப்பட்டிருக்கும் இலங்கை இவ்வளவு அவலங்களை சந்திக்க நேரிட்டிருக்காது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும். ஆகவே புலிதலைமை அழிந்தது புலிஇயக்கம் அழித்தெழிக்கப்பட்டது. விதிவசமாக அவர்களுடன் இணைந்தவர்கள் தொடர்புகொண்டவர்கள் சகலரும் மன்னிக்கப்பட வேண்டும் புதுவாழ்வு அளிக்கப்படவேண்டும் அதுஒரு அரசுடைய கடமையும் கூட.
palli
பாராட்டுக்கள் சந்திரா இதுதான் மனிதநேயம்;
பார்த்திபன்
சந்திரன்,
உங்கள் கருத்துடன் நான் முழுவதுமாக உடன்படுகின்றேன். அதே போல அந்த வைத்தியர்களும் இதுவரை தாம் வைத்திருந்த புலிப்பாசத்தை புறந்தள்ளி, அவதிக்குள்ளாகியிருக்கும் அந்த மக்கள் மீது பாசம் வைக்க வேண்டும்.