கேட்ட அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் தர மறுத்ததால், அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தர திமுக இன்று இரவு அதிரடி முடிவை எடுத்தது. திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை ஒதுக்குவதி்ல் சிக்கல் ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் தரும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்தி வைத்துவிட்டார்.
தாங்கள் கேட்கும் அமைச்சர் பதவிகள், துறைகளைத் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரப் போவதாகவும் காங்கிரசிடம் திமுக கூறிவிட்டது. இதையடுத்து சிக்கலைத் தீர்க்க தீவிர பேச்சு வார்ததை நடந்து வந்தது
palli.
மகனுக்கு பதவி ஒகே.
மகளுக்கு பதவி ஒகே.
அப்புறம் என்ன பிரச்சனை ஓஒ பேரனுக்கு விளியாட அமைட்டர் பதவி தரவில்லையா? அப்ப அதிருப்தி கொள வேண்டியதுதான். நீர் எல்லம்
ஒரு தமிழின தலைவன் ……………..
msri
மொத்த மந்திரிசபையில் மூன்றில் ஒரு பகுதியளவு மந்திரிப்பதவி கேட்கின்றார் கலைஞர்! இது தமிழக முன்னேற்றத்திற்கா? அல்லது குடும்ப முன்னேற்றத்திறகா? தமிழ் + தமிழ் இனத்தலைவர் எல்லாம் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டதே! தென்னாசியாவின் மிக்ப்பெரும் தனவநதர்களில் கலைஞம் ஒருவர்!
பார்த்திபன்
msri,
இந்திய அமைச்சரவையில் பிரதான அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் என்று கிட்டத்தட்ட மொத்தமாக 80 பேர்களைத் தாண்டும்