ஜனநாயகத்தை வென்றது பணநாயகம்: ஜெயலலிதா

jeyalalitha.gifதமிழகத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுக தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக தனது பணபலம், படைபலம் மற்றும் அதிகார பலத்தால் ஜனநாயகத்தை வென்றுவிட்டது என்று கூறியுள்ளார்.

தவறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், திமுக முறைகேடாக வென்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தோல்வியால் பாமக துவண்டுவிடாது என்றும், அரசியலில் அது மீண்டும் உத்வேகம் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பணபலத்தை அதிமுகவும் தான் கையாண்டது. ஆனால் அதிமுகவிற்கும் மதிமுக மற்றும் பாமகவிற்கும் காலை வாரிவிட்டது சந்தர்ப்பவாதம் தான் என்பதை இன்னும் இவர்கள் உணரந்து கொள்ளாதது தான் பரிதாபம்.

    Reply