”தலைவர் வே பிரபாகரன் பொட்டம்மான் உள்ளே” சூசையின் மனைவி – ”புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.” அமெரிக்க அதிபர் – ”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” எஸ் பத்மநாதன் எல்ரிரிஈ

Obama_President_of_AmericaSelvarasa_Pathmanathan_LTTE

”I urge the Tamil Tigers to lay down their arms.” US President. ”we are ready to anything” S. Pathmanathan, LTTE.

”நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்று எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வெளிப்படையாகத் தெரிவித்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் எல்ரிரிஈ ஆயுதங்களை ஒப்படைக்க  வேண்டும் என்று அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியத் தேர்தல் முடிவுவரை காத்திருந்து விட்டு தற்போது ‘நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருக்கிறோம்’ என எல்ரிரிஈ தெரிவித்து உள்ளது. தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பதாக செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே நேற்று (மே 15 2009) கைது செய்யப்பட்ட கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி வழங்கிய தகவல்களின் படி எல்ரிரிஈ தலைவர் வே பிரபாகரன் புலனாய்வுப் பிரிவுப்பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகிய முக்கிய தலைவர்கள் இன்னமும் அங்கேயே இருப்பதாகத் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.

எல்ரிரிஈ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அமெரிக்க அதிபருக்கு அளித்துள்ள பதிலின்படி எல்ரிரிஈ தங்களால் பணயம் வைக்கப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் எல்ரிரிஈ தங்கள் ஆயுதக் கிடங்குகளை வெடிக்க வைப்பதாகவும் அவர்கள் பெரும் கூட்டுத் தற்கொலைக்குத் தாக்குதலுக்கு தயாராகலாம் எனவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் தெpரிவத்து உள்ளார். இன்று வெடிமருந்து நிரப்பிய பஸ் வண்டி ஒன்றை புலிகள் 58வது படையணியை நோக்கி ஓட்டி வந்ததாகவும் அது இலக்கை அடைய முன்னரே வெடித்ததாகவும் அவ் இராணுவ அதிகாரி தெரிவிக்கின்றார். இவ்வாறான பல தற்கொலைத் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

Relted News & Articles:

‘புலிகள் ஆயுதங்களைப் போட்டு சரணடைய வேண்டும்!’ யுஎன் பாதுகாப்புச் சபை

”புலிகள் ஆயுதங்களைக் கைவிடுவது நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்” பிரான்ஸ் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் அறிக்கை – புலிகளின் கையில் ஆயுதம்? : த ஜெயபாலன்

”எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்த்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.” : ரவி சுந்தரலிங்கம்

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

._._._._._.

அமெரிக்க அதிபர் விடுத்த வேண்டுகோள் :

”we have a humanitarian crisis that’s taking place in Sri Lanka, and I’ve been increasingly saddened by the desperate news in recent days. Tens of thousands of innocent civilians are trapped between the warring government forces and the Tamil Tigers in Sri Lanka with no means of escape, little access to food, water, shelter and medicine. This has led to widespread suffering and the loss of hundreds if not thousands of lives.

Without urgent action, this humanitarian crisis could turn into a catastrophe. Now is the time, I believe, to put aside some of the political issues that are involved and to put the lives of the men and women and children who are innocently caught in the crossfire, to put them first.

So I urge the Tamil Tigers to lay down their arms and let civilians go. Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out.

I’m also calling on the Sri Lankan government to take several steps to alleviate this humanitarian crisis. First, the government should stop the indiscriminate shelling that has taken hundreds of innocent lives, including several hospitals, and the government should live up to its commitment to not use heavy weapons in the conflict zone.

Second, the government should give United Nations humanitarian team access to the civilians who are trapped between the warring parties so that they can receive the immediate assistance necessary to save lives.

Third, the government should also allow the United Nations and the International Committee of the Red Cross access to nearly 190,000 displaced people within Sri Lanka so that they can receive additional support that they need.

The United States stands ready to work with the international community to support the people of Sri Lanka in this time of suffering. I don’t believe that we can delay. Now is the time for all of us to work together to avert further humanitarian suffering.

Going forward, Sri Lanka must seek a peace that is secure and lasting, and grounded in respect for all of its citizens. More civilian casualties and inadequate care for those caught in resettlement camps will only make it more difficult to achieve the peace that the people of Sri Lanka deserve.”

The United United States President Barrack ObamaStates president Barrack Obama.

._._._._._.

எல்ரிரிஈ இன் சர்வதேசப் பொறுப்பாளர் விடுத்த பதில்: (தமிழ்நெற்றில் இருந்து)

“The situation in Vanni has reached colossal proportions and what is happening there is unprecedented human carnage. At this juncture we are ready to anything that is necessary to save the Tamil people trapped in the unrelenting war that is waged on them. We heed the call by the US President and are prepared to take measures that will spare the life of our people, The international community now has to act with fairness and openness and should take full responsibility for the people who are being targeted with no mercy or dignity,

LTTE is extremely mindful of the civilian hardships and is prepared to take all necessary measures that would immediately stop the current carnage. The president’s call for stopping the humanitarian crisis has been heard by the LTTE and is willing to heed to his call. The international community now has to act with fairness and openness and should take full responsibility for the people who are being targeted with no mercy or dignity. Our people are now at the mercy of the international community and it has to take full responsibility for the future of our people. We call on the Sri Lankan Government too to take note of the President’s call and do everything possible to stop a blood bath unfolding.

The LTTE has relentlessly fought for the rights of our people for over three decades and will always do what is best for them. President Obama’s recent remarks gives us hope that at last he has taken an active interest in the plight of our people. A military solution will not end the current conflict. A lasting, respectful and equitable solution for our people can only be reached through political means. We have always shown our preparedness to enter a political process as long as all parties were willing to act faithfully to the process.

Encouraged by the hopeful words of President Obama the LTTE is again stating its categorical position to enter a political process facilitated by neutral international parties and find a meaningful solution to the ethnic crisis. It is the best option for all people living in the island of Sri Lanka. Both the Sri Lankan Government and us, we together have to find a solution and a way to resolve the crisis. An onslaught by the Government will only result in thousands more dying and will not pave a way for a dignified and respectful outcome. We are ready to cooperate and work towards peace as Mr Obama has insisted.”

S. Pathmanathan, Head of LTTE’s International Diplomatic Relations.

Show More
Leave a Reply to rooto Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • மாயா
    மாயா

    இந்திய தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், புலிகள் 500 மீட்டர் பரப்புக்குள் 5000 பேரோடு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் கடற் புலிகளின் தலைவர் சூசை , தொலை தொடர்பு சாதனம் வழி பாதுகாப்பு துறையோடு தொடர்பு கொண்டு , படையினர் தமது ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தாவிட்டால் தம்மோடு இருக்கும் 5000 பேரோடு தம்மை அழித்துக் கொள்ளப் போவதாகவும் , தாம் ஒருபோதும் சரணடைய போவதில்லை என்றும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

    மேலும்:

    Last call from Prabakaran to KP

    (Lanka-e-News, 16.May.2009, 1.30 PM)A source linked to an Italian intelligence firm said that LTTE leader Vslupillai Prabakaran has talked to his right arm associate Kumaran Pathmanathan alias KP, the LTTE’s international arms dealer, over a satellite phone.

    The phone call was made around 2 AM on May 07 from Sri Lanka to Malaysia, says the intelligence bureau that is monitoring the communication of the international terrorist organizations. The LTTE leader asked KP to assume the leadership of the LTTE and lead the struggle following any circumstance within the coming few days. He has urged KP to work with the people mentioned in an email he has sent. Prabakaran has asked to carry on the struggle since the conditions are good for the Ealam struggle internationally, the Intelligence bureau.

    The voice of the LTTE leader was feeble because he might have been ill or angry, said the bureau adding that the voice matching software has proved that the voice was Prabakaran’s.

    Political observers say that Prabakaran’s phone call can be a crucial one since the LTTE leaders were sending their wives and families to Army-held areas since the following May 15.

    http://www.lankaenews.com/English/news.php?id=7685

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    விடுதலைப் புலிகளில் பலமிக்க மூவர் இருக்கிறார்கள். முதலாமவர் பிரபாகரன் அடுத்தவர்கள் புலனாய்வு துறை தலைவர் பொட்டு அம்மான் மற்றும் குமரன் பத்மநாதன் (கேபீ). இவர்களை அரசு கைது செய்ய வேண்டும் அல்லது கொலை செய்ய வேண்டும். மூவரில் எவர் உயிரோடு இருந்தாலும் இலங்கையில் சமாதானத்தை கொண்டு வர முடியாது என பேராசிரியர் ரொகாண் குணரத்ண தெரிவித்துள்ளார். இந்த மூவரில் ஒருவர் உயிரோடு இருந்தாலும் இலங்கைக்கு ஒரு போதும் சமாதானம் வராது எனவும் இலங்கை வாராந்த பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

    இலங்கை பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்று தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், எமது அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக சிந்தித்தால் பெடரல் முறை கூட தேவைற்றது என்று தெரிவித்த குணரத்தின, இலங்கை அரசியல் தலைவர்கள் புதிதாக சிந்தக்க வேண்டிய நேரம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக கேம்பிரிட்ஜ், காவர்ட் பல்கலைக் கழக படிப்பு தேவையில்லை. அரசியல் தலைவர்களுக்கு முதலாவதாக சிந்திக்கும் திறன் மட்டுமே தேவை. அப்படி சிந்திக்காதவர்களால் ஒரு நாட்டை ஆள முடியாது எனத் தெரிவித்துள்ள ரொகான், கோல்பேஸ் திடலின் சுதந்திரம் கூட எமக்கு இன்னும் முறையாக கிடைக்கப் பெறவில்லை என்றார். எனவே எமது அரசியல் தலைவர்கள் எமது வாழ்கையோடு தொடர்ந்தும் விளையாடினார்கள்.

    அவர்கள் அரசியலுக்கு வரவும், அரசியலில் தம்மை நிலைக்க வைத்துக் கொள்ளவும் ஏற்படுத்திய பிரச்சனையே இது.ஆனால் மக்களிடம் எதுவித பிரச்சனையுமில்லை. இன்று துன்பத்துக்குள்ளாகி வரும் மக்களுக்கு யார் உதவி செய்கிறார்கள்? என்று பார்த்தால், சிங்களவர்கள்தான் உதவுகிறார்கள். அந்த தமிழ் மக்களுக்காக இறப்பது கூட சிங்கள படையினராகத்தான் இருக்கிறார்கள்? எனவே இது அரசியல்வாதிகள் உருவாக்கிய பிரச்சனைதானே? என்று சிங்கள சமூகத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

    http://www.lankaenews.com/Sinhala/news.php?id=8905

    Reply
  • Stalinistmao
    Stalinistmao

    If you believe the above statement by KP, you will believe anything. I hope KP is not joking.

    What is the plan B for LTTE where there was no plan A in the first place?

    Reply
  • thurai
    thurai

    புலிகளின் சர்வதேச பொறுப்பாளரா, அல்லது பயங்கரவாதத்தின் பொறுப்பாளரா இவர் என்பதை உலகம் என்னும் அறியவில்லையா?

    வன்னியை விட கூடுதலாக புலிகள் உலகம் முழுவதுமே வாழ்கிறார்கள். இவர்களிற்கே தமிழிழப்பேச்சும், புலிகளின் அங்கிகாரமும் தேவை. இலங்கையில் வாழும் தமிழரை விடவும் புகலிடம் புகுந்த நாட்டிலும் மிகுந்த வசதிகளோடு வாழ்பவர்கள் புலிகளின் முகவர்களேயென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவர்களின் அகிம்சை பயங்கரவாத்தை காக்கவே பத்மநாதன் குரல் கொடுக்கிறார்.

    துரை

    Reply
  • www.defence.lk
    www.defence.lk

    Swarnam, Shashikumar master killed in confrontation – Military Spokesperson Swarnam and Shasikumar master, two senior LTTE terrorists were killed during confrontations ensued with security forces at Vellamullivaikkal, today (May 16), said Military Spokesperson Brigadier Udaya Nanayakkara exclusively reporting to media.

    Reply
  • A.Chandrakumar
    A.Chandrakumar

    இலங்கை அரசாங்கம் தமிழ்மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய தீர்வு ஒன்றை வழங்கினால் பின்னர் பிரபாகரனோ பொட்டம்மானோ கேபியோ எவர் தப்பினாலும் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிக்க முடியாது. அப்படி எவராவது முனனந்தால் மக்களே அவர்களை அடித்து சாக்காட்டி விடுவார்கள். அவ்வளவுக்கு புலிகள் மக்களை ஏமாற்றி விட்டார்கள்.
    இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு போதிய உரிமைகளை வழங்காதுவிட்டால் புலிகள் அல்லாத தமிழ்மக்கள் வேறுவழியில் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள். அது நிச்சயமாக ஆயுதப்போராட்டமாக இருக்காது.

    Reply
  • A.Chandrakumar
    A.Chandrakumar

    செல்வராசா பத்மநாதன் என்ற விலாசமற்ற நபரின் கூற்று கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வதைப் போன்றது. ஏனென்றால் தற்போது புலிகள் சர்வதேசத்தினாலும் இலங்கை வாழ் தமிழர்களாலும் நிராகரிக்கப் பட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் புலிகள் இன்று சேடம் இழுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் ஒரு சில தினங்களில் அவர்களின் கதை முடிந்துவிடும். இந்த உலகத்தில் எவருமே அவர்களின் மரணத்திற்கு கண்ணீர் விடப்போவதில்லை. ஏனென்றால் அவ்வளவு தூரம் புலிகள் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள்.

    Reply
  • tax
    tax

    செல்வராசா பத்மநாதன் என்ற விலாசமற்ற நபரின் கூற்று கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் ….
    விடுதலைப்புலிகளின் இருப்பே இவ்வளவு காலமும் கேபி என்ற ஒருவரின்நீண்டகால அர்ப்பணிப்பு என்பது தெரியவில்லை.கேபியின் விலாசன் 100க்கும் மேற்பட்டநாடுகளின் இன்ரலியன்ஸ்க்கு தெரியும்.

    பிரபாகரனுக்கு அடுத்த சக்தியாக அவர் எப்போதும் இருந்துகொண்டே தான் இருந்தார்.அதனாலேயே அவர் சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச உறவுகளுக்கான பொறூப்பாளராக முன் கூட்டியே பிரபாகரனால் பிரேரிக்கப்பட்ட அடுத்த புலிகளின் தலைவராக நியமிக்கப்பட்டதான சமிக்க்கையே இந்த நியமனம்.

    Reply
  • மாயா
    மாயா

    அனைத்தும் வன்னியில் அடங்கிவிட்டதாக தெரிகிறது.

    Reply
  • Thirumalaivasan
    Thirumalaivasan

    இலங்கையில் வாழும் தமிழரை விடவும் புகலிடம் புகுந்த நாட்டிலும் மிகுந்த வசதிகளோடு வாழ்பவர்கள் புலிகளின் முகவர்களேயென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இது புலி எதிர்ப்புக் கோஷ்டிக்கும் பொருந்தும் என்பதை துரை கவனிக்கவேண்டும்.

    Reply
  • dmx
    dmx

    புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்டார்கள். ஒருசிலரால் எதுவும் செய்யமுடியாட்கு. ஆகவே ஜனநாயகவாதிகளான நாம் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சிந்திப்போம். புலிகள் இழிந்த இன்றே நாம் மக்களுக்காக சேவையாற்ற உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க முகாம்களில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம். எமது ஜனநாயக தலவர் டக்கிளஸ் தலைமையில் தமிழ்மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுகொடுப்போம்.

    Reply
  • rooto
    rooto

    அதுசரி எனி தேசம் இயங்காதோ?? புலிகள் அழிந்துவிட்டதால் தேசத்திற்கு வேலை இல்லையே???.

    இனி அடுத்தகட்டமா பில்ளையான்,கருணா,மற்றும் டக்கியிக்குள்ள மோதல உருவாக்கிவிடவேண்டும் அப்பதானே தேசமும் சுவாரசியமாக இயங்கும்!!!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எறிகணை வீச்சு செல்லடி விமானக்குண்டுவீச்சு மக்களை கேடயம்மாக பிடித்து வைத்தல் தாகம் பசி பட்டினி போன்ற தமிழ்மக்களை பிடித்திருந்த அவலம் இன்றுஉடன் முடிவுக்கு வருகிறது. பணவளம் உள்ள புலம்பெயர் தமிழ்மக்கள் நொந்து நொடிந்து போன வன்னிமக்ளை தூக்கிநிறுத்துவதற்கும் நடக்கவிடுவதற்கும் உங்களால் முடிந்த பணஉதவிகளை வசதிகேற்ப தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை சென்றடைவதற்கு உடனடிஉதவி செய்வீர்களா?
    இதுவே ஈழத்து எம்இனம் எம்மை பார்த்து கேட்கும் கேள்வியாகும். இதுவே நாம் செய்யும் உடனடி அரசியல் தேவையுமாகும்.

    Reply
  • palli.
    palli.

    // இது புலி எதிர்ப்புக் கோஷ்டிக்கும் பொருந்தும் என்பதை துரை கவனிக்கவேண்டும்.//
    இப்படி ஒரு இனம் இருக்கா?? தமிழ் மக்கள் மீது சவாரி செய்பவர்கள் வரிசையில் புலிகள் முன்னுக்கு நிற்ப்பதாலும் தாம்தான் தமிழரை
    நாட்டாண்மை செய்ய வேண்டும் என் மற்றவர்களை தூக்கி போட்டு மிரிப்பதாலும் அவர்கள் மீது கடுமையான விமர்சனம் வருகிறது. புலியின் செயல்பாடாளர்களுக்கு இன்று கூட பணம் புலம் பெயர் தமிழர் கொடுத்த வண்ணமும் அவர்களும் எதோ புரியாத பாஸையில் சொல்லி வேண்டிய வண்ணமே உள்ளனர். அவர்களுடன் மற்றவர்களை ஒப்பிடுவது சரியானதா??

    வசதியாக வாழ்பவர்கள் யாரும் புலிக்கு எதிராக செயல்படுவதாக பல்லி அறியவில்லை. ஏன் ஒரு கடைகாரர் கூட புலிக்கு எதிரான செயல்களுக்கு உதவ மாட்டார்கள். இதுக்கு பலரை பல்லி உதாரனம் சொல்லும் ஆனால் அது தேசத்தின் நிர்வாகத்துக்கு தணிக்கை பிரச்சனை வரும் என்பதால் அதை தற்ப்போது எழுதவில்லை. புலிக்கு போகும் பணத்தில் (எனி தேவையில்லை என நினைக்கிறேன்)

    ஒரு வீதம் வன்னி மக்களுக்கு போனாலே அவர்கள் பசியில்லாமல் இருக்க முடியுமே. தயவு செய்து இனியாவது எமது கருத்து முரன்பாடுகளை ஒதுக்கி விட்டு வன்னி மக்களுக்காய் எம்மால் முடிந்ததை எதோ ஒரு வழியில் செய்வோம்.

    Reply
  • thurai
    thurai

    //இது புலி எதிர்ப்புக் கோஷ்டிக்கும் பொருந்தும் என்பதை துரை கவனிக்கவேண்டும்.//

    புலியை எதிப்பவர்கள் புலத்தில் பணம் சேர்ப்பதாக அறியவில்லை. அவர்களிற்கு இலங்கை அரசு பணம்கொடுக்கலாம். தமிழர்களை காப்பதாக் கூறி தமிழர்களிடம் பணத்தை மிரட்டிப் பறிப்பவர்க்ளே கொடுமையான்வர்கள்.

    துரை

    Reply