கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு- ராணுவம் குவிப்பு

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் ஆன்டனி உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டிருப்பதை அடுத்து இலங்கை தலைநகர் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த தாக்குதலில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆன்டனி ஆகியோரை சுட்டு கொன்று இருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து விடுதலை புலிகள் தலைநகர் கொழும்பில் கொரில்லா தாக்குதல் நடத்தலாம், அதற்கான அபாயம் அதிகமிருப்பதாக இலங்கை ராணுவம் கருதுகிறது.

இதனால் கொழும்பில் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது

Show More
Leave a Reply to rooto Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • tax
    tax

    வெட்கமாக இல்லையா…

    Reply
  • palli.
    palli.

    எதுக்கு நாம் விட்ட தவறை அவர்களும் விடவில்லையென்றா?? அவர்கள் தமது பாதுகாப்பை பலபடுத்துவதில் என்ன வெக்கம்.

    Reply
  • மாயா
    மாயா

    இது உண்மையில் விடுதலைப் புலிகளது தாக்குததலுக்கான தற்கொலைத் தாக்குதலுக்கான பாதுகாப்பல்ல. இன்னொரு 1983 கலவரம் போல் ஒரு கலவரம் ஏற்படக் கூடாது எனும் கருத்தில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அது பெரும்பான்மை மக்களின் மகிழ்வில் அரசியல் ஆதாயம் தேட விரும்பும் அல்லது அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் நிகழ்வுகளை தடுக்கும் முன்னேற்பாட்டுடன் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ராணுவமோ புலித்தாக்குதல் அபாயம் இருக்கிறதென்கிறது. ஆனால் சிலரோ 1983 போல இருக்கக்கூடாது என்பது தான் முக்கிய நோக்கு என்கின்றனர். அப்போ அரசு பொய்சொல்கிறதா? பெரும்பான்மை மக்கள் மட்டும் தான் மகிழ்கிறார்கள் என்றால் சிறுபான்மையினர் கவலைப்படுகிறார்கள் என்றுதானே அர்த்தம். மிருகங்கள் இறந்ததற்கு ஏன் நாட்டு மக்கள் அனைவரும் மகிழவில்லை? 1983 இல் பெரும்பான்மை மக்களின் கவலையில் அரசியல் ஆதாயம் தேடியயவர்கள் இப்போது மகிழ்வில் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். வேடிக்கைதான். 1983 இல ஆதாயம் தேடிய ஒரு சிலரைக்கூட சிறையில் இடவில்லையே?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    கொழும்பிலுள்ள இங்கிலாந்து தூதரகத்தின் முன் 1000 பேர்வரை கூடி கல்வீசியும் டேவிட் மில்பாண்டின் உருவப்பொம்மைக்கு தீவைத்தும் ‘கொண்டாடி’ யுள்ளனர். இவர்களின் அரசியல் ’ஆதாயத்தை’ ராணுவத்தைக் குவித்து வேடிக்கை பார்த்த ஸ்ரீலங்கா அரசை இங்கிலாந்து அரசு கண்டித்துள்ளது

    Reply
  • rooto
    rooto

    உங்கள் மானங்கெட்ட பழிவாங்கும், அல்லது கொல்லப்பட்டவர்களைகூட குறைந்தபட்ச மரியாதை கொடுக்கதெரியாதவர்களா தமிழ் மக்களுக்கு மாற்றுகருத்துகள், அல்லது ஜனநாயகம் மூலம் தீர்வை பெற்று தந்திருப்பீர்கள்??
    புலிகளை விட அதிகம் தவறு செய்த, செய்கிற , செய்யபோகிற கூட்டமே!! தலநகரில் தமிழர்களுக்கு இன்று பலவந்தமாக நடந்த கொடுமைகள் தெரியுமா??
    அல்லது முகாம்களில் உள்ள உணவுக்கு கூட வழியற்றவர்களை குதித்து நடனமாட(பலவந்தமாக) வைத்த அக்கிரமத்தை பார்த்து ஜனநாயகவழியிலாவது கேளாமல் ஜால்ரா போடுவதா தமிழருக்கு நீங்கள் தரும் மாற்றுகருத்து? கிழக்கின் விடிவெள்ளிகள் என்னும் ஏன் தமிழருக்கு விடிவில்லை?

    ஜனநாயகவழியில் தந்தை செல்வா நடாத்திய போராட்டங்களையும் கொச்சைப்படுத்துகிறீர்களா? வட்டுகோட்டையில் அவர் வெளியிட்ட தபால்தலையையே வெட்டியெடுக்க முனைகிறீர்களா?? கருத்தியல் ரீதியாக புலிகள் தவறு, பாசிசம் ஏண்டு சொல்லி சொல்லியே நீங்கள் அவர்களைகாட்டிலும் மிருகங்களாகவே தமிழருக்கு தென்படுகிறீர்கள். நாய்களாக மற்றைய இனத்துக்கு விசுவாசமாக இருங்கள்!! வாழ்க தோழமை! வழர்க ஜனநாயகம். இனிதான் புலிகள் இல்லையே அவர்கள் நீங்களாவது நல்லது செய்யட்டும் எண்டுதானே கூண்டோடு மடிந்தார்கள் அதன்பிறகுகூட விதண்டாவாதம் பேசினால் நீங்கள் கையாலாகாதவர்கள் எண்டுதானே அர்த்தம்!!

    Reply
  • thurai
    thurai

    புலிகள் தங்களிற்கான் பொறிகளை தாங்களே அமைத்தவர்கள்.
    இவர்களின் அழிவில் யாருக்கும் பங்கில்லை.

    துரை

    Reply