ஜனாதிபதி நாடு திரும்பினார் -விமானநிலையத்தில் சூடான வரவேற்பு

he_2009-05-17.jpgஜோர்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார். நாடு மீட்கப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை அரசாங்கத்தின் அமைச்சர்கள்,  ஆளும்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் வரவேற்றனர்.

விமானத்திலிருந்து இறங்கிய ஜனாதிபதி தரையைத் தொட்டு தாய்நாட்டை வணங்கினார். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். இதனையடுத்து கட்டுநாயக்க விமானநிலைய வளாகத்தில் ஜானாதிபதிக்கு ஆசிவேண்டி இடம்பெற்ற சர்வமத அனுஷ்டானங்களில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

ஜோர்தான் விஜயத்தின்போது அங்கு இடம்பெற்ற ஜீ-11 உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி,  புலிகளிடமிருந்து விடுதலைபெற்ற நிலையிலேயே தான் இலங்கைத் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • msri
    msri

    மகிந்தா தரையைத் தொட்டு வணங்கியது>தாய்நாட்டுப் பற்றல்ல! பேரினவாத வெறிப்பித்து!

    Reply
  • தாழவெட்டுவான்
    தாழவெட்டுவான்

    அப்படியே எம்.ஜி.யார் பாணியில் ‘நீங்க நல்லா இருக்கயனும் இந்த நாடு முன்னேற’ என்று எங்கட விடிவெள்ளிகள் பாடி வரவேற்காத குறைதான். மொத்தமாக தமிழர்கள் புலிகளில் வாய்க்குள் வாழ்ந்து விட்டு சிங்கத்தின் வாய்க்குள் வாழப்போகிறேம்!

    Reply
  • thurai
    thurai

    ராஜபக்ஸ்ச இலங்கை மண்ணை வணங்கினார். ஆனால் நாங்கள் இலங்கையையும் மதிப்பதுமில்லை வாழும் நாடுகளையும் மதிப்பதுமில்லை. எங்கள்து பழக்க வழக்கங்களால் சிங்களவரினது பகைமையையும் தேடியது மட்டுமல்ல உலகமுழுவதும் தேடிவிட்டோம்.

    மனிதனை மனிதன் மதிக்கத் தெரியாதவனிற்கு ஓர் நாடும் கிடையாது. வாழும் நாடுகளிலும் தமிழனை யாரும் மதிக்காமல் செய்துவிடுவார்கள்.

    துரை

    Reply