“லண்டனில் 33 ஆயிரம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எவரேனும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை. – அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா

parliament-of-sri-lanka.jpgஇலங்கையை இரண்டாக பிளவுபடுத்தி, இந்தியாவையும் இரண்டாக பிளவுபடுத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே பீலிக்ஸ் பெரேரா இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்; “லண்டனில் 33 ஆயிரம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். ஆனால் வடக்கில் இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எவரேனும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும், சிங்கள மக்களுமே அம் மக்களுக்கு உதவி வருகின்றனர்.  இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அப்பாவித் தமிழ் மக்களுக்காக செயற்படாமல், பயங்கரவாதிகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே, இனியாவது தமிழ் மக்களுக்கு ஏதேனும் உதவிகளை செய்ய வேண்டுமெனில் இப்போதாவது ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.  தமிழ் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவராக ஜனாதிபதியே இருக்கிறார். அதற்கு அப்பாலான உண்மை எதுவும் கிடையாது.

இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தி பின்னர் இந்தியாவையும் இரண்டாக பிளவுபடுத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சி ஜனாதிபதியினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  இது வரலாற்றில் எழுதப்படும். இதேநேரம், கனரக ஆயுத பாவனை நிறுத்தம் தொடர்பாக ஐ.தே.க. எம்.பி.யான பாலித ரங்க பண்டார வெளியிட்ட கருத்து சர்வதேச சமூகத்தை குழப்புவதற்கு கூறியதாகும். எனினும் எமது படையினர் அப்படி செயற்படமாட்டார்கள் என்றார்.

Show More
Leave a Reply to mukilvannan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • msri
    msri

    எட இலங்கையை இரணடாக பிளவுபடுத்தலாம்! இந்தியாவை எப்படிஇரண்டாக பிளவுபடுத்துவது? சரி இதை மகிந்தா எப்படி முறியடித்தார்? கிட்டத்தட்ட ஓரு வல்லரசை மகிந்தா காப்பாற்ற வேண்டிய தேவை இந்நியாவிற்கு ஏற்பட்டுள்ளது! அதுபொக லணடன் மக்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவவில்லை என்கினறார்! மந்திரி! உந்த வணங்காமண்ணிற்கு என்ன நடந்தது! சரிவருமோ?

    Reply
  • Anonymous
    Anonymous

    அட இங்கிலண்டில இருக்கிற ‘மனிதநேய’ மாற்றுக்கருத்து மகான்களில ஒருத்தனும் காசு அனுப்பேல்லையே? ஒருவேளை அவையளை மந்திரி சிங்களவர் எண்டு நினைச்சுப்போட்டாரோ. அவையளின்ர நளின, நக்கல் கதையளையும் கூட்டங்கள், ஆய்வுகள, அவசரத்தேவைகள் என ஆய்வரங்கங்கங்கள் மட்டுமே நடத்தும் ஸ்ரைலைப்பாத்தால் அதுகும் ஒருவகையில சரிதானே எண்டுதான் மந்திரி நினைச்சிருப்பார்

    Reply
  • mukilvannan
    mukilvannan

    felix sorry to read your dissapointing notice on thesam net which i have pinned up on my dressing room wall in protest.todays critics can be so very insenstive in their failure to understand what a tremendous challenge over acting can be,especially your age,bless you

    Reply
  • ravi
    ravi

    அண்ணைமாரே ஒரு விடயம் வணங்க மண் இங்கிருந்து கடந்த மாதம் 20 இல் புறப்பட்டுள்ளது இது 9 ஆம 10ஆம் திகதியில் சென்றடையும். அதன் பின்னர் இந்த மந்திரிமார் என்ன சொல்ல போயினம்?

    Reply
  • Kusumpo
    Kusumpo

    அமைச்சர் அம்மானே! வெளிநாட்டுத்தமிழர்கள் அனுப்பும் உதவியையும் பிடுங்கி உங்கள் பைகளில் போடும் உத்தேசமா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    // அண்ணைமாரே ஒரு விடயம் வணங்க மண் இங்கிருந்து கடந்த மாதம் 20 இல் புறப்பட்டுள்ளது இது 9 ஆம 10ஆம் திகதியில் சென்றடையும். – ravi //

    அங்காலை ஒருவர் வணங்காமண் ஏற்கனவே போட்டுதெண்டு கதைவிட, இங்காலை இவர் போய்க் கொண்டிருக்கு என்று கதை விடுறார். பிரித்தானிய அரசு துறைமுக அனுமதியே தான் கொடுக்கவில்லையென உத்தியோகபூர்வமாக அறிவித்தும் இவர்களால் எப்படியெல்லாம் கதையளக்க முடிகின்றது. ஆனால் அதைக் கூட ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாய் அளந்து தமது தகடுதத்தங்களையும் காட்டிக் கொடுத்து விடுகின்றார்கள்.

    Reply