வணங்கா மண் பொறுப்பாளர் டாக்குத்தர் மூத்தியுடன் ‘பின்நவீனத்துவ’ நேர்காணல். : ஈழமாறன்

Vanni_Missionவணக்கம் தொப்புள் கொடி மற்றும் அரநாக்கொடி உறவுகளே. தொலைவார் தொலைக்காட்சியில் வாரம் தோறும் புலம் பெயர் சூழலில் இருக்கும் கோயில் சங்கம் என்று ஒரு அமைப்புக் கட்டி சுத்தும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைச் சந்தித்து பேட்டி காணும் நாம் இன்று மிக முக்கியமான ஒரு நபரைப் பேட்டிகாண உள்ளோம். (மூத்தியை இன்னும் திரையில் காட்டவில்லை.) ஆம் அவர் வேறு யாருமல்ல வணங்கா மண் என்ற படத்தின் இயக்குனர் டாக்குத்தர் மூத்தி அவர்களே. இன்று தனது ஆழமான அரசியல் கருத்தை பதுக்கி கொள்ள மன்னிக்கவும் பகிர்ந்து கொள்ள கலையகத்திற்கு வந்திருக்கிறார். (டாக்குத்தர் மூத்தி இப்போது சிரித்துக் கொண்டு திரையில் தோன்றுகிறார்.)

இழிச்சவாயன்: வணக்கம் டாக்குத்தர். நீங்கள் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் போது சிங்கள நிருவாகத்திற்கு அடிக்கடி காட்டிக் கொடுத்து பல இளைஞர்களுக்கு அடிவிழுவதற்கு காரணமாக இருந்திருக்கிறீர்கள் என்று நாம் அறிகிறோம். அதுபற்றிக் கூறமுடியுமா?

டாக்குத்தர்: என்னுடைய தலைவன் கரிகாலன் சோழன் தம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் தேசியத் தலைவன் பிரபாகரனின் வழிநடத்தலில் அரசியலுக்கு வந்த நான் அப்படிச் செய்ததில் என்ன தவறிருக்கிறது. வரலாறு தெரியாதவர்கள் செய்யும் பித்தலாட்டம் இது. இதைப் போய்க் குற்றம் என்று சொல்கிறார்கள். இளிச்சவாயன் தம்பி, இதிலை உமக்கு நான் ஒண்டு சொல்ல வேணும். வெலிக்கடையிலை இருக்கும் போது இந்தப் போராளிகள் தப்பிறதுக்குப் பிளான் பண்ணுவாங்கள். அவங்கள் தப்பினா இருக்கிற எங்களுக்குத்தான் அடி விழும். அதாலை தழிழீழத் தன்மான உணர்வோடை காட்டிக்குடுக்கிறதை விட வேறை வழி தெரியேல்லை எனக்கு. குட்டிமணி, தங்கத்துரை ஆக்களுக்கு என்ன தலைவர் செய்தாரோ அதையே தொண்டனும் செய்தேன்.

இழிச்சவாயன்: மிக அருமையான பதில். உங்கள் தலைவர் வன்னியில் இன்று மக்களை தடுத்து வைத்து என்ன செய்கிறாரோ, மக்கள் தப்பிப் போனா தனக்கு என்ன நடக்கும் என்று சோழன் வயிறு கலங்கி இப்படிச் செய்கிறாரோ, அதையே முப்பது வருடங்களுக்கு முன் அவரது தொண்டனாக இருந்து செய்திருக்கிறீர்களே உங்கள் தமிழீழ உணர்வை பார்க்கும் போது எனக்கு புல்லரிக்கிறது.

டாக்குத்தர்: சரியாகச் சொன்னீர்கள் தம்பி இழிச்சவாயன்.

இழிச்சவாயன்: நேயர்களே இன்று நாம் வணங்கா மண் படத்தின் இயக்குனர் டாக்குத்தர் மூத்தியை கலையக்தில் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் கீழே கிடக்கும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு டாக்குத்தரிடம் உங்களின் கருத்துக்களையும் பறிகொடுக்கலாம். மன்னிக்வும் டாக்குத்தரை கண்ட நேரம் முதல் எல்லாமே சுத்துமாத்து சொற்களாகவே வருகிறது. பறிகொடுப்பதில்லை. பகிர்ந்து கொள்ளுங்கள்.

இழிச்சவாயன்: வன்னியில் நடக்கும் துயரங்களுக்கு பதில் சொல்வது போல நீங்கள் எடுத்திருக்கும் படம் வணங்கா மண். அதற்கு புலம் பெயர் மக்கள் அள்ளிக் கொடுத்திருக்கும் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன். அதைப் பற்றிச் கொஞ்சம் சுத்த முடியுமா. மன்னிக்கவும் சொல்ல முடியுமா?

டாக்குத்தர்: அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கிறியள். நாசாமாய்ப் போன சனம் ஆஸ்டாவிலையும் ரெஸ்கோவிலையும் போய் சாமானை வாங்கிக் கொண்டு வந்து குடுத்திருக்குதள்.

இழிச்சவாயன்: அதெல்லாம் பெரிய கடையள். நல்ல பொருட்களாய்த்தானை இருக்கும்.

டாக்குத்தர்: சாமான் எல்லாம் நல்லதுதான். ஆனா வேறை இடங்களிலை கொண்டுபோய் எப்பிடி விக்கறிது? அதெல்லாம் விக்கிறதுக்கு நோர்வேய் வரைக்கும் கொண்டு போக வேண்டியதாய் போச்சு.

இழிச்சவாயன்: ஏன் விக்கவேணும?; உங்கட படக் கதையின்படி அது வன்னிக்குப் போய், வன்னியிலை உங்கட தலைவர் கைவிட்டு ஒடிப் போன மக்களுக்கு குடுக்கிறது தானை முடிவு. பிறகேன் டாக்குத்தர் விக்கவேணும்?

டாக்குத்தர்: வன்னி மக்களுக்கு சாமான் அனுப்பிற மாதிரித்தான் வெளிப்படையா பாத்தா தெரியும். ஆனா நான் வைச்சிருக்கிற ருவிஸ்ற் என்ன தெரியுமோ? வாற சாமான் எல்லாத்தையும் வித்து வீட்டு மோட்கேச்சை கட்டி முடிக்கிறதுதான். இந்த நாசமாப் போன சனம் என்னெண்டா ரெஸ்கோ ஆஸ்டா என்டு சீலடிச்ச சாமானை வாங்கித் தந்திருக்குதுகள். ஒரு இடத்திலையும் விக்க முடியாம கராச்சில போட்டு வைத்திருக்கிறேன். சொஞ்சம் டென்மர்க் நாட்டுக்கும் கொஞ்சம் நோர்வேக்கும் போயிருக்கு. மிச்சம் எல்லாம் மிச்சம் என்ற இடத்திலை இருக்கிற ஒரு கடையிலை விற்பனைக்குப் போட்டிருக்கு. வணங்கா மண்ணா கொக்கா?

இழிச்சவாயன்: நல்லது டாக்குத்தர். நீங்கள் மணிரத்தினத்தையும் விட நுணுக்கமாக காய் நகர்த்தியும் மக்கள் உங்களைவிட புத்திசாலிகளாக இருந்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. நேயர்களே வன்னியில் எங்கள் மக்கள் தாங்கொணாத் துயரில் வாழும் இந்த வேளையில் டாக்குத்தர் மூத்தி வணங்கா மண்ணுக்காக செய்திருக்கும் தியாகங்கள் எண்ணிலடங்காது. இன்றைய இந்த அவலங்கள் தொடர்பாகவும் பேச இருக்கிறோம். வன்னி மக்கள் தொடர்பாக ஒரு பாடல் காட்சியைத் தொடர்ந்து நேர்காணல் தொடரும்

பாடல்: அடிடாங்க நாக்க மூக்க நாக்க மூக்க……..மூத்தி வந்தான். பேரை வைச்சான். பேரை வைச்சு காசு கேட்டான். அடிடாங்க நாக்க மூக்க. அட அடிடாங்க நாக்க மூக்க…. வெள்ளைப்புறா பறக்க விட்டான். கொள்ளை பணம் மடக்கி விட்டான். வன்னியிலை அண்ணைக் கெண்டு அடிடாங்க நாக்க.. மூக்க நாக்க மூக்க……என்ரை புள்ளை மெடிசின் செய்ய உன்ரை புள்ளை பாளிமெண்டில் அடிடாங்க நாக்க மூக்க. அட அடிடாங்க நாக்க மூக்க….

இழிச்சவாயன்: ஒரு அருமையான பாடலைத் தொடர்ந்து டாக்குத்தர் மூத்தி இந்த வணங்கா மண் கதை எவ்வளவு காலமாக உங்கள் மனதில் இருந்தது என்று சொல்ல முடியுமா?

டாக்குத்தர்: நான் வீடு வாங்கிய காலத்தில் இருந்து இந்த யோசனை இருந்தது. எதுக்கும் ஒரு காலம் வரவேணும் பாருங்கோ. எத்தினை படம் செய்திருப்பன். ஓரு படத்திற்கும் சனம் இவ்வளவு ஆதரவு தரேல்லை. வணங்கா மண் என்னைப் பொறுத்தவரையில் ஜரோப்பா கனடா என்று எல்லா நாடுகளிலும் நல்ல கிட். அதுதான் நான் இப்ப சாபம் போன்ற ரீவியளிலை வாறதைப் பாக்க மாட்டியள்.

இளிச்சவாயன்: நல்லது. இப்போது சாம்பொண்டில் தொலைக்காட்சியில் இருந்து முகட்டுக் கவிஞன் உத்தரக் கவிஞன் இணைப்பிலிருக்கிறார். வணக்கம். கலோ வணக்கம். குறுக்கால போக வணக்கம்.
உத்தரக்கவிஞன்: டாக்குத்தரிட்டை ஒரு கேள்வி.

இளிச்சவாயன்: கேளுங்கோ. நீங்கள் தானே அந்த முகட்டைப் பாத்துக் கொண்டு வன்னி மக்கள் தொடர்பா கவிதை வாசிக்ற கவிஞன்.

உத்தரக் கவிஞன் : ஆமாம் அது நான் தான். இன்றும் டாக்குத்தரைப் பற்றி ஒரு கவிதை வாசிக்க இருக்கிறேன்.

இழிச்சவாயன்: அருமை. டாக்குத்தரிடம் நேரடியாகவே கேள்வியைக் கேளுங்கள்.

உத்தரக் கவிஞன்: உங்களுக்கு ஞபகம் இருக்கோ தெரியாது. நீங்கள் வெலிக்கடைச் சிறையிலை இருக்கும்போது, வெறும் ஆயுள்வேதி டாக்குத்தர் தான். பிறகு வெளியிலை வந்து ஒரு வருடம் இந்தியாவில நிண்டியள். பிறகு ஒரே ஓட்டமாய் லண்டனுக்கு வந்திட்டியள். லண்டனுக்கு வந்த கையோட மூத்தி பிஎச்டி எண்டு போடுறியள். இவ்வளவு கெதியா கலாநிதிப் பட்டம் குடுக்கிற பல்கலைக்கழகம் எங்கை ஜயா இருக்கு. எனக்கும் டொக்டர் எண்டு பொடக் கனநாளா ஆசை. இப்ப டொக்டர். புறபெசர். எண்டு சொன்னாத் தான் கொஞ்சம் காசு சுருட்ட வசதியா இருக்கும்.  சிலவேளை சுருட்டுவதில் தலைசிறந்தவர் என்பதற்காக உங்களுககு கௌரவப் பட்டம் ஏதேனும் கிடைச்சதோ அதை ஒருக்கா உங்கட பாதுகாப்பா இருக்கிற புள்ளையளாணை உண்மையைச் சொல்லங்கோ.

டாக்குத்தர்: வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப் படுகிறார்கள். எமது போராளிகள் வெறும் அலவாங்கினாலும் கருங்காலிக் கொட்டனுகளாலுமே மக்களை போட்டுத் தாக்குவார்கள். அரசாங்கமோ ஆட்லறியால் அடிப்பது கண்டிக்கப்படவேண்டும். வணங்கா மண் அதனையே இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டுகிறது.

இளிச்சவாயன்: கவிஞரே இணைப்பில் இருக்கிறீர்களா?

உத்தரக் கவிஞன்: நான் என்ன கேக்கிறன. டாக்குத்தர் என்ன சொல்லிறார். டொக்டாமாரின்ரை தொல்லை பெரும் தொல்லையா இருக்கு. அண்ணை இழிச்சவாயன் அண்ணை… கவிதையை வாசிக்கட்டோ:

இளிச்சவாயன்: வாசியுங்கோ

உத்தரக்கவிஞன்:
வெலிக்கடைச் சிறையில்
அடிக்கடி நீங்கள்
கொடுத்த தகவலில்
நூறு இளைஞர்கள்
தாறுமாறாகத் தாக்கப் பட்டனர்.
உங்கள் தலைவன் போலவே
கூட்டுச் சேர்வதும்
காட்டிக்கொடுப்பதும்
தமிழீழ தலைநகர் மைந்தா
உன்னால் சிறையில்
பலர் சிந்தினர் ரத்தம்
உன்தலையால் வன்னியில்
வாழ்விழந்தனர் பல லட்சம்

தலைவர் சிரிக்க
தலைவற்றை பிள்ளைகள்
நீச்சல் குளத்திலே குளிக்க
வன்னிப் பிள்ளையள்
பள்ளம் மேடெல்லாம்
பிணமாக் கிடக்க
நாலைஞ்சு போட்டோ
குளோசப் வேறை.

எடுத்த கையோடை லண்டன் பறந்து வந்து
அக்குபஞ்சர் ஊசியும் போட்டாய், குள்ளச் சோழனே
வணங்கா மண் காசெல்லாம் சுருட்டியும் போட்டாய்
புலம்பெயர் மக்களுக்கு
புதுக்கதையும் சொல்கிறாய்
டாக்குத்தா….. இது என்ன நாட்டுக் கூத்தா

இளிச்சவாயன்: நல்லது உத்தரக் கவிஞன். நீங்கள் முகட்டைப் பாக்கத் தொடங்கிட்டியள் போல கிடக்கு. இனி நிப்பாட்டமாட்டியள். உங்கள் கவிதையை சாம்பொண்டில் தொல்லைக் காட்சியில் தொடருங்கள்.

இளிச்சவாயன்: நல்லது டாக்குத்தர். உங்களுக்குத் தெரியும் ஜமுனா ராஜேந்திரன்.

டாக்குத்தர்: சினிமா விமர்சகர்…

இளிச்சவாயன்: ஆமாம். அவரே தான். அவர் உங்களுடைய வணங்கா மண் படம் பற்றிய விமர்சனத்தில் சொல்கிறார் டாக்குத்தர் மூத்தி வணங்கா மண் கப்பலை விடுறமாதிரி பாவனை காட்டி காசு பொருள் எல்லாம் சேத்தபிறகு கப்பலையும் காட்டாமல் காசு சுருட்டின கீரோவையும் சாம்பொண்டில் தொல்லைக் காட்சியில் தலை காட்டாமல் காசு கொடுத்தவர்களை அம்போ என்று விடும் முடிவு பின்நவீனத்துவத்தை திருப்பிப்போட்டு எடுத்தபடம் என்றும் கார்ல் மாக்சினுடைய காலுக்கும் மாவோவின் மண்டைக்கும் உள்ள அடிப்படை முரண்பாடுகளை மேலோட்டமாக எடுத்துச் சொல்லும் படம் என்று கூறியிருக்கிறார். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

டாக்குத்தர்: இதற்கு பதில் சொல்ல முதல், நான்  முதலில் இயக்கிய வெண்புறா படம் பற்றி சிறிது சிலாகிக்க வேணும். வெண்பறா படம் தொடங்கிய போது சில நண்பர்கள் சொன்னார்கள் அந்தப் படத்தின் கதையும் களமும் வேறாக இருப்பதால் அவ்வளவாகச் சம்பாதிக்க முடியாது என்று. நான் அவர்களின் பேச்சைக் கேட்காது படத்தை எடுத்தேன். கொமர்சியல் சக்சர்ஸ் என்று சொல்ல முடியாது. ஆனால் என் திட்டத்தின் படி வீட்டை அகட்டிக் கட்ட முடிந்தது. இந்த அனுபவம் ஒரு சுத்துமாத்து படைப்பாளி என்ற முறையில் எனக்கு நல்ல பாடத்தைக் கொடுத்தது. இனி எடுக்கும் படத்தில் இந்தத் தவறை விடக்கூடாது என்று காத்திருந்த போதுதான் வன்னி மக்களின் அவலம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. உடனே நல்ல தலைப்பொன்றுக்காக ஒரு நாள் முளுக்க நித்திரை இல்லாம இருந்து யோசிச்சன். அப்போது கிடைத்த பெயர்தான் வணங்கா மண். ஜமுனா சொன்னமாதிரி பின்நவீனத்துவத்தை பின்னிப் போட்டு கார்ல்மாக்சை கரைச்சு  தெளிச்சு வணங்கா மண் என்று எடுத்தேன். நல்ல கலக்சன். அதிலை ஒரு பகிடி என்ன தெரியுமோ? கப்பல் இப்பவும் வன்னிக்கு போய்கொண்டிருக்கெண்டு சொல்லிற சனமும் இருக்கு. தலைவர் உள்ளுக்க விட்டு அடிப்பார் எண்டு சொன்னமாதிரி.

இளிச்சவாயன்: நான் நினைக்கிறேன். ஜேர்மனியில் இருந்து ஒரு நேயர் அழைப்பில் இருக்கிறார். வணக்கம். கலோ வணக்கம்

அழைப்பு: வணக்கம். டாக்குத்தரோடை கதைக்கலாமோ?

இளிச்சவாயன்: தாராளமா? உங்கள் கேள்விகளை தயவு செய்து சுருக்கமாக கேளுங்கள்.

அழைப்பு: டேய்…… மகனே….. ஆண்டி….. றிங்ஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙங

இளிச்சவாயன்: அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். தயவுசெய்து அழைப்பவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். உங்கள் ஆத்திரம் புரிகிறது. அதற்காக அசிங்கமான வார்த்தைகளில் தயவு செய்து திட்ட வேண்டாம். வேண்டுமானால் மூத்தியின் வீட்டு முகவரியைக் கொடுக்கிறோம். அங்கு போய் படத்தின் முடிவில் ஏண்டா நாயே கப்பல் வன்னிக்குப் போகவில்லை என்று புலிப் பாணியில் கேட்டாலும் சரி. பின்நவீனத்துவ முறையிலை கேட்டாலும் சரி. அது உங்களுடைய பொறுப்பு. பணம் கொடுத்தவர்கள் அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது. என்று கேட்கத் தவறுவதால் தான் தவறு செய்பவர்கள் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே செல்கிறார்கள். தயவு செய்து பாராளுமன்றத்திற்க்கு முன் செய்யும் ஆர்ப்பாட்டத்தைப் போல வணங்கா மண் இயக்குனரின் வீட்டுக்கு முன்னும் செய்யத் தயங்க வேண்டாம்.

இளிச்சவாயன்: இறுதியாக ஒரு கேள்வி. இந்த இங்கிலண்ட் பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்யிறவை பிள்ளையளைப் பள்ளிக்கூடத்துக்கு போகவேண்டாம். படிப்பு முக்கியம் இல்லை. எல்லாரும் வந்து போராடுங்கோ எண்டு சொல்லுகினம். நீங்களும் அதுக்கு பூரண உடன்பாடு எண்டு செல்லிறியள். அப்ப ஏன் உங்கட பிள்ளையளை போராட்டத்திற்கு அனுப்பேல்லை.

டாக்குத்தர்: தலைவரை பின்பற்றிறதிலை என்னை விட்டா வேறை ஆள் கிடையாது. தலவைர் என்ன செய்தவர். தன்ரை பிள்ளையளை வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டு, வன்னிப்பிளளையளை கிடங்கு வெட்டி கழுத்தளவு வெள்ளத்திலை காலுக்கு செருப்புக் கூட இல்லாம அடிபட்டுச் சாக விட்டமாதிரி லண்டனிலையும் இந்த நாசமாப் போவாற்றை பிள்ளையளின்ரை படிப்பைக் கெடுத்து தெருவிலை விட்டிட்டு நான் என்ரை பிள்ளையளை ஒழுங்கா பள்ளிக்கூடம் அனுப்பிட்டன்.
 
இளிச்சவாயன்: தமிழ் மக்களின போராட்டத்தை விளையாட்டு மைதானமாக்கி விதை நிலமாக்கி வியாபாரமாக்கி லாபம் ஈட்டி மக்களை மாக்களாக்கிய வரலாறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வணங்கா மண்ணுக்குப் பிறகு அடங்கா பற்றுத் தொடங்கியிருப்பதாக கேள்ளிப் படுகிறோம். புடுங்காத் தமிழன் என்று இன்னொரு நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை அன்பு வணக்கங்கள்.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

19 Comments

  • muthu
    muthu

    கலோ டாக்குத்தர் உந்த வணங்காமண் சாமான்களை எட்மன்ரன் கோல் சேல் கடையில வைச்சுக் கொண்டு நாங்க கடைக்கு சாமான் வாங்க்பபோற நேரமெல்லாம் இந்த சாமான்களை உங்கட கடையில வைச்சு விக்கமாட்டியளோ எண்டு ஒரோ குரங்குப்பிடி தெலைவார் எல்லாத்தையும் தொலைச்சுப்போட்டு இப்ப எங்களை உளளுக்க தள்ளுற வேலையையும் பார்க்கிறாக ஆஸ்டா/ரெஸ்கோ சாமான்னளை எங்கட கடகளில வைச்சு விக்க ஏலாது எண்டதும் அட சனியன் பிடிச்சவங்கள் எண்டு தலையில அடிக்கிறாக ஏன் டாக்கு ஒரு ஊசியை கீசியை போட்டு உதை பேக்காட்டேலாதோ?

    சரி நான் பாக்கிறன் ஒரக்கா வந்து சந்தியுங்களேன் ஒரு 6 மாதம் மருந்து தாரன் எல்லாம் சரிவரும்/

    Reply
  • hazan
    hazan

    உந்த மண்
    எங்களை கெடுத்த மண்
    காசை கரியாக்கிய மண்
    மண்ணை பொசுபரசாக்கிய மண்
    மனிசரை மண்ணோட மண்ணாக்கிய மண்

    இப்ப எங்க நிக்கிற மண்
    தப்பி வந்த மக்களுக்கு உதவாத மண்
    தொலைவார் தொலைத்த மண்
    ஜயோ பசிக்குது கேட்ட மண்
    எந்த கடையில விக்கிற மண்

    ஆற்ற தலையில இடி விழப்போதோ
    மண்ணாய்ப்போக வணங்கா மண்
    இனி எண்டாலம் மண்டைதிறக்க வைக்கும் மண்
    போதும் உங்கட வெளிநாட்டு மண்
    எங்கள நிம்மதியா இருக்க விடுங்கோவண்

    உங்களக்கு ஈழம் வேணுமெண்டால்
    கொண்டுவாங்கோ உங்கட பிள்ளைகளை
    வேண்டாம் வணங்காமண்
    ஆமி நேவி தார சோறு போதும்
    வேண்டாம் வணங்காமண்.

    Reply
  • vithusha
    vithusha

    கப்பல் கட்டாயம் போய் சேரும் என்பது பணம் கொடுத்தவர்களுக்குத் தெரியும். வெட்டிப் பேச்சுப் பேசுபவர்களுக்கு அவசியமற்றது.

    Reply
  • padamman
    padamman

    டாக்குத்தர் உண்மையில் மானம்? இருந்தால் தேம்ஸ் நதியில் நக்கைபிடித்துக் கொண்டுவிளுங்கள்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்தப் பேட்டியை தேசம்நெற்றில் சபாநாதன் படித்துக் கொண்டிருக்கும் போது மூர்த்தி உள்ளே நுழைகின்றார். அப்போது மூர்த்தியைப் பார்த்து ஆத்திரத்துடன்

    சபாநாதன் : அடபாவி மூர்த்தி வணங்காமண் திட்டத்தை நாம் ஆரம்பித்த போது, என்னைத் தானே பொறுப்பாளராக எல்லோரும் தெரிவு செய்தார்கள். இப்ப எப்படி நீ தான் பொறுப்பென்று பேட்டி கொடுப்பாய்? மொத்தமாக நீயே சுருட்டும் நோக்கமா?

    மூர்த்தி : அட அட பொறப்பா உனக்கு இந்தச் சுருட்டலில் அனுபவம் பத்தாது. நீ தான் பொறுப்பாளர் எண்டு யாராவது கேள்வி கேட்டால், எப்படி மழுப்புவது என்று தெரியாது முழிப்பாய். அதனால்த் தான் நான் தான் பொறுப்பாளரெண்டு பேட்டி கொடுத்தேன்.

    சபாநாதன் : பேட்டி மட்டும் தானா அல்லது முழுவதுமாய் சுருட்டும் நோக்கமா??

    மூர்த்தி : நான் அப்படித் துரோகமெல்லாம் செய்ய மாட்டேன். எனக்கெடுத்தது போக மீதமிருந்தால், மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிப்பேன்.

    சபாநாதன் : ஆஆஆஆஆ

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //கப்பல் கட்டாயம் போய் சேரும் என்பது பணம் கொடுத்தவர்களுக்குத் தெரியும். வெட்டிப் பேச்சுப் பேசுபவர்களுக்கு அவசியமற்றது.- vithusha//

    ஆமா இதே தேசம்நெற்றில் நீங்களே எத்தனை தரம் வணங்காமண்ணை அனுப்பி வைச்சிட்டீங்க. எனியும் அனுப்பி வைப்பீங்க. என்று திருந்தப் போகின்றீர்கள்??

    Reply
  • Poddu
    Poddu

    ”ஈழத்தமிழ் இளைஞனாகிய கீரன் அரசரட்ணம் என்பவர் தமிழ் இனப்படுகொலையை உலகின் கண் நிலை நிறுத்துவதற்கான கவனஈர்ப்பு நடவடிக்கையாக ஆபிரிக்காவின் மிக உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோவின் சிகரத்தில் ஏறி நின்று ஈழத்தமிழர்களை காக்கும் படி உலகிற்கு அறைகூவல் விடுத்திருக்கின்றார். இவ் வெற்றிகரப் பயணத்திற்காக ஐரோப்பிய வெள்ளையின மக்கள் வழங்கிய அன்பளிப்பு 30 ஆயிரம் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்சுகள் பணத்தினை வன்னி மக்களின் வணங்காமண் துயர்துடைப்பு கப்பல்ப் பயணத்திற்கு வழங்கியிருக்கிறார்.”

    இழிச்சவாயன் தம்பி இந்த விசயத்தையும் ஒருக்கா கேட்டுச் சொல்லுங்கோ.

    Reply
  • kamala
    kamala

    ஈழமாறன் இங்கு சொல்லியிருக்கும் விடயங்கள் எந்தளவுக்கு உண்மையானவை என்று தெரியவில்லை.ஆனால் அவர் சொல்லியிருக்கும் விதம் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.ஒவ்வொரு வரிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.ஈழமாறனுக்கு ஒரு ரசிகர் மன்றம் வைத்தால் என்ன என்று எண்ணத்தோன்றுகிறது.வேறு சிலரும் இப்போது காசு சேர்ப்பதாக கேள்வி.இதே ரேஞ்சில் தங்களையும் ஈழமாறன் பேட்டி கண்டுவிடுவாரோ என அவர்கள் அச்சப்படக்கூடும்!

    Reply
  • PR
    PR

    மூர்த்தி வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது நானும் சில காலம் உள்ளே இருந்தவன்.மூத்தியின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டவன். மேலே சொல்லப் பட்டிருக்கும் விடயம் 100 வீதம் உண்மையானது. லண்டனில் இருக்கும் சில நண்பர்களும் என்னுடன் கூட இருந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களும் கூட.

    Reply
  • palli.
    palli.

    உன்மையில் இந்த மூர்த்தி போன்றோர் மீது வழக்கு தொடர வேண்டும். புலம் பெயர்நாட்டில் அகதியாக வாழும் எம்மிடம் பணத்தை புடுங்கி பிறந்த நாட்டிலேயே அகதிகளாக்கபட்டு துன்புறத்தபடும் மக்களுக்கு கொடுப்பதாக சொல்லி அதை தமிழக சீட்டு கம்பனிகள் போல் சுருட்டுவது ஒரு பிச்சைகாரனிடம் திருடுவதுக்கு சமன். இவர்கள் மீது வழக்கு தொடரபட்டு குற்றவாழிகழாக நிருபிக்கும் பட்ச்சத்தில் இவர்களை போன்றோரை அடுத்தமான்(அந்தமானல்ல) தீவுக்கு தமிழ்சமுதாயம் இருக்கும் வரை சிறை வைக்க வேண்டும். என்னமாய் திருடுறாங்க.

    Reply
  • PIRABHAKARAN
    PIRABHAKARAN

    VANANGA MANNS CHIEF CORDINATING OFFICER MR BHARATHAN (THIRD EYE) TOLD TO MATE THAT THEY HAVE SOLD ONLY OIL BECAUSE IT WILL SPOILED OTHER STUFF WHILE THE SHIP IS MOVING

    Reply
  • A.Chandrakumar
    A.Chandrakumar

    மூத்தியின் பம்மாத்து வித்தையை நம்பி ஐரோப்பவில் தனிநபர்கள் மட்டுமல்ல பல பொது அமைப்புகளுமே பணத்தையும் பொருட்களையும் கொடுத்துள்ளன. இந்த விஷயம் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதைக் கூறியவர்கள் தமிழின விரோதிகளாகப் பார்க்கப்பட்டார்கள். ஆனால் வணங்காமண் ஒழுங்கமைப்பாளர்கள் தமிழினத் துரோகிகள் என்பது, தற்போது அவர்கள் மக்களுக்கு எந்த விளக்கமும் கொடுக்கமல் மௌனம் சாதிப்பதன் மூலம் தெரிய வந்துள்ளது.

    கல்வியில் எட்டாம் வகுப்பைத் தாண்டமுடியாதவர் ஈழம் பெற்றுத் தருவார் என்று நம்பி முட்டாளாகிய புலி ஆதரவாளர்கள் மீண்டும் ஒருமூறை மூர்த்தியிடம் ஏமாந்த சோணகிரி ஆகியுள்ளார்கள்.

    Reply
  • வடிவேலு
    வடிவேலு

    அன்பான வணங்கா மண்ணுக்கு வாரியிறைத்த வள்ளல்களே ஏன் தான் டாக்டர் ஜயாவை உந்த திட்டு திட்டிறீயள். மூர்த்தி கேட்டாப்போல உங்களுக்கெண்டொரு மூளையில்லையா? மூர்த்தி வண்டவாளம் விளங்கிதோடை பிரான்சிலையிருந்தொருவர் வணங்கா புகையிரதம் விட வெளிக்கிட்டவர் மெல்லமர்ந்திட்டார்;

    Reply
  • Velu
    Velu

    Dear Comrade,It is Very interesting .Try to continue in this way.It may be more effective than the writting big essays. Thanks

    Reply
  • vithusha
    vithusha

    டொக்டர் மூர்த்தி போன்றவர்கள் தமிழர்களுக்காக தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்கள். அவர்களை அவமதிப்பது சரியாகாது.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சேர்த்த பணத்தையும் பொருனையும் வன்னிமக்களுக்கு உடனடியாக சென்றடைவதற்கு உதவியாக இருப்பீர்களேயானால் மூர்த்தியின் பெருமையும் நீங்கள் சொல்வதையும் நாம் நம்புவதற்கு தயாராக இருக்கிறோம். மற்றும்படி உங்கள் வார்த்தைகள் எல்லாம் வெறும் “வாய்யடியே” விதுஷா.

    Reply
  • palli.
    palli.

    மூர்த்தி மீது எமக்கு எந்தவிதமான முன் விரோதமும் கிடையாது. ஆனால் அவர் செய்யும் தவறுதலான செயல்மீது எமது விமர்சனம் வருவது தவறா? வணங்கா மண். இந்த பெயரை வைத்தவுடனேயே இது கப்பலோட்டிய தமிழன் திரைகதை என்பது பலரும் அறிந்ததே. அதனால் அந்த பட விமர்சனம் சிறிது சூடாகவே போகிறது. விதுசா எம்முடன் மல்லுகட்டுவதை விட்டு சேர்த்த பொருள்கள் எல்லாம் தேதி முடிவடைய போகிறது. அதை ஏதாவது ஒரு வழியில் வன்னி மக்களுக்கு அனுப்ப முடியுமா என மூர்த்தியுடன் மல்லுகட்டுங்கோ. சைக்கிள் ஓட்ட தெருயாதவன் எல்லாம் கப்பல் ஓட்ட ஆசைபட்டால்…….???

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Vithusha நீங்களும் மூர்த்தியோடு சேர்ந்து நிறையத் தியாகங்கள் செய்து விட்டீர்கள் போல. அதனால்த் தான் மூர்த்தி பற்றி எழுதும் போது தங்களுக்கு BP எகிறுகிறது. நாங்கள் எழுதுவதே மூர்த்தியின் தியாக வரலாறு தானே…..

    Reply
  • kosompo
    kosompo

    நாங்கள் நம்பிக்கொண்டெல்லே இருந்தனாங்கள் ஜெயலலிதாவின் உடன்படிக்கையுடன் குடாவுக்குள் கப்பல்போட்டுது என்று. இப்பதானே தெரிகிறது லண்டனை விட்டு வெளிக்கிடேல்லை என்று. இங்கு சென்னார்களே மே 14 கப்பல் சரக்குகளை ஐசிஆர்சி யிடம் ஒப்படைக்கும் என்று. இவங்கள் மகா பொய்யனுகளப்பா மகாபொய்யனுகள்.

    Reply