மீள்குடியேற்றம், அபிவிருத்தி, பாதுகாப்பு: – வடமாகாணத்துக்கு ஜனாதிபதி செயலணி

nor.jpgவட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்கென முழு அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். 19 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதன் செயலாளராக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய அமைச்சர்களின் செயலாளர்கள், பிரதான பாதுகாப்பு அதிகாரி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஆணைக்குழு, நிறுவனங்களின் முக்கியஸ்தர்களைக் கொண்டதாக இச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஜனாதிபதி செயலணியின் முதலாவது அமர்வு நேற்று அதன் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியினூடாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் புனர்வாழ்வளித்தல், வடமாகாண பொருளாதார, சமூக, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை வகுத்தல், அவற்றை செயற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புகளை செய்தல். மேற்படி நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அரச பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளல்.

குறிப்பிட்ட மாகாண அதிகாரிகள், உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களை கண்காணித்தல்.முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அரச தனியார், மற்றும் தனிப்பட்ட நபர்களின் சமூகத்தின் ஒத்துழைப்பை பெறுவதும், ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதலும்.

மேற்படி செயலணியின் உத்தியோகபூர்வ பணிப்புரைகளை, உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், தடைகளுக்கு உடனடி தீர்வு காணவும் உடனடியாக மாற்று வழிகளை கண்டறியும் விதத்தில் ஜனாதிபதி செயலணி செயற்படும். வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்னெடுப்பதில் ஏற்படும் முன்னேற்றங்களை அவ்வப்போது ஆராய்தலுடன் தேவையேற்படும் பட்சத்தில் உடனடியான மாற்றங்கள், திட்டங்களை நடை முறைப்படுத்துவதும் மேற்படி செயலணியின் கடமையாகும். இதேவேளை செயலணியின் நடவடிக்கைகள், முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அவ்வப்போது அறியத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன் மேற்படி செயலணியின் நடவடிக்கைகளின் போது உதவிகள் அல்லது சரியான தகவல்கள் கேட்கப்படும் பட்சத்தில் தவறாது சரியான தகவல்களையும் தாமதமின்றி வழங்க வேண்டுஎனவும் சகல அரச ஊழியர்களுக்கும் இத்தால் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு அரச ஊழியரோ அல்லது எந்தவொரு அமைச்சிலோ, அரச திணைக்களமோ, அரச கூட்டுத்தாபனமோ, அல்லது இவ்வாறான நிறுவனங்களிலுள்ள ஊழியர் எவரோ நியமிக்கப்பட்ட செயலணியின் மூலம் வழங்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புக்களையும், தவறவிடுவாராயின், அவ்வாறு அவர் தவறவிட்ட சந்தர்ப்பங்களை உடனடியாக தமக்கு அறியத்தர வேண்டும் என்றும் செயலணிக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு வழங்கப்பட்ட ஆணைக்கமைய செயற்பட்டு தனது செயற்பாடுகளை பூர்த்தி செய்த பின்பு ஒருவருட காலத்தினுள் தமக்கு அறிக்கையிடுமாறும் ஜனாதிபதி செயலர் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலணி குழுவில் அங்கம் வகிப்போர் விபரம் வருமாறு:- 1. பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் 2. லலித் வீரதுங்க ஜனாதிபதி செயலாளர் 3. கோத்தாபய ராஜபக்ஷ செயலாளர் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு 4. சுமித் அபேசிங்க செயலாளர் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு 5. யூ.எல்.எம். ஹால்தீன் செயலாளர் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு 6. டபிள்யூ.கே.கே. குமாரசிறி செயலாளர் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு 7. எஸ். அமரசேகர செயலாளர் வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு 8. எம்.எம்.சி. பேர்டினன்டோ செயலாளர் மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு 9. ஜே.ஆர்.டபிள்யூ. திஸாநாயக்க செயலாளர் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு 10. டாக்டர் அதுல கஹந்தலியனகே செயலாளர் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் போஷாக்கு அமைச்சு
11. எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா பிரதான பாதுகாப்பு அதிகாரி 12. லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதி 13. வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதி 14. எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க விமானப் படைத் தளபதி 15. ஜயந்த விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபர் 16. ரியர் அட்மிரல் சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் 17. மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி இராணுவ பிரதான அதிகாரி வட மாகாணத்திற்கான தகுதிவாய்ந்த அதிகாரி 18. எஸ். பி. திவாரத்ன அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் 19 டீ. அபேயகுணவர்தன முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேசிய திட்டமிடல் திணைக்களம்

Show More

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • msri
    msri

    ஐனாதிபதி செயலணிக் குழுவல்ல> வடபகுதிக்கான ஓர் மந்திரி சபையையே அமைத்திருக்கின்றார்! அதுசரி இதில ஐனநாயக நீரோட்டக்காரர்கள்+வடக்கின்வசந்தக்காரர்கள் (டக்கிளசு ஆனந்தசங்கரி) ஒருவரையுமே காணவில்லை! இவர்கள் செயலணிக்கு செயலாற்ற தகுதியற்றவர்களோ? இதுபற்றி புலம்பெயர் ஈ.பி.டி.பி. பற்றாளர்கள் எதாவது அபிப்பிராயங்கள்!…………

    Reply
  • thaya
    thaya

    ஏற்கனவே வடக்கு மக்களுக்கான வஷேட செயலணி அமைக்கப்பட்டிருக்கிறது அதன் தலைவராக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளார். அவருடன் பசில் ராஐபக்ச மற்றும் பதியுதின் ஆகியோரும் அந்த குழுவில் உள்ளனர்.

    இப்போது அமைக்கப்பட்டிருக்கும் இக்குழுவினர் அமைச்சரவை அங்கீகாரம் பெற வேண்டுமாயின் டக்களஸ் தேவானந்தா அவர்கள் மூலம் அல்லது ஐனாதிபதி மூலமே மெுற்கொள்ள முடியும். இவ்வாறு இன்று நடை பெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுடனான சந்திப்பின் போது பசில் ராஐபக்ச அவர்கள் தெரிவித்துள்ளார்.

    Reply
  • msri
    msri

    வடக்கின் இனச்சுத்திகரிப்பிற்கு (19பேரினவாதிகள் புடைசூழ)டக்கிளசு விசேட செயலணித் தலைவராக புறப்பட்டுளார்! உங்களின் வடக்கின் வசந்தம் புதுக்கோணம் ஓனறின் ஊடாக புறப்டுகின்றதோ? இப்பயணம் நீணடதூரம் பயணிக்காது! தமிழ்மக்கள் தடுத்தே நிறுத்துவார்கள!

    Reply
  • palli.
    palli.

    மரி 30 வருடமாய் ஏமாற்றும் ஒரு கும்பலை தாங்கள் நம்பும் போது. தற்ப்போதுதான் ஏமாத்தவோ அல்லது செயல்பட தொடங்கும் ஒரு குழுவை
    நாம் நம்புவது தவறா தவறா??

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //msri on May 15, 2009 1:29 am வடக்கின் இனச்சுத்திகரிப்பிற்கு (19பேரினவாதிகள் புடைசூழ)டக்கிளசு விசேட செயலணித் தலைவராக புறப்பட்டுளார்! உங்களின் வடக்கின் வசந்தம் புதுக்கோணம் ஓனறின் ஊடாக புறப்டுகின்றதோ? இப்பயணம் நீணடதூரம் பயணிக்காது! தமிழ்மக்கள் தடுத்தே நிறுத்துவார்கள!//

    தமிழ் மக்களுக்கு சாத்தான் வந்து நல்லது செய்தாலும் பரவாயில்லை. இந்த கொடுமையிலிருந்து உயர் பிழைத்தால் போதும். அது டக்ளஸ் – சித்தார்த்தர் கருணா – மகிந்த – யார் செய்தாலென்ன ?

    இனி தமிழீழ கனவு இலங்கையில வாழ்ந்த மக்களிடம் கலைஞ்சு போயிட்டுது.அதுவும் வன்னியில் வாழந்த மக்களிடம் வரவே வராது.அந்த அளவுக்கு கொடுமை. அது அரச பயங்கரவாதமானாலும் சரி , புலிப் பயங்கரவாதமானாலும் சரி. வீழ்ந்த மக்கள் எழும்ப ஆகக் குறைந்தது 10 வருசமாவது வேணும். உறவுகளின் இழப்புகளை காலம் முழுவதும் மறக்க முடியாது.

    வெளிநாட்டில தமிழீழ கோஸம் அதிகமாக இன்னும் 1 வருசத்துக்கு தாக்கு பிடிக்கும். தமிழ் நாட்டில ஒரு 3 மாசம். அதுவும் அதிகம்தான். யாழ்பாணத்தார் கை விட்டு கன காலம். மட்டக்களப்பார் கை விட்ட நாள் மறந்து போச்சுது. திருகோணமலையார் திருந்திட்டினம். வன்னிக்குத்தான் பயங்கர பாதிப்பு. இனி கச்ச தீவை மீட்டு ஜெயலலிதா தந்தால்தான் உண்டு. அதுக்கும் அவர் பிரதமராக வேணும்? அது நடக்காது அதனால ஜெயும் கெதியா துரோகி பட்டியலில் இடம் பெறுவார். ஒபாமா என்ன சொல்றார் என்று விளங்காம மாலை போடுறாங்க? அவரும் நாளைக்கு துரோகிதான். அப்பவே பேசியிருந்தால்……என்று கலைஞருக்கு கொடுக்கும் அதே சாட்டையடி ஒபாவுக்கு புலிகள் கொடுப்பார்கள்.

    புலத்தில உள்ள சின்னப் பிள்ளைகள் நாங்கதான் தமிழழத்துக்கு போக வேணும் என்று பேட்டி கொடுக்குதுகள். அதை தமிழ் டீவிக்கள் ஒளிபரப்பும் செய்யிறாங்கள். அதுகள் சின்னதுகள் என்றால். போடுறதுகள் அதை விட சின்னதுகள்?

    ஆமி , 1.2 கிலோ மீட்டர் பரப்பளவை நெருங்கினதும் தலைவர் இருக்கிற பகுதி கொழுந்து விட்டு எரியுதாம். சரணடைந்தவர்கள் விபரம் தெரிவிக்கிறார்கள். ஏதோ போறது சும்மா போகாது. எல்லாத்தையும் காவிக் கொண்டுதான் போகப் போகுது.
    செய்தி+ படங்கள்:
    http://www.lankaenews.com/English/news.php?id=7677

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வடக்கும் கிழக்கும் புலிகளின் கையில்லிருக்கும் போது கொலை கப்பம் பிள்ளை படிப்பு ஜனநாயகமறுப்பு எல்லாமே தேங்கி நின்றன. அதன் அறுபடையாகவே இன்று இரண்டு லட்சம் சகோதர சகோதரிகளையும் பெரியவர் சிறுவர்களையும் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறோம். பசிநோய் பிரிவு எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கம் அவர்களை பீடித்திருக்கிறது. அரசாங்கம் நம்பிக்கை அளிக்கிறது அது போதுமானதல்ல லட்சக்கணக்கான அறிவையும் பொருள்வழங்களையும் எதிர்பார்கிறார்கள். எதிர்பார்பதற்கு அவர்களுக்கு உரிமையும் உண்டு.

    மறுபுறத்தில் பெரும்பாலான புலம்பெயர் தமிழ்மக்களால் வளர்த்துவிடப்பட்ட வன்னி சிற்றரசரின் வடக்கையும் கிழக்கையும் அதிகாரத்தை வெளியேற்றியதில் அரசுக்கு மட்டும் தனிஉருத்துக்குரியதல்ல அதில்பாதி டக்கிஸ் தேவானந்தாவுக்கும் கருனாவுக்கு பிள்ளையானுக்கும் உரியது. வடக்கிலும் கிழக்கிலும் சில அசம்பாவிதங்கள் நடப்பது ஏதோ உண்மைதான் ஆனால் வன்னியைவிட எத்தனைமடங்கு மேன்மையானது
    என்பதை கள்ளத்தனமில்லாமல் மனச்சுத்தியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த சிலகுறைபாடுகளும் இன்னும் சிலகாலத்தில் நிவர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை நாட்டையும் மக்களையும் நேசிப்பவன் புரிந்துகொள்ள வேண்டும். புலம்பெயர் நாட்டில்லுள்ள புத்திசாலிகள் நக்கல் நையாண்டிகளை விடுத்து நாட்டிற்கும் மக்களுக்கும் பயன்லுள்ள ஆரோக்கியமான விமர்சனங்களை வைப்பதே ஆரோக்கியமானது.

    Reply
  • msri
    msri

    நண்பா! உங்கடை கதையைப் பார்த்தால் தமிழ் இனத்தை கடவுளாலும் காப்பாற்ற ஏலாது போலிருக்கு! வரலாற்று ஓட்டத்தில் நீங்கள குறிப்பிடுவது எல்லாம் தற்காலிகமானதே! நீணடகால நோக்கில் இவைகள் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகும்! சமகால துக்க சோகங்கள்> வரைவில் பெரும் பலமாக மாறும்! இது மகிந்தப் பேரினவாதத்தினனதும்+அவரது கூட்டாளிகள் மூலம்அல்ல!

    Reply