13 ஆவது திருத்தச் சட்டத்தி்ன் கீழ் அரசியல் தீர்வுக்கு முயற்சி – டக்ளஸ் தேவானந்தா

douglas.jpgஇனப் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்பட்டு, அதனை அரசியலமைப்பில் சேர்ப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான பாராளுமன்ற சூழல் தற்போது இல்லை. ஆகவே ஏற்கனவே உள்ள 13 ஆவது அரசியலமைப்;புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே சிறந்தது, இந்தத் திருத்தம் ஏற்கனவே இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கின்றது. அத்துடன், இந்தியாவின் உதவியோடு கொண்டு வரப்பட்ட இந்தத்திருத்தச் சட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவும் உண்டு. எனவே இந்தத் திருத்தச் சட்டத்தி்ன் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே இப்போதுள்ள ஒரேயொரு வழியாகும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணம் விடுதலைப்புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டதும், அங்கு உள்ளுராட்சி சபைகள் மாகாண சபை என்பவற்றிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு. அங்கு சிவில் நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இதேபோன்று வடக்கிலும் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to thevi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • M.Rajan
    M.Rajan

    வவுனியா அகதி முகாமில் போய் கேட்டுப்பாருங்கள் . 13வது திருத்தச் சட்டம் வேண்டுமா? அல்லது தேர்தல் வேண்டுமா? என்று. சனம் சொல்லும் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி எண்டு.

    Reply
  • R.M.V
    R.M.V

    மனதில் மக்கள் நலன்

    Reply
  • thevi
    thevi

    பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என சொல்லும் நிலையில் மக்கள் இல்லை. ஏதாவது தட்டில் போடுங்கள் சாமி சற்று கால் நீட்டி உடகார விடுங்கள் என்றுதான் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பில்லை சீமைக் கனவான்களைப்போல்!

    Reply
  • அனோஜன்
    அனோஜன்

    டக்ளசுக்கு 13 மனப்பாடம்.
    இதையே சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு.
    புதுசா ஏதாவது சொல்லுங்கோவன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அனோஜன்,
    அப்ப எனி 12+1 எனச் சொல்லச் சொல்லுகின்றீர்களா??

    Reply
  • accu
    accu

    //டக்ளசுக்கு 13 மனப்பாடம்.
    இதையே சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு.
    புதுசா ஏதாவது சொல்லுங்கோவன். // அனோஜன் புதுசா 13 ஆமியை 1983ல் போட்ட மாதிரி போட்டுத் துவங்குவமா?

    Reply
  • கிருபா
    கிருபா

    தொந்தரவு இல்லாமல் இருக்க இன்னும் ஒரு கூட்டம் அழிய வெணும்.

    Reply