தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை மீட்பதே அடுத்தகட்ட மனிதாபிமான நடவடிக்கை

nimal-siriiii.jpgபுலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியினால் இன்று வரை சுமார் 1,30,000 தமிழ் மக்களை மீட்டெடுத்திருந்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்க முடியாதுள்ளது என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் இறுதியாக கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

பாதுகாப்பு வலயத்திலிருக்கும் அனைத்து மக்களையும் மீட்டெடுத்து புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதுடன், வெகு விரைவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க்களையும் மீட்டெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. தயா மாஸ்டர் போன்று, ஜோர்ஜ் மாஸ்டர் போன்று புலிகளின் மிலேச்சத்தனத்தை வெளி உலகுக்கு உணர்த்தும் குழுவினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்கள் மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.

புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்தபடி அவர்களின் மிரட்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகி இருந்த அந்த மக்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் எவருமே புலிகளிடம் கூறவில்லை. அவர்களுக்கு கூறமுடியாது என்பதை நாம் அறிவோம். புலிகளின் ஆயுதங்களுக்கு பயந்திருந்ததுதான் இதற்குக் காரணம். அப்படி கூறியிருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதும் எமக்குத் தெரியும்.

பிரபாகரனுக்கு இனிமேலும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அவரது கோழைத்தனமான செயல்களுக்கு இனிமேல் இடமில்லை. சம்பந்தன் எம்.பி. க்கள் போன்றோர் அரசியல் தீர்வொன்றுக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள்தான். நாமும் அரசியல் தீர்வையே விரும்புகிறோம். எனினும் பிரபாகரன் விரும்பும் அரசியல் தீர்வை வழங்க முடியாது. பிரபாகரன் ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க விடமாட்டார். பிரபாகரனை ஒழித்த பின்னர் எமது நாட்டுக்கேயுரிய அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றார்.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli
    palli

    அனுபவமான அரசியல் பேசுகிறது. அப்படியே புதியென புகுத்தி பளயனெ கழித்தால் தங்கள் எண்ணம் இலகுவாகுமே.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    நீங்கள், “புதியன கழித்து,பழையன புகுத்துகிறீர்கள்” பல்லி!. பழைய தமிழ் தேசிய கூட்ட(ணி)மைப்புதான் அரசியலை போராளிகளிடம் கையளித்தது. அந்த புதிய பாதை தோல்வியடந்ததற்கு காரணம், பழைய “கிருமிகளே”!. இப்போது கூட “பிரபாகரன் அவர் லீடர்” என்று தாங்கள் மேற்குலகில் தஞ்சம் வாங்கிக் கொடுத்தவர்களை கூற வைத்துக்கொண்டு, பிரபாகரனை ஒழித்துக் கட்டிவிட்டு, “டெத் சர்டிபிகேட்” டை காட்டினால் உடனே உங்களிடம் உறவு வைக்கிறோம் என்று, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார்கள். பாதுகாப்பு வலையத்திலிருந்து புலிகளின் தலைமை “எஸ்கேப்” ஆகிவிட்டது என்ற உண்மையை பகிரங்கமாக அறிவிக்க இவர்களால் முடியுமா?. அங்கே மாட்டிக் கொண்டிருப்பது, பதற்றத்துடனான அப்பாவி போராளிகளும், நடேசனும்தான். இவர்கள் தங்கள் பதற்றத்தில், அப்பாவிமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம்!. இவர்களின் பதற்றத்தை தணிக்க வேண்டும். ஆனால், “சிறுமிகள் கொலைகளில்”, திரிகோணமலையிலும், மட்டகளப்பிலும் அப்பாவி? இளைஞர்களை கொன்று, ஆதாரங்களை அழிப்பது போல, இவர்களை கொன்று குவிப்பதன் மூலம் கிடைக்கும் இலாபத்தைதான் “வீ வாண்ட் தமிலீலம்”, “ஜெயலலிதா தமிழீழம்” கோஷமிடுவோர் விரும்புகின்றனர். இந்த கோஷத்தை விடுத்து, மனிதாபிமான உதவிகள் உடனடியாக வன்னி மக்களை சென்று அடைய வேண்டும் என்று திரு.நடேசன் விட்ட கோரிக்கைக்கு ஆதரவாக செயல்படுவார்களா?. ஆனால் அதற்கு முன் நடேசன் புலிகள் தலைமை அங்கு இல்லை என்பதையும், மக்கள் வெளியேற சம்மதம் தெரிவிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    Reply