பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்தியாவுக்கு உறுதி செய்தது இலங்கை அரசு.

Pirabakaran_Vராணுவ முற்றுகையின் போது, பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்தியாவுக்கு உறுதி செய்தது இலங்கை அரசு. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று போன் செய்துள்ளார். அப்போது, பிரபாகரன் கொல்லப்பட்ட விஷயத்தை உறுதி செய்ததாகவும்,  அதிகாரப்பரவல் குறித்த நடவடிக்கை எடுப்பது குறித்தும் இருவரும் தகவல் பரிமாறிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி விஷ்ணு பிரசாத்,  ‘’இலங்கையில் பல ஆண்டாக நடந்து வந்த உள்நாட்டுப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே தெரிவித்தார். பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயத்தையும் அவர் உறுதி செய்தார். ‘இந்நிலையில், அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்து, தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் அதிகாரப்பரவலை நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரணாப் வலியுறுத்தினார்’ என்று தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to palli. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli.
    palli.

    தமிழர் பிரச்சனையில் எனி இந்தியா தலையிட முடியுமா? அதை எந்த தமிழராவது விரும்புவார்களா?? அதை விட இந்தியா நிலந்தர எதிரியாக்கி விட்டது தமிழரை. புலிஅழிப்பு என சொல்லி இத்தனை ஆயிரம் தமிழரையும் அழித்ததில் இந்தியாவின் பங்கு என்ன என்பது இன்றய மகிந்தாவின் இந்தியாவுக்கு தனது மகிழ்வையும் நன்றியையும் சொன்னதிலேயே அனித்து தமிழரும் புரிந்து கொள்வார். நேபால். சீனா. பாகிஸ்த்தான். வங்களாதேஸ். இந்த வரிசையில் ஈழமும் இந்தியாவின் எதிரி நாடாக போய் விட்டது. எல்லாமே குடுமப அரசியல் செய்த குழப்பங்கள்தான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி உங்கள் கருத்துடன் நான் முரன்படுகின்றேன். காரணம் இவவ்வளவு நாளும் இந்தியா இலங்கைத் தமிழருக்கு உதவுவதில் புலிகள் தான் தடையாக இருந்தார்கள். இந்த நிலையில் புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசிற்கு இந்தியா துணை போயுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இதை இந்திய அரசு செய்யாது விட்டிருந்தால் ஏனைய அண்டைய நாடுகள் நேரடியாகவே இலங்கை அரசுடன் கை கோர்த்து செயற்படத் தயங்கி இருக்காது. புலி அழிப்பின் போது பொதுமக்களின் அழிவும் நடந்ததற்குக் காரணம் புலிகள் தங்கள் பாதுகாப்பிற்காக பொதுமக்களையும் ஆட்டுமந்தைக் கூட்டங்கள் போல் சாய்த்துச் சென்றதே. இதற்காக இந்திய அரசை இலங்கைத் தமிழர்கள் மீண்டும் புலிகள் போல் முட்டாள்த் தனமாக பகைக்க வெளிக்கிட்டால் அது எமது தலையில் நாமே மண்ணைண அள்ளிப் போடுவதற்குச் சமமானது.

    இந்திய அரசு போரில் எந்தளவிற்கு இலங்கை அரசிற்கு உதவியதோ, அந்தளவிற்கு எனி இலங்கைத் தமிழ் மக்களுக்கும் ஒரு தீர்வைபப் பெற்றுத் தர அழுத்தத்தையும் இலங்கை அரசிற்கு வழங்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வர் கலைஞரும் மத்திய அரசைத் தூண்ட வேண்டும். எனவே இந்த விடயங்களில் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் தற்போதுள்ள சூழ்நிலையைப் புத்திசாலித்தனமாக பாவித்து, இந்திய மத்திய மாநில அரசுகளுடன் மீண்டும் நட்புறவைக் கட்டியெழுப்பி எமக்கான தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும்.

    Reply
  • Tamil
    Tamil

    பார்த்திபன் உங்கள் கருத்தை நான் முற்றாக ஆதரிக்கிறேன்.
    முதற்கட்டமாக “மாற்றுக்கருத்தாளர்கள்” குறைந்தபட்ச அடிப்படையில் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் இன்று முகாம்களில் உள்ள மக்களின் தற்போதை தேவைகளில் ஆரம்பித்து…

    Reply