செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் ஓராண்டு நினைவு.

miss-mageswari.jpgசட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலரும் ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

தமிழ் பேசும் சமூகத்திற்குள் சமூக சிந்தனையும் சுய ஆளுமையும் கொண்ட ஒரு சில பெண்களில் மகேஸ்வரி வேலாயுதம் அவர்களும் ஒருவர். தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற உந்துதலால் பொது வாழ்வுக்குள் காலடி வைத்தவர். மூன்று தசாப்த காலமாக மக்களின் துயர் தீர்க்கும் வாழ்வில் தம்மை அர்பணித்து வாழ்ந்தவர்.

இறந்தும் இறவாது வாழ்பவர் என்பதற்கு உதாரணமாக இன்று ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியமானது பாராளுமன்றத்தின் சட்ட அங்கீகாரத்தின் மூலம் உதயமாகியுள்ளது. மகேஸ்வரி வேலாயுதம் உயிருடன் இருந்தபோது ஆற்றிய பணிகளை மகேஸ்வரி அறக்கட்டளை நிதியம் தொடர்ந்தும் முழுமையாக மேற்கொள்ளும் என அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Constantine
    Constantine

    We should also remember the whole families who were executed my ‘terrorists’ as retaliation to Late Mahaswarys violent assassination.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தேவதைகள் பலஆண்டுகளுக்கு ஓர்முறையை பூமிக்கு இறங்கி வந்து தரிசனம் கொடுப்பதாக எங்கோ கற்பனை கதைகளில் படித்தாக ஞாபகம்.
    இந்த தேவதைகள் தமிழ்மக்களில் யாரோ செய்த புண்ணியத்தால் பூமிக்கு இறங்கி வந்தார்கள். மனிதகுலத்திற்கு தேவையான முக்கியமாக தமிழ்மக்களுக்கு ஆலோசனைகளையும் நடைமுறையான செயல் பாடுகளையும் செய்தும் காட்டினார்கள். மகேஸ்வரி வேலாயுதம் ரயணிதிரணகமா குறிப்பிடதக்கவர்கள். இவர்களின் உபதேசங்களை வாழ்கை நடமுறைகளை கற்றுதேர்ந்திருந்தால் கூட எமது சமூகத்திற்கு ஏதோ வழி பிறந்திருக்கும். நாம் அதற்கு தயாராகலில்லாததே கவலை க்குரிய அம்சமாகும்.

    யாழ்சமூகத்தின் மூடதனமான எண்ணங்களும் சிந்தனைகளும் புலியிகத்தின் ஊடாக தெட்டதெளிவாக பிரதிபலிக்கிறது இது புலம்பெயர்மக்களின் செயல்பாடுகளால் உறுதிசெய்யப்படுகிறது. உடம்பில் எரிவுஏற்பட்பட்டுவிட்டது தாங்கமுடியவில்லை தேம்ஸ்நதியில் குதிக்கிறேன் இந்தா! ஆலயத்தின் கோபிரத்தில் ஏறி கையை விடுகிறேன் என்பது எல்லாம் தேவதைகளை நிந்திததின் வெளிப்பாடே! தேவதைகளை நிந்திதவர்களை விட நிந்தித்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றியே இன்னும் கவலை கொள்ளக்கூடியதாகயிருக்கிறது.

    Reply
  • murugan
    murugan

    கடவுள் தன்னைக் கைவிட மாட்டார் தான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை ஏன் பயப்பட வேண்டும் என செயற்பட்டவரை கொன்றது தங்கள் கெட்டித்தனம் என புலிகள் கருதினார்கள். கொலை என்பது அவர்களுக்கு ஜஸ்கரீம் சாப்பிடுவது போன்றது. விதவிதமாய் ரசித்து ரசித்து கனகம் புளியடி வதனனில் இருந்து செய்து காட்டியிருக்கிறார்கள. எல்லாவற்றிற்கும் சேர்த்த உலகம் முழுதும் இன்று புரண்டு அழுதும் இரங்குவார் இல்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உள்ளே போன பல புலிகளைக் கூட, தன் இனம் என்பதற்காக வெளியில் எடுத்து விட்டவர் மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள். ஆனால் உப்புப் போட்டவர்களுக்கே உலை வைப்பதில் கில்லாடிகள் புலிகள். எல்லாப் பாவங்களுக்கும் சேர்த்துத் தான் புலிகளின் இன்றைய அவலம். சும்மாவா சொன்னார்கள் “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்று.

    Reply
  • padamman
    padamman

    “அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” .
    நிச்சியமாக ஆனால் அதற்க்கு முன்னால் மக்கள் அடித்தே கொல்லுவர்

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //பார்த்திபன் on May 13, 2009 8:55 pm உள்ளே போன பல புலிகளைக் கூட, தன் இனம் என்பதற்காக வெளியில் எடுத்து விட்டவர் மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள். //

    புலிகள் , அதன் குணத்தைத்தான் காட்டும். அது ஒரு போதும் பூனையாகாது.

    Reply