அண்மைக் காலமாக விடுதலைப்புலிகள் அதிகளவிலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

boat.jpgஇன்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கடற்படைப் பேச்சாளர் பேசுகையில், “படகுகளில் தப்பி வந்த சிவிலியன்கள் எவரும் கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்படவில்லை எனவும் 20,000க்கும் அதிகமான மக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இது வரையில் கடற்புலிகள் 7 தடவைகள் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். கடற்படையினர் டோராப்படகுகளின் உதவியுடன் முல்லைத்தீவுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் 17 படகுகளைத் தாக்கியழித்தும் சில படகுகளைக் கைப்பற்றியுமுள்ளனர். அதேவேளை, 100க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக விடுதலைப்புலிகள் அதிகளவிலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் தற்போது பலமிழந்து காணப்படுகின்றனர். அதனால்தான் இவ்வாறான தாக்குதல்களை அவர்கள் நடத்துகிறார்கள்” என்றார்.

Show More
Leave a Reply to palli. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli.
    palli.

    இது ஒன்றே புலிகளின் பலம். அதுவும் சமீப காலங்களில் தோல்வியை மட்டுமே கொள்வனவு செய்கிறது. திட்டமில்லாத எந்த செயலும் தேவையான வெற்றியை பெற்றுதராது என்பது பல்லியின் கருத்து அல்ல அனுபவம்.

    Reply