புலிகள் எனும் அமைப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறானதொரு அமைப்பு இங்கில்லையாகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளியேறவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இங்கே ஓர் புதிய அத்தியாயம் திறக்கப்பட்டுள்ளது. அவ்வத்தியாயம் புலிகள் இல்லாததோர் அத்தியாயம். புலிகள் இல்லாத புதிய அத்தியாயத்தில் தமிழ் கூட்டமைப்பினருக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
msri
அப்ப சங்கரியார்> “புதுஅத்தியாயம்” ஒன்றின் நாயகன் ஆகின்றார்! ஒருவர் வடக்கின் புதுவசந்தம்! மற்ற இருவர் கிழக்கின விடிவெள்ளிககள்! நீங்கள் புது அத்தியாயம்! உங்கள் வசந்தம்>விடிவெள்ளி> அத்தியாயம் எல்லாம்! மகிந்தாவின் பாதாரவிந்தத்திற்கே> சமர்ப்பணமாகும்! இதுக்கு ஒரு புதிசு தேவையோ?
சாந்தன்
புதிய அத்தியாயங்களுக்கெல்லாம் புதுப்புது மனிதர்கள் தேவை எனின் நீங்கள் மட்டும் காட்சி மாறியபோதெல்லாம் கட்சி மாறி (LSSP, TC, FP, TULF) கட்டிலேறவில்லையா? நியாயமாகப் பார்த்தால் 40 வருடங்களின் முன்னரே உங்களுக்கு செய்ய ஒன்றுமில்லாமல் உங்களின் தேவையும் இல்லாமல் போய்விட்டது!
vanthiyadevan
please silent your mouth
you dont have anything to speak about tamils
you never ever have a policy about tamils
you always think about your haelth & wealth
nallurkantha
Tamils(Jaffna) should learn first how to think rationally.Dont insult others.Mr.Sangareee was the president of TULF.he had the courage to spk his conscience.Critizising LTTE and TNA has been a great aservice.Why you people worship a group of murderers which brought disaster to Tamils in Sri Lanka.
Tamilan
இலங்கையில் புது அத்தியாயம் என்று நீர் கூறும் அதிலே பழசாகி பக்ரீரியா பிடித்து புளித்து தமிழர் அரசியலில் பழசான உணவான கூட்டணிக்கும் உமக்கும் தான் என்ன வேலை. உங்களால் இலங்கைத் தமிழருக்கு அரசியல் ரீதியாகவோ அன்றி இன உணர்வு ரீதியாகவோ ஊட்டச்சத்துள்ளதாக எதையும் செய்யமுடியாது. உம்முடைய அவசரம் தமிழர்களுக்கு புரியாததில்லை உம்முடைய உம் சொத்தில் கடந்த காலங்களில் கரைந்ததை இப்ப பிடிக்க பார்க்கிறிர் சங்கரி. தமிழர்பற்றி சிங்களவர் கூட கதைப்பதை தமிர்கள் அனுமதிக்கலாம் ஆனால் தமிழர் எதிர் காலம் பற்றி தமிழ் கூட்டணியும் குறிப்பாக எம்மக்கள் இரத்தமும் சதையுமாக வன்னியில் அழிந்த போது எங்கேயிருந்திர்?
நீர் தமிழர் பற்றிக் கதைக்க அருகதை இல்லாதவர். அன்புத் தமிழ் மக்களே மீண்டும் மீண்டும் எம்மீதும் தாம் ஆனந்தமாய் வாழ எம்மை அடகுவைக்கும் சங்கரி போன்றவர்களை அடையானம் கண்டு எதிர்கால தமிழர் அரசியலில் இருந்து இவர்களை அப்புறப்படுத்த வேண்டியது தமிழர்களாகிய அணைவரதும் கடமை.
தமிழர்களுக்கு புதிய அத்தியாயம் படைக்க நாம் இந்த பழய பொருட்களை கலந்து சமையல் செய்து புதிய படையல் செய்ய முனைந்தால் நன்றாக இருந்தவையும் இவற்றுடன் சேர்ந்து கெட்டுவிடும் என்பது ஆறறிவுள்ள யாருக்கும் நான் சொல்லித் தெரியத் தேவை இல்லை.
அன்புடன்
தமிழன்
palli
ஜயா அழிவது அழிக்கபட்டது தங்கள் மவட்டம் என்பதையாவது சிந்தித்தீர்களா?? உங்களுக்கு கோபம் புலி மீதா அல்லது உங்களை வணங்காதவர்கள் மீதா?? கூட்டமைப்பை கூத்தமைப்பென முதல் முதல் பல்லிதான் எழுதினேன் என நினைக்கிறேன்; இருப்பினும் ஒரு தமிழர் அமைப்பு இலங்கையில் வேண்டுமெனில் தற்போது அந்த கூடமைப்புடன் கூடிய அங்கு வாழும் தமிழர்தான் வேண்டும், டக்கிளஸும் கட்ச்சியை தேசிய நதியில் கலந்து காப்பி ஆத்த தயாராகி விட்டார்; உங்களை பொறுத்த மட்டில் தலை கால் கை எல்லாமே உங்கள் அமைப்புக்கு நீங்கள்தான்; அதை விட மகிந்தா குடும்பத்தின் குணசித்திர நடிகர் தாங்கள்;
உங்களை பொறுத்த மட்டில் கூட்டமைப்பு தமிழருக்கு செய்த துரோகத்துக்கு அமைப்பை காலி செய்து விட்டு விவசாயம் செய்ய வேண்டும்; உன்மைதான் பல்லியும் அதை ஏற்று கொள்கிறேன்; ஆனால் தாங்கள் தமிழருக்கு செய்த துரோகத்துக்கு தமிழர் இல்லாத நாடாக பார்த்துநாடு கடத்தபட வேண்டும்; அல்லது இருக்கவே இருக்கு அண்ணானகர் ரீ கடை;