இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது.
புதிய அரசாங்கம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் நாளை திங்களன்று புதுதில்லி செல்லும்போது, இந்தியப் பிரதமருடன் அவர் இலங்கை பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவார் என்று தெரிகிறது.
இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
msri
புலிகளின் கதை முடிந்துவிட்டதா? எனக் கேட்டிருப்பார்! தேர்தலுக்கு முன் செய்திருக்க வேண்டும்! பரவாயில்லை! புலிகளை தூக்கிப்பிடித்த வை.கோ. வைத்தியர் ராமதாசு போன்றவர்களையே தமிழக மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்! அப்புறம் நாம் ஏன் கவலைப்படுவான் என்றிருப்பார்! எனிமேல் நாம் மகிந்தாவிற்கு எந்த உதவி செயதாலும் வை.கோ. போன்றவர்கள் கத்துவார்கள் ஆனால் தமிழக மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்! ஆனால் கருணாநிதிதான் இடைக்கிடை ஏதாவது சொல்வார்! அதை நாங்கள “சேப்” பண்ணிப் போடுவம் என்றிருப்பார்! என்றாலும் கருணாநி “பேய் மண்டைக்கார” ஆளதான்! தமிழகத்திலை “தமிழ் உணர்வாளர்களையும்” செல்வியையும்> மருத்தவமனையில் படுத்திருந்தே தோற்கடித்து விட்டாரே! காய்க்கு வயதுக்கேற்ற அரசியல் அனுபவம் என்றுமிருப்பார்!
thurai
அரசியல் அகதிகளாக உலகெங்கும் வந்த ஈழத்தமிழரை அடங்காப்பற்றுள்ள தமிழராக்கிய பெருமை ஜிரிவி யையே சாரும். ஜிரி வியின் அரசியல் ஆலோசனை
1) ரிவி க்கு பணம்
2) புலிக்குப் பணம்
3) வன்னியில் பிணம்
புலத்துத் தமிழரை சிங்களவரின் நிரந்தர பகைவர்களாக்கி விட்டார்கள். இவர்களை பாவித்து புலிகளின் தடையையும் உலகில் நீக்கிவிட்டால் திராவிடர் பெயரைச் சொல்லி தமிழகத்தை கருணாநிதி ஏமாற்றியது போல், புலத்துத் தமிழரையும் தமிழீழப் பேச்சை வைத்தே ஏமாற்றி தொடர்ந்தும் சிலர் வாழலாம்.
துரை