திமுகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது:காங்கிரஸ்

manmohan_soniya.jpgமத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.

காங்கிரசுடனான இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்,  காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக டி.ஆர்.பாலு அறிவித்தார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்,  ’’அமைச்சரவையில் திமுகவின் எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமானது.  அதனால், திமுகவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • palli.
    palli.

    அம்மா இது இத்தாலியல்ல. திமுக நல்லதோ கெட்டதோ தமிழக பிரதநிதிகள். இப்படி எடுத்து எறிந்து பேசுவது நல்லதல்ல. தமிழ்நாடு இல்லாத மத்திய அரசு அச்சாணி இல்லாத வண்டி என சொல்வது பல்லியல்ல சொன்னது உங்க மாமியாரின் அப்பாவும் உங்க கணவரின் தாத்தாவும் மறக்க வேண்டாம்.

    Reply
  • msri
    msri

    மத்தியில் கலைஞரின் உதவியின்றி காங்கிரசால் ஆட்சி நடாத்த முடியும்! ஆனால் காங்கிசின் உதவியின்றி கலைஞரால் மாநிலத்தில் ஆட்சி நடாத்தமுடியாது! இதை காங்கிரசு கண்க்கில் எடுத்தது!> கலைஞர் கேட்ட பதவிகளை மறுத்ததது! இது பாராளுமன்ற ஆட்சியின் சர்வவியாபகப் பண்பு!

    Reply
  • T RAMAN India
    T RAMAN India

    வடக்கு வாரிவிட்டது, தெற்கு தேம்புகிறது !

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நிச்சயம் திமுக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும். கலைஞர் எப்படியும் தன் சாணக்கியத்தால் சாதிப்பார். பொறுத்திருந்து பாருங்கள்.

    Reply
  • rohan
    rohan

    உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் கருணாநிதி இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி வந்திருக்கிறது. இடையில், திமுக கேட்ட அமைச்சுப் பொறுப்புகளும் கிடைக்கும் என்றும் தெரிகிறது. கருணாநிதியா கொக்கா?

    Reply