ஒருவரின் மரணத்தில் யாரும் மகிழ்ச்சி கொண்டாட முடியாது – டக்ளஸ் தேவானந்தா

da-de.gifஎன்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் இன்று கொல்லப்பட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரபாகரன் என்றோ தற்கொலை செய்து கொண்டவர் என்றே நான் கருதுகின்றேன். எமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடப் புறப்பட்ட சகோதர இயக்கத் தலைவர்களையும், பல்லாயிரக்கணக்கான சக இயக்கப் போராளிகளையும் தெருத்தெருவாகப் புலித்தலைமை கொன்றொழித்த போதே பிரபாகரன் தற்கொலை செய்துவிட்டதாகவே நான் கருதுகின்றேன். ஆயுதப்போராட்ட வழியில் மட்டுமன்றி அகிம்சை வழியில் உரிமை கேட்டு போராடியிருந்த தமிழ்த் தலைவர்களையும் சேர்த்தே புலித்தலைமை கொன்றொழித்தது. அப்போதே பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன். பல நூறு புத்திஜீவிகளையும் தலை சிறந்த கல்விமான்களையும் புலித்தலைமை கொன்றொழித்திருந்தது. அப்போதே பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் எமது மக்களின் உரிமைகளுக்காக நீதியான ஒரு உரிமைப் போராட்டம் நடந்திருந்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அந்தப் போராட்டத்தில் நானும் பிரதான பாத்திரம் ஏற்றுச் செயற்பட்டிருக்கின்றேன். அந்தப் போராட்டத்தில் புலிகளுக்கு இருந்த பங்களிப்பை நான் மறுக்கவில்லை. அதை நான் கொச்சைப்படுத்தவும் இல்லை. ஆனாலும் அப்போது கூட புலித்தலைமை அரச படையினருக்கு எதிராகத் தங்களது துப்பாக்கிகளை திருப்பியதை விடவும் சகோதர இயக்கங்கள் மீதே தமது துப்பாக்கிகளைத் திருப்பியிருந்தார்கள். இது தற்கொலைக்கு ஒப்பானது என்ற விடயத்தை புலித்தலைமை புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அது குறித்து அப்போது சிந்தித்திருக்கவில்லை. எமது உரிமைப் போராட்டத்தின் ஆரம்பங்களில் பிரபாகரனுக்கு இருந்த பங்களிப்பை நான் ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக எமது போராட்டத்தைச் சொந்த இனத்தின் குருதி குடிக்கும் அழிவு யுத்தமாக மாற்றியது குறித்த முரண்பாடுகளே எனக்கு அதிகம் உண்டு.

பிரபாகரனை நம்பி தமது உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தமிழ் இளைஞர் யுவதிகளின் தியாகங்கள் அனைத்தும் வீணாகிப்போய் விட்டது என்பதே எமது கவலை. தவறுகளுக்கு அப்பால் புலிகள் உட்பட அனைத்து விடுதலை இயக்கங்களினதும் தியாகங்களினால்தான் இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் அதைப் புலித்தலைமை பயன்படுத்தியிருக்கவில்லை. அன்று அதை ஏற்று செயற்பட்டிருந்தால் தவறுகளுக்கு அப்பாலும் பிரபாகரனுக்கு இன்று இந்த நிலை உருவாகியிருக்காது. உன் கால்களில் குத்திய முட்கள் ஒவ்வொன்றும் அடுத்தவன் தூவி விட்டவைகள் அல்ல. உனக்கு நீயே என்றோ தூவி விட்டவைகள். இதைத்தான் என்னால் கூற முடியும்.

தமக்குரிய படுகுழியைத் தாமே தோண்டி விட்டு அதனுள் வீழ்வதற்கு அவர்களே காத்திருந்து வீழ்ந்தமைக்கு அடுத்தவர்கள் எவரும் காரணமல்ல. பிரபாகரனின் முடிவிற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பயணத்திற்கான தடைகள் அகன்றிருப்பதாகவே நாம் கருதுகின்றோம். அதேவேளை தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மாயையை ஏற்றுக்கொள்ள எமது கட்சி தயாராக இல்லை. ஏனென்றால் புலிகள் படுகொலையைப் புரிந்து பயங்கரவாதத்தை நடாத்தியபோது எமது தோழர்களும், மக்களும் படுகொலை செய்யப்பட்டபோதும் பல இழப்புக்களைச் சுமந்து கொண்டு ஜனநாயக வழிமுறையில் நடைமுறைச் சாத்தியமான வழியிலேயே போராடி வந்துள்ளோம். 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுற்படுத்துவதன் ஊடாக தமிழ்பேசும் மக்களின் கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நான் நம்புகின்றேன்.

இதை வலியுறுத்தி நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம். எமது இந்த முயற்சிக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்த நாடு என்ற வகையிலும் எம் மக்கள் மீதான அன்பும், அக்கறையும், உரிமையும் கொண்ட நாடுமாகிய இந்தியாவின் பங்களிப்பு மிக அவசியம் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். யார்தான் மரணித்தாலும், மக்களையும் மண்ணையும் கைவிட்டு ஓடினாலும், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமை சுதந்திரம் நோக்கிய பயணம் தொடரும். அது பிபாகரனின் அழிவுப்பாதையில் அல்ல. ஆக்கபூர்வமான எமது நடைமுறைச்சாத்தியமான வழி முறையில் மட்டுமே தொடரும்.

டக்ளஸ் தேவானந்தா பா.உ.
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
அமைச்சர்
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை.

Show More
Leave a Reply to Tamil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • msri
    msri

    உங்களைப்போல்…. மாறாது> அடிபணியாத புலிகளின் வீரச்சாவிற்கு தமிழ்இனம் தலை வணங்குகின்றது!

    Reply
  • KUNALAN
    KUNALAN

    எம்.சிறி! நீர் வேண்டுமானால் உமது தலையைக் குனியப் போடும். ஏனப்பா மொத்ததத் தமிழினத்தையும் இப்படிக் குத்தகைக்கு எடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறீர்கள். ஏகபோக வெள்ளாண்மை செய்வதிலேயே எல்லோரும் குறியாய் இருக்கிறீர்கள். உங்கள் கருத்தை எழுதுவதானால் எழுதிவிட்டுப் போங்கள். “தமிழினம் தலை வணங்குகிறது” என்று முழுத் தமிழனின் பெயராலும் அறிக்கையிட நீர் யார் காணும். என்ன எல்லாரும் விளையாடுறியளா…?
    -குணாளன்-

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    msri மக்களைக் கேடயமாகப் பாவித்து தம்மைப் பாதுகாத்து, பின்பும் தம்மைப் பாதுகாக்கத் தப்பியோடும் போது சுட்டுக் கொல்லப்பட்டது உண்மையென்றால், நீங்கள் கூறும் வீரச்சாவு என்பதைக் கேட்டு, தமிழினம் தலைகுனியுமே தவிர தலை வணங்காது.

    Reply
  • Tamil
    Tamil

    //உங்களைப்போல்…. மாறாது> அடிபணியாத புலிகளின் வீரச்சாவிற்கு தமிழ்இனம் தலை வணங்குகின்றது! – msri //

    வாழ்ந்து வாழ்வுடன் போராடி வெல்லுவதை விட கோழைபோல் உயிரை மாய்க்கும் இந்த “வீரச்சாவு” கலாச்சாரம் புலிகழுடனேயே முடிவடையட்டும்

    Reply
  • pavabpaddatamilan
    pavabpaddatamilan

    Hi Parthipan,Tamil,Kunalan,
    I also agree with your all comments.Let leave the past(it is cannot forgeted easily)look forward. What can we tamils do hereafter for better future for our people.I dont think so we can find the solution from singalese government. We should not lose our hope and let us wait and see.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    சிங்கள அரசும் , மாற்றுக் கருத்தாளர்களில் பெரும்பாலனவர்களும் பிரபாகரனது சாவை நீங்கள் எதிர்பார்ப்பதோடு கொண்டாடவில்லை. ஒரு மனிதனின் இழப்பை எப்படி வேதனையோடு நினைவுக்கு கொண்டு வருவோமோ அதே அளவோடு இறந்த ஒரு மனிதனுக்கு மரியாதை செய்கிறோம்.

    இதே நிலை புலிகளுக்கு வந்திருந்தால் , எவரையும் விட்டு வைத்திருக்க மாட்டீர்கள். உங்கள் நிலையே வேறு. இறந்த பிரபாகரனின் உடலைக் காட்டவில்லை என்று புலிகள் எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். வாதாடுகிறார்கள். இதுதான் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு?

    பிரபாகரனது உடலை எப்படி சர்வதேசத்துக்கு காட்ட வேண்டுமோ? அரசு, அப்படி அதைச் செய்வார்கள். உங்களைப் போல் காட்டி கூத்தடிக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு தும்பியில் கொண்டு போய் குண்டு போட்டு விட்டு தூக்கி தூக்கி ஆட்டி கும்மாளம் போட்டவர்கள். புலிகள் பலரை விசிலடிச்சாங் குஞ்சுகளாகவே வளர்த்ததால் , இன்று என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்கின்றனர்.

    சிங்களவர்கள் நாகரீகத்தை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களில் ஒரு சாரார் புலி என பெயரை வச்சுசுக் கொண்டு காட்டு மிராண்டிகளாகவே ஆளாகியிருக்கிறார்கள். கடந்த துள்ளல் உங்கள் அடங்கலின் கடைசி துள்ளல்.

    // msri on May 18, 2009 2:11 pm உங்களைப்போல்…. மாறாது> அடிபணியாத புலிகளின் வீரச்சாவிற்கு தமிழ்இனம் தலை வணங்குகின்றது!//

    கல்லைக் கண்டால் தள்ளிப் போக வேணும். கல்லை உதைத்துக் கொண்டு போக நினைத்ததால் வந்த வினைதான் புலிகளின் இன்றைய அழிவு.

    Reply
  • msri
    msri

    குணாளன்! நான் விளையாடவில்லை! உண்மையைத்தான் எழுதினேன்! சிங்களப் பேரினவாதத்தின் தமிழ்இன அடக்குமுறைக்கெதிரான> தமிழ்த்தேசியத்தின் விளைபொருள் புலிகள்! தமிழ்மக்களின் அபிலாசைகளைக் கணக்கில் எடுத்து தீர்வொன்றை மகிந்தா முன்வைத்து அதை அந்தரங்க சுத்தியுடன் அமூல்படுத்தியிருநதால்> புலிகளை ஒழிக்க இவ்வளவு நாள் தேவைப்பட்டிருக்காது! அடுத்து தமிழ்மக்களின் சுயநிர்னய உரிமைப்போரில் புலிகளுக்கு எதிரான மாற்று என்பது இல்லாமல் போய்விட்டது! மாற்றுக்கள் எல்லாம் ஐனநாயக நீரோட்டங்கள் ஆகிற்று! இந்நிலையில் தமிழ்மக்கள் புலிகளுக்கூடாகவே தமிழ்த் தேசியத்தைப் பார்த்தார்கள்! தரிசித்தார்கள்! புலிகள் இதன் ஊடாக பாசிச அரசாகவே உருப்பெற்று அழிந்துள்ளார்கள்! ஆனால் தமிழ்மக்கள் புலிகளை இனனும் பாசிச சக்தியாக கணிக்கவில்லை! இதன்ஊடே அவர்களின மரணங்களை வீரச்சாவாக மதித்து தலைவணங்குகின்றார்கள்!

    Reply
  • msri
    msri

    பார்த்திபன்! புலிகள் மக்களை கேடயமாக்கி+தங்களைப் பாதுகாத்தது என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை! அரசின் கட்டுபாட்டுப் பிரதேசத்திற்கு மக்கள் வந்தும்: வரவிரும்பாமல் இருந்த வன்னி மக்களின் எண்ணிககையும் அதிகம்! காரணம்: வன்னிமக்களில் பெரும்பாலானோர் விரும்பியோ (மாவீரர் போராளிகள் குடும்பம்)விரும்பாமலோ புலிகளுக்கு உதவியவர்கள் ஆவர்! அத்தோடு அரசின் பகுதிக்கு வரும்இளைஞர் யுவதிகளை அரசு நடாத்தும் விதம்: இவைகளும் புலிகளின் கேடயத்திற்குள் அடங்கும்! அடுத்து சிங்களப் பேரிவாதத்திற்கு எதராக விட்டுக்கொடுக்காத+சரணடையாத(துரோகிகள் ஆகாத) போரையும் அதன் ஊடான மரணத்தையுமே>வீரமரணம் என்கின்றேன்!

    Reply
  • BC
    BC

    குணாளன் கருத்தோடு நான் உடன்படுகிறேன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //வரவிரும்பாமல் இருந்த வன்னி மக்களின் எண்ணிககையும் அதிகம்! காரணம்: வன்னிமக்களில் பெரும்பாலானோர் விரும்பியோ (மாவீரர் போராளிகள் குடும்பம்)- msri //

    இது உங்கள் தவறான ஊகமே தவிர உண்மையில்லை. தப்பி வந்த போராளிகளின் கருத்துக்களையும் கேளுங்கள். மாத்தையாவின் குடும்பமும் தமிழ்ச்செல்வனின் குடும்பமும் இராணுவக் கட்டுப்பாட்டினுள் வர முடிந்தால் மற்றவர்கள் ஏன் பயப்பட வேண்டும்?? புலிகள் பொய்யான புரளிகளைப் பரப்பியும் துப்பாக்கி முனையிலும் தடுத்து வைத்திருந்தனர் என்பதே உண்மை.

    சமீபத்தில் கிளிநொச்சியில் வதைமுகாம் என படங்களுடனும் மற்றும் வவுனியாவில் பாதிரியார் ஒருவர் அங்கங்கள் வெட்டியெடுக்கப்பட்ட உடல்களைப் பார்த்ததாகவும், அவற்றை அவர் தனது கைத்தொலைபேசியில் படம் எடுத்து வந்தாரென்றும் போலியான செய்திகளை இணையத்தளங்களில் வெளியிட்டு உலகெங்கும் பரபரப்பாக்கினார்கள். ஆனால் அப்படங்கள் இந்திய இணையத்தளமொன்றிலிருந்து எடுக்கப்பட்டு இப்படியான செய்திகளை கற்பனையில் உருவாக்கியுள்ளார்கள் என்பதனை கண்டுபிடித்து நிருபித்ததும், உடனடியாக தமது புலுடாக்களை நீக்கி விட்டார்கள்.

    Reply
  • palli.
    palli.

    Mசிறி உங்களுடன் விரண்டாவாதம் பேசும் நேரம் இதுவல்ல. ஆனால் தாங்கள் சொல்லிய தலை வணங்காத வீரர்கள் என தேவை ஏற்படின் வன்னி மக்களை சொல்லுங்கள். ஆனால் சில காலமாவது பல்லி பிரபாவுடனும் நட்பாய் பழகியுள்ளது ஆகவே இதில் தங்களுக்கு கருத்து சொல்ல கஸ்ற்றமாக உள்ளது. ஆனால் ஒன்று அரசின் புத்திகூர்மையை புலிகள் குறைவாக எடை போட்டதும் தமது கரும்புலி தாக்குதலை நம்பி ராணுவ நுட்ப்பங்களை புரியாமலும் அறியாமலும் விட்டதன் விளைவு இந்த நிலைக்கு காரணம். அதை விட எப்போதும் நண்பனை எதிரியாக்கி விட்டால் மிக கவனமாக செயல்பட வேண்டுமல்லவா.

    ஆனால் நண்பன் கேனையன் நாம்தான் வீராதி வீரன் என நினைததாலும் புலம்பெயர் புண்ணாக்குகளின் அவல குரலும் தம்பியின் அறிவை கெடுத்து விட்டது. இருப்பினும் இதுவரை தம்பியின் தனிப்பட்ட குணநடை தெரிந்தவன் என்பதால் அரசு சொல்லுவதை நம்பமுடியவில்லை.சரி அப்படிதான் நடந்தாலும் அது அரசின் திறமையல்ல. இவர்களது முட்டாள்தனமே.

    Reply
  • palli.
    palli.

    தோழர் உங்களுக்கு தெரிந்து நடக்கிறதோ இல்லை தெரியாமல் நடக்கிறதோ பல்லிக்கு தெரியவில்லை. ஆனால் தங்கள் அமைப்பு தற்ப்போது மிக கொடூரமாக நடப்பது அனைத்து மக்களுக்கும் தெரியும். ஆகவே இதை தாங்கள் உடன் சரி செய்யாவிட்டால் சங்கரியரின் கடிதத்துடன் என்னும் பல கடிதங்கள் உங்கள் மீது குற்ற பத்திரைகையாக வருவதை தடுக்க முடியாது.தாங்கள் ஒரு டெலிபோன் நம்பர் கொடுத்தீர்கள் முதல்வன் பானியில்.அது விளம்பரத்துக்கா? இல்லை நடைமுறைக்கா? திருந்துங்கள். திருத்துங்கள்.

    Reply
  • Ramasamy thasan
    Ramasamy thasan

    தேவாவினது அறிக்கையில் பாதி தான் உண்மை. புலிகளைப் பற்றிய விமர்சனம் சரியானது,ஆனால் அவரது கட்சியைப் பற்றிய சுய விமர்சனம் பொய்யிலே ஊறி உள்ளது. இவரது கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைகளும், எவர் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டு சேர்வதும் தான் இவரது மாற்று வழிகள்.
    வன்னி மக்களிற்கான முகாம்களைக் கூட இவரை நிர்வாகிக்க விடாமல் ஒரு முசுலீம் அமைச்சரைக் கொண்டு கவனிக்கும் கொலைகாரன் மகிந்தாவுடன் சேர்ந்து இவர் தீர்வு தரப் போகிறாராம். மீதியிருக்கும் தமிழரையும் எப்படிக் கொல்லலாம் என்பது தான் மகிந்த + தேவா சிந்தனை.

    Reply