ஆபத்தான நிலையில் உள்ள மக்களைப் பாதுகாக்க பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். – எஸ்.பத்மநாதன்

pathmanathan.jpgகடந்த காலங்களில் சர்வதேசப் பிரச்சினைகள் தோன்றிய போது ஐ.நாவும் சர்வ தேச சமூகமும் எவ்வாறான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனவோ அதே போன்ற நடவடிக்கைகளை பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு தமழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதன் நேற்றிரவு விடுத்த அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to palli. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • thurai
    thurai

    //இவ்வாறு தமழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதன் //

    புலிகளின் சர்வதேச விவகாரங்களைப்ப்ற்ரியும், பத்மநாதனின் பங்களிப்புப் பற்ரியும் விரிவாக யாராவது கூறுவீர்களா?

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலம்பெயர் நாட்டிலிருந்து ஈழத்தமிழ் மக்களின் வாழ்வை குடியறுத்தவர்களின் வரிசையில் எஸ்.பத்மநாதனும் முக்கியமானவர். புலிகளின் ஆயுதங்கள் மட்டுமல்ல பல கப்பல்களுக்கும் சொந்த……….
    வழக்கம் போல பிறப்பிடம் வல்வெட்டித்துறை தான். ஆரம்ப வருமானத்தை அள்ளிக் கொடுத்ததும் கோடீஸ்வரர் ஆக்கியதும் புலம்பெயர் மக்களின் புலிரசிகத்தன்மை தான் அதுவே இவரை கோடீஸ்வரன் உச்சிகே அழைத்துச் சென்றது. இவரும் பிரபாகரனைப்போல் மறைந்து வாழ்வது. அவருக்கு பங்கர் இவருக்கு உலகம் பரவலாக. பத்மநாதன் என்ற பெயரைவிட இவருக்கு பலபெயர்கள் உண்டு. இவையெல்லாம் அரசல் புரசலாக வந்த செய்திதான். சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றும்போதுதான் முழுவிபரங்களையும் அறியமுடியும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    இன்டர்போலால் தேடப்படும் கடத்தல்காரன் சர்வதேச பொறுப்பாளன். திருடர்கள் எல்லாம் புலிகளின் புலம் பெயர் நாட்டு தலைவர்கள். தமிழனின் தலைவிதி? எப்படி இருந்த நாங்க இப்பிடி ஆயிட்டமே?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்டர்போலால் தேடப்படும் ஒரு சர்வதேசக் குற்றவாளியான இந்தக் கொள்ளைக்காரனுடன் ஐ.நாவால் பேச்சு நடத்த முடிகின்றது. ஆனால் இன்டர்போலால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதன் மூலம் வெளிநாடுகளின் கபட நாடகம் நன்றாகப் புரிகின்றது.

    Reply
  • palli.
    palli.

    பார்த்திபன் அவசரபட வேண்டாம்.
    இது கூட இளம் திரயனின் இரண்டாம் பாகமாக இருக்கலாமல்லவா??

    Reply
  • accu
    accu

    Who is Kumaran Pathmanathan?
    Legal Name: Selvarajah Pathmanathan
    AKA: Kumaran Pathmanathan (KP)
    DOB: April 6, 1955
    Born: Kankesanthurai, Sri Lanka
    Eelam Groups: TELO (1980) , LTTE
    Sri Lanka National ID Card: 550971231
    Responsibilities: Leader of arms procurement, fundraising, international purchases and shipping.
    Citizen: Thailand
    Kumaran Pathmanathan (KP) is the LTTE Arms Procurer Chief.

    “They seek him here; they seek him there; they seek him everywhere”.

    These lines from a doggerel about the scarlet pimpernel perfectly sums up the life and times of KP – the elusive chief procurer of arms and armaments for the Liberation Tigers of Tamil Eelam (LTTE)……………….

    Sources: AP, Transcurrents.com
    Copyright © 1997 – 2006 tamiltigers.net

    Reply
  • மாயா
    மாயா

    பல்லி,புலிகளின் தோல்வியை உறுதிப்படுத்திக் கொண்ட பின் , காஸ்ரோவால் புலத்து புலிகளிடம் தொடர்பு கொள்ள முடியாது. எனவே புலத்தில் அதை கவனிக்க ஒருவர் தேவை என பத்மநாபனை சர்வதேச பொறுப்பாளர் ஆக்கினார் தலைவர்.

    அதன் பின் அவரே , புலத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார். முக்கியமாக பண விடயம். இங்கே நடக்கும் தற்போதைய போராட்டங்களையும் ஒரு கிரிமினலான பத்தமநாபனே முன் நடத்துகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் புலிகளில் காசு சேர்த்தவர்கள் வசூலித்த பணத்தை சுருட்டத் தொடங்கியதும் , அதைத் தடுக்க இவருக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது.சுருட்டியவர்கள் எதிர்காலத்தில் கொல்லப்பட்டு , அந்த பழியும் சிறீலங்கா அரசு மேலோ அல்லது மாற்று இயக்கங்கள் மேலோ விழலாம்.

    Reply