இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் சமாதானமாக வாழ விரைவில் பேச்சுவார்த்தைகள்

israil-egept.jpg
இஸ்ரேலியர்களும் பாலத்தீனர்களும் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சுபிட்சத்துடன் வாழ வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், சமாதானப் பேச்சுகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதும் தனது விருப்பம் என்றும் இஸ்ரேலின் பிரதமர் பென்யாமின் நெத்தன்யாஹூ கூறியிருக்கிறார்.

ஆறு வாரங்ககு முன்னர் இஸ்ரேலியப் பிரதமராக பதவியேற்ற இவர், அரபு நாடு ஒன்றில் மேற்கொளும் முதல் விஜயமாக எகிப்து சென்று அதிபர் ஹோஸ்னி முபாரக் அவர்களுடன் ஷரம் எல் ஷேக்கில் பேசிய போது இக்கருத்துக்களை வெளியிட்டார்.

இரு தலைவர்களும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கவிருக்கும் சில தினங்களுக்கு முன்னர் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    ஆயுதக்குழுக்கள் இருக்கும் வரை ஒரு இனம் சமாதானமாக வாழமுடியாது மட்டும்மல்ல இன்னொரு இனத்தோடும் சமாதானத்தை தேடமுடியாது. இது தமிழினம் ஏராளமான விலைகளைக் கொடுத்து பெற்ற அனுபவம். இந்த அனுபவத்தை குறிப்பாக இந்தியாவின் தேசிய இனங்களும் உலகத்தின்மற்ற இனங்களும் இதை கவனத்தில் எடுக்கவேண்டும். மக்களுக்கு அரசியல்கல்வி புகட்டலே தீர்வுக்கான ஒரேவழி. இது எல்லா இனத்திற்கும் பொருந்தும்.

    Reply