கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசையின் இன்றைய வேண்டுகோள்!!!

Susaiகடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை இன்று (May 17 2009) ஊடகங்களுக்காக தொலைபேசியில் வெளியிட்ட வேண்டுகோள்.

”சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவப் பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் மரணமடைந்து இருக்கின்றனர். படுகாயமடைந்த இந்த 25 ஆயிரம் பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டுவருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம்.

ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டுக்கொண்டோம். நாம் அவர்களை அனுப்பி வைக்கின்றோம் நீங்கள் பொறுப்பு எடுங்கள் எனக் கேட்டோம். இருந்தபோதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அந்த 25 ஆயிரம் மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணமடைந்திருக்கின்றனர். சுமார் இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்கா படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.

போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிக்கின்றனர் இல்லை. அந்த மக்களை சுட்டுக்கொன்றுவிடுவதற்குத்தான் அவர்கள் முற்படுகின்றனர்.

இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையிட்டு எந்தவிதமான அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களைவிட மேலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நாம் படையினருடன் தொடர்ந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொது மக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்நாள் இரவு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த 25 ஆயிரம் மக்களையும் எடுக்கச் சொல்லி. காலத்தைத் தாமதித்தார்கள். தற்போது இன்னும் 20 ஆயிரம் மக்கள் வரையில் காயப்பட்டிருக்கின்றனர். அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர்.

போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்போது கடைசி மணித்தியாலச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இரண்டு கிலோ மீற்றர் சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக ஆட்டிலறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர்”

Show More
Leave a Reply to palli. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • palli.
    palli.

    சர்வதேசம் எதை சொன்னாலும் தறுதலைதனமாய் உங்கள் அமைப்பு நடந்ததாலும் இப்போது உங்கள் வாலுகள் புலம் பெயர் நாட்டில் சர்வதிகார பாணியில் போராட்டங்களை சதிராட்டமாக செய்வதாலும் தங்கள் எது சொன்னாலும் அது எடுபடவில்லை. வினையை நீங்கள் விதைக்க அதுக்குரிய அறுவடையை அப்பாவி மக்கள் அனுபவிக்கின்றனர். அத்துடன் சர்வதேசதால் தேடபட்ட ஒரு பட்டாம்பூச்சி உங்களுக்கு இந்த நிலையில் சர்வதேச நாயகனா?? இப்போது கூட நீங்கள் திருந்தவில்லை என்பது புரிகிறது. இருப்பினும் உங்களை மக்களை சர்வதேசம் காப்பாற்ற வேண்டும் என நாமும் ஏங்குகிறோம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இதுவரை 30,000 மேற்பட்ட மக்களை காப்பாற்றியுள்ளதை அரசு ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளது. ஆனால் சூசை 25,000 மக்கள் இறந்துள்ளதாகக அறிவித்ததை ஏற்கனவே GTV பலமுறை ஒலிபரப்பியது. சூசையின் ஒளிப்பதிவுகள் பலவற்றை நான் ஏற்கனவே பார்த்திருக்கினன்றேன். GTV ஒலிபபரப்பிய சூசையின் குரலிற்கும் நான் பார்த்த ஒளிப்பதிவுகளிலுள்ள குரலிற்கும் நிறையவே வேறுபாடுள்ளது. உண்மைகள் விரைவில் வெளிவராமலா போகப் போகின்றது. உண்மையில் விடுதலைப்புலிகள் சரணடைய விரும்பினால் அது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் அதனை இவர்கள் சில தினங்கள் முன்பு முடிவு எடுத்து வெளியிட்டடிருந்தால் பாராட்டப்பட்டிருக்கும், பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். இறுதிவரை தமது சுயலாபத்திற்காக இந்தியத் தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக அமையுமெனக் காத்திருந்தார்கள் அதுவும் பாதகமாக அமைந்ததன் பின்னால் சுடலை ஞானம் பிறந்திருக்கின்றதோ??

    Reply
  • thurai
    thurai

    சூசையின் இறுதி மரண ஓலமேயிது. மக்களின் மரணத்தை உலகிற்குக் காட்டியே இயக்கத்தைய் வளர்த்தவர்கள். உலகத்தின் சட்ட திட்டங்களை அவமதித்தே புலியின் முகவர்கள் செய்ற் பட்டார்கள் இன்னமும் அதனை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

    தமிழரை கடவுள் காப்பார். ஆனால் தமிழரின் அழிவினை உலகிற்குக் காட்டி வாழும் புலிகளையும் அவர்களின் முகவர்களையும் யாராலும் காக்கமுடியாது.

    துரை

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சூசையின் ஒலிப்பதிவை கேட்பதற்கு :

    http://tamilnational.com/news-flash/1058-25000-civilians-injured-and-close-to-death-.html

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இன்று 17 ம் திகதி.ஜிரிவியும் சூசையின் தொலைபேசி உரையாடல்- வேண்டுகோள்களை இன்று என்று ஒலிபரப்பியது.
    இந்த கட்டுரையாளர் இன்று என்ற வார்த்தையும் பயன் படுத்தியிருக்கிறார். இது 16 ம் தகதியை குறிக்கிறதா? 17ம் திகதியை குறிக்கிறதா? ஏன்னென்றால் இரு நாட்களுக்கும் நீண்ட மாற்றங்கள் நடந்தேறியுள்ளன.

    Reply
  • santhanam
    santhanam

    ஏன் இந்த தமிழ்இனத்திற்கு இப்படி ஒரு கேவலம் ஏன் ஏன்?? தனி மனித வழிபாட்டை இத்துடன் முடித்து கொள்ளுங்கள் அன்பார்ந்த தமிழ் உறவுகளே போதும் போதும் மனிதத்தை வாழவிடுங்கள்.

    Reply
  • meerabharathy
    meerabharathy

    மதிப்புக்குரிய புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு தங்களுக்கு கடந்த வருடம் இரு கடிதங்கள் எழுதியிருந்தேன்… தங்களுக்கு நேரடியாக அனுப்ப முடியாமையினால் அனைவருக்கும் அனுப்பியிருந்தேன். அவற்றை நீங்கள் வாசித்திருக்காவிட்டால் இப்பொழுதும் எனது வலைப்பதிவில் (awakeningawareness.org) அரசியல் தலைப்பின் கீழ் நீங்கள் வாசிக்கலாம்… வாசிக்க்கூடிய சூழ்நிலையில் நீங்கள் தற்பொழுது இருந்தால்…

    இக் கடிதம் எழுதுவதற்கான காரணம்….
    நீங்கள் தற்பொழுது எங்கு இருக்கின்றீர்கள் என்பதை நான் மட்டுமல்ல யாரும் அறியோம்…
    இலங்கை அரசாங்கம் குறிப்பிடும் யுத்த சூனிய பிரதேசத்திற்குள் நீங்கள இருந்தால்….
    தங்களிடம் தாழ்மையுடன் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்…
    நீங்களும் தங்களுக்கு கீழ் உள்ள முதலாம் இரண்டாம் தலைமைகளும்….
    தற்கொலை செய்து தங்களை அழிக்கும் முடிவை எடுத்திருந்தால் …
    தயவு செய்து அம் முடிவை உடனடியாக மாற்றுங்கள்….
    உங்களை நம்பி….
    தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைக்காக தம்முடன் இனைந்துள்ள பல ஆயிரக்கணக்கான போராளிகளையும்….
    மற்றும் தங்களது கட்டளையின் பேரில் கட்டாய இராணுவ பயிற்சியளிக்கப்பட்டு அங்கத்தினராக இருக்கும் இளம் தமிழ் சந்ததியினரையும்…
    மற்றும் பல்வேறு காரணங்களால் தங்களுடன் இருக்கும் மக்களையும்….
    அநியாய அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு நீங்கள் தற்கொலை செய்து தங்களை அழிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
    நீங்கள் செய்ய வேண்டியது இந்த இறுதித் தருணத்தில்…
    ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாகவும் ஐ.நா. சபையின் பிரதிநிதிகளிடம் சரணடைவதாகவும் அறிவிக்கவும்.
    ஏனனில் வாழ்வும் மனித உயிரும் மிகப் பெருமதிவாய்ந்தவை….
    எதற்கும் ஈடுயினையற்றவை….
    இதைக் காப்பதற்காக தங்களை அழிப்பதைவிட சரணடைவது எந்தவகையிலும் குறைந்ததல்ல…
    மேலும் தமிழ் பேசும் மனிதர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளார்கள் எனவும்
    அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் எனவும்…
    அவர்கள் சுயநிர்ணைய உரிமைக்கு தகுதியானவர்கள் எனவும் நீங்கள் இக் கணமும் நம்புவீர்களாயின்…
    தயவு செய்து தற்கொலை செய்யாது ஐ.நா. பிரதிநிதிகளிடம் சரணடையுங்கள்…
    இதன் மூலம் பல உயிர்களை இக் கணத்தில் காப்பாற்றியவராவீர்கள்…..
    மேலும் நீங்கள உயிருடன் இருந்தால் மட்டுமே போராட்டத்தை ஐனநாயக வழியில் முன்னெடுக்கலாம்…
    ஒரு மனிதர் என்ன தவறு செய்திருந்தாலும்….
    உண்மையான மனிதம் மனிதரை மன்னிக்கும்…
    தமிழ் சிங்களம் பேசும் மனிதர்கள் மட்டுமல்ல…இந்திய மனிதர்களும் உலக மனிதர்களும் தங்களது தவறுகளுக்காக தங்களை மன்னிப்பார்கள்…
    இதற்காக ஓசோவின் ஒரு கட்டுரையை இதனுடன் சகலர்களுக்கும் அனுப்புகின்றேன்….
    அது ஒரு வெளிச்சத்தை அனைவருக்கும் காட்டும் என நம்புகின்றேன்….
    தங்கள் நல்ல முடிவை எதிர்பார்க்கும்……
    மீரா பாரதி

    Reply
  • meerabharathy
    meerabharathy

    Are we ready to forgive Mr.Prabagaran if he surrenders to U.N officials….
    If we are really respecting Buddha and his teaching…
    don’t decide now! first read this and then think about it…………..awakeningawareness.org

    Reply