பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்: பழ.நெடுமாறன் பேட்டி

Pirabakaran_Vஇன்று இரவு சென்னையில் உள்ள கொங்கு தமிழ் அறக்கட்டளையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்களான பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோர் ஒன்று கூடி இலங்கையின் தற்போதுள்ள நிலைமை குறித்து  தீவிரமாக  ஆலோசித்து வருகிறார்கள். இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்பாக பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரபாகரன் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

பிரபாகரன் நலமுடன் தான் இருக்கிறார்.

எப்படி இவ்வாறு உறுதியுடன் சொல்கிறீர்கள்.  நீங்கள் அவருடன் பேசினீர்களா?

நான் சொல்வதை வைத்தே புரிந்துகொள்ளுங்கள்.

இலங்கை பிரச்சனையில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

மே-21ல் தமிழகம் முழுவதும் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • thurai
    thurai

    //பிரபாகரன் நலமுடன் தான் இருக்கிறார்.//பழ.நெடுமாறன்

    இன்னமும் பிரபாகரனின் சடலமெனெ ஒன்றையும் இலங்கை இராணுவம் காட்டவில்லை. அவர் தப்பி ஓடும் போது கொல்லப்பட்டார் என்பது பொய்யானால் எங்கோ இருந்து எல்லாவற்ரையும் பார்த்து இரசிக்கின்றாரா?

    தன்மகன் உயிர் போனாலும் பரவாயில்லை தான் தப்பினால் போதுமென்ற மனம் கொண்டவரா எம் தலைவர்? தன் குடும்ப வாரிசைப் பற்றியே கவலைப்படாதவர் தமிழரின் அடுத்த தலைமுறையைப் பற்ரி சிந்திக்காதவரும், வன்னி மக்களின் அழிவினைப் பார்த்து ரசித்தவருமா?

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //எப்படி இவ்வாறு உறுதியுடன் சொல்கிறீர்கள். நீங்கள் அவருடன் பேசினீர்களா? நான் சொல்வதை வைத்தே புரிந்துகொள்ளுங்கள்.//

    மற்றவர்கள் சொன்னால் அது வதந்தி. ஐயா சொன்னால் அது தந்தி. நம்புங்கள் நாளை தமிழீழம்…………………

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நெடுமாறன் ஐயா தற்போது இணையத்தளங்களில் சில ஒளிப்பபதிவுகள் வந்தவிட்டன. முடிந்தால் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்ககள். புலிகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த பணங்களும் கொல்லப்பட்ட (பிரபாகரனின்மகன் உட்பட) போராளிகளின் படங்கள். மற்றும் பிரபாகரன், பொட்டம்மான், சூசை ஆகியோர் பயணம் செய்த வாகனம் எரிந்த நிலையிலுள்ளது. வாகனத்ததிற்கே இந்த நிலைமையென்றால் உள்ளேயிருந்தவர்களின் நிலைமையை யோசிக்க முடியாதா?? அதனால்தத்தான் அரசாங்கம் அவர்களின் உடலங்களைக் காட்ட முடியாதுள்ளது போலும்……

    Reply
  • நண்பன்
    நண்பன்

    இறந்தவரை உயிரோடு இருப்பதாக சித்தரித்து, தமிழ்நாட்டிலும் புலத்திலும் உள்ள வியாபாரிகள், கப்பல் விடுவதை நிறுத்திவிட்டு விமான தாக்குதல் நடத்தத் திட்டம் போடுகிறார்கள் போலும்?

    எப்படியும் ஏமாறும் ஒரு கூட்டம் புலத்தில் இருக்கு….வாழ்க புலிகளின் கொள்(கை)ளை.

    Reply
  • palli.
    palli.

    ஜயா ஏதோ ஒரு வழியில் பல்லி தங்களுக்கு கடமை பட்டவனாகவே இருக்கிறேன். இருப்பினும் பலமுறை பல்லி தங்களுக்கு நகைசுவையாய் பின்னோட்டமும் விட்டுள்ளேன். ஆனால் தாங்கள் சொல்லிய இந்த செய்தி பல்லிக்கு மகிழ்ச்சியை தருகிறது(கற்பனையாக இருந்தால் கூட) ஆனால் அப்படி இருந்தால் ஏதாவது மக்கள்நடமாட்டம் இல்லாட்ர்க இடமாய் பார்த்து ஓடி ஒழிந்து வாழ சொல்லுங்கள். மீண்டும் எமது இனத்தை கரும்புலி என்னும் முக மூடி போட்டு அழிக்க வேண்டாம். அவர்களுக்கு சமாதி கட்ட கூட எம்மிடம் தற்ப்போது சொந்த மண் இல்லை.

    Reply
  • BC
    BC

    முழு உடலை காட்டி எல்லாம் அவரையோ புலம் பெயர்ந்த தழிழர்களையோ ஏமாற்ற முடியாது. தலைவருடன் மோதி வெல்ல முடியாத இலங்கை அரசு இப்போ பொய்களை பரப்புகிறது என்பது அவர்களுக்கு தெரியும்.

    Reply
  • accu
    accu

    அப்படிப் பிரபாகரன் உயிரோடிருந்தாலும் இனி அவர் பிணத்துக்குத்தான் சமன்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இறுதியாக வந்த ஒளிப்பதிவு.

    http://www.youtube.com/watch?v=qrQgQnR8e4A&eurl=http%3A%2F%2Fmedia%2Eathirady%2Eorg%2F%3Fid%3Dview%26vid%3D214&feature=player_embedded

    Reply
  • தருமி
    தருமி

    திரு.பழநெடுமாறனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள உறவு வரலாறு அறிந்தது. அறிஞர் அண்ணாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட தினத்தில், சென்னைக் கடற்கரையில், கலைஞர் வைத்த ஒப்பாரியான (இரங்கல் கவிதை) “கீதாஞ்சலியை” கேட்டவர்களுக்கும், அதன் பிறகு, “அண்ணாவின்” குடும்பம் அடைந்த நிலையையும், அதே வேளையில், “கலைஞர் குடும்பம்” அடைந்த உயர்வையும் வரலாற்றில் கண்டவர்களுக்கு, நெடுமாறன் கலைஞர் “பால் கறந்துவிடக்கூடாது” என்று(கலைஞரை வைத்து) கவலைக் கொள்வது இயல்பானதுதான்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இலங்கை தமிழ்மக்களின் அரசியலை ஒரு திரைப்படக் கதையாகவோ கிறிமினல் கதை முடிவாகப் பார்ப்பவர்களுக்கே பிரபாகரன் உயிர்-உடலைப்பற்றி கவலைப்படுவார்கள்.

    தமிழ்மக்களின் சிலமுற்போக்கு தலைவர்களாலும் மகிந்தாராஜயபக்சா அரசாலும் வீரமிக்க இராணுவவீரர்களின் தியாகத்தாலும் அழிவைநோக்கி போய்கொண்டிருந்த இலங்கைமக்களும் தமிழ்முஸ்லீம் மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

    இனிவரும் காலங்களில் இலங்கைமக்கள் கூட்டுசேர்ந்து கலந்து பேசி விவாதித்து நாட்டையும் மக்களின் வாழ்வையும் முன்னேறி செல்வதற்கான வழிவகையை தேடி கண்டுபிடிக்க முயல்வார்கள்.இலங்கையிலோ இந்தியாவிலோ புலிகளுக்குமான செயல்பாடுகள் முற்றாக அழித்தொழிக்கப் பட்டிருக்கிறது. இனி இவர்கள் உயிர்யிருந்தாலும் உயிர் இல்லாதவர்களே!

    Reply