இலங்கை வந்துள்ள ஐ.நா. வின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி விஜே நம்பியார் இன்று வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். அத்துடன். இலங்கை அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தையும் விமானத்தில் சென்று பார்வையிட்டார். பயங்கரவாதம் தேற்கடிக்கப்பட்ட பின்னர் இறுதி மோதல்கள் இடம்பெற்ற பிரதேசத்தை பார்வையிட்ட முதலாவது வெளிநாட்டுப் பிரதிநிதி இவராவார்.
இன்று காலை வவுனியாவில் மெனிக்பாமில் உள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்துக்குச் சென்ற விஜே நம்பியார் அங்குள்ள இடம்பெயர்ந்தோருக்கு அரசு வழங்கியுள்ள வசதிகளை நேரில் பார்வையிட்டார்.
இடம்பெயர்ந்தோருக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரியான் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி அவரை அங்கு வரவேற்றார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து வீ. நம்பியார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
palli.
பெயருக்கேற்ற வில்லதனம். ஆனால் எம்மினத்தை பொறுத்த மட்டில் கதாநாயகனாக யாருமே எம்ஜிஆர் ஆக இல்லை. ஆக எல்லாமே நீங்கள்தான் பார்த்துநட ஜயப்பா பிணகுவியல் தடக்கும் ஜயப்பா.