இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடந்த மோதல்கள் காரணமாக இதுவரை 265,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் சரியான நிவாரணங்கள் மற்றும் சரியான கட்டுமானங்களின்றிப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக யூ.என்.எச்.சீ.ஆர். பேச்சாளர் ரொன் ரெட்மொன்ட் கூறினார்.
KUNALAN
//இதுவரை 265 000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக//
145 674 (ஒருலட்சத்து நாற்பத்தையாயிரத்து அறுநூற்றி எழுபத்திநான்கு) சிவிலியன்கள் மட்டுமே மீட்கப்பட்டதான குறிப்பு கடந்த ஒருவாரகாலமாக அரச இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 17ம் திகதியும் 36ஆயிரம் சிவிலியன்கள் மீட்கப்பட்டதாக அரசே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனாலும் ஒரே தொகைதான் (145 674) இன்னமும் பதியப்பட்டுள்ளது. அப்படியானால் மீதிப்பேரை என்ன செய்வதாக உத்தேசம்? களையெடுப்பு என்ற பெயரால் அரசு மாபெரும் இன அழிப்பொன்றை தஞ்சமடைந்துள்ள அப்பாவி மக்களுக்குள் நிகழத்தப் போகின்றது தயாராயிருங்கள்.
குணாளன்
rony
அகதிகள் அதிகரித்தால் ஐ.நா வுக்கு கொண்டாட்டம். அதற்காகவேதான் யு.என்.எச்.சி.ஆர் – என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதா?
1987 ல் இவ்வமைப்பு அகதிகளைப் பாதுகாக்க இலங்கை சென்ற பின்புதான், உள்நாட்டில் அகதிகள் தொகை மிகவும் அதிகரித்தது. ஆனால் ஐ.நா.வோ அகதிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. அதுதான் இன்றைய அவலநிலை.இலங்கையைப் பொறுத்தமட்டில் ஐ.நா.இன்று —பொய் நா. வாகிவிட்டது.