தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு தீவிர ஆயுத போராட்டத்தில் பங்கேற்காத தயா மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடாது என அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த இருவருமே அரசியலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மக்களுடன் நெருக்கமுடைய நபர்களை அரசியல் தலைவர்களாக நியமிப்பதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என அரசாங்கம் கருதுவதாகவும், இதன் காரணமாக தயா மாஸ்டரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. தயா மாஸ்டரை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதன் மூலம் எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை சரணடையத் தூண்ட முடியும் என அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறினும் தயா மாஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வேண்டுமானால் ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலக வேண்டும் எனவும், இவ்வாறு பதவி விலகும் நபருக்கு பெருந் தொகையான பணமும் ஏனைய சலுகைகளையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
gobi
கருணா உங்கட புலிக்குணத்தையும் புலிச் செயற்பாடுகளையும்தானே இலங்கை திரும்பின நாளிலிருந்து காட்டிக் கொண்டிருக்கிறீங்கள். அதில் இது என்ன புதுசே??
எப்பவும் ரெண்டு புலி தலை சேர்ந்து இயங்காதென்பதை வலியுறித்திக் காட்டிக் கொண்டிருங்கோ.
PUYAL
அரசியலில் எதுவும் நடக்கலாம். பிரபாகரனையே பாதுகாப்பமைச்சராக நியமித்தாலும் ஆச்சரியப்படமாட்டேன். நடப்பவையெல்லாம் நல்லதாக நடக்கட்டும். இனியாவது எமனுக்கு சிறிது ஓய்வு கொடுப்போமா?
palli
போற போக்கை பார்த்தால் அம்மான் பதவி காலி போல் உள்ளது. அம்மான் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றை அரசு விசாரிக்க முன் வந்தால் அம்மான் கடசிகாலம் வரை சிறையில் தான். இதை சொல்லுவது பல்லியல்ல அம்மானின் அடியாத்களின் கவலை இது. சம்பந்தர் தயா மாஸ்ரர் என பல அரசியல்வாதிகள் அரசின் பக்கம் வந்து விட்டதால். ரவுடியான அம்மான் போன்றோர் எதுக்கென தெற்க்கின் அரசியல் சானகியர்கள் மகிந்தாவிடம் குசுகுசுப்பது பல்லிக்கு மட்டுமா கேக்குது.
Kullan
அம்மான் ஏன் துள்ளுகிறீர்கள்? உங்களுக்குப்போட்டியா தயாமாஸ்டரா? நல்லது தானே. கருணாவைப்போடுவதற்கு தயாமாஸ்டர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
மாயா
கருணா , உங்களை விட அரசியல் இவர்களுக்குத் தெரியும். உங்கள் எண்ணத்தின் மூலம் ஒன்று மட்டும் புரிகிறது. கிழக்கில் நடைபெறும் சிறுவர்கள் கொலைக்கு கருணா உடந்தை என்பதே அது. பிள்ளையானை கிழக்கிலிருந்து பதவி இறக்குவதற்கு கருணாவால் இதைவிட வேறு ஏதும் செய்ய முடியவில்லையோ?
thurai
எலும்புத்துண்டிற்கு இறைச்சிகடையை சுத்துகின்ற நாய்கள்போல் அன்று முதல் இன்று வரை தமிழனின் குணம் என்றுமே மாறப்போவதில்லை. பதவி மோகமே தமிழீழ கோசத்தின் ஆணிவேர்.
என்றும் அழிவது ஏழைகள், ஆளத்துடிப்பதோ மேலாதிக்கவர்க்கம்.
துரை
msri
அம்மானின் கூற்றுப்படி> சுடத்தெரிந்தவர்கள்>சின்னஞ்சிறுகளின் (காலில் விழுந்து மன்றாட-மன்றாட) கழுத்தை நெரித்துக் கொல்பவர்கள்>மசூதியில் தொழுகை செய்யும் போது>அம்மக்களைக் கொலை செய்பவர்களதான் பாராளுமன்ற உறுப்பினர்களாக வரலாம்? இதற்கான திருத்தச் சட்டமும்கொணடுவர மகிந்தாவிற்கு உத்தரவும் போடுவார் உள்ளது! அதென்ன “கண்டுபிடிப்பு” தீவிர ஆயதப் போராட்டத்தில் ஈடுபடாதவர்ககளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கக்கூடாதெனறு! இதற்கு அர்த்தம் கிழக்கின் “புலம்பெயர் விடிவெள்ளிகளுக்”காவது புரியுமா?
gobi
எலும்புத்துண்டிற்கு இறைச்சிகடையை சுத்துகின்ற நாய்கள்போல் அன்று முதல் இன்று வரை புலிகளின் குணம் என்றுமே மாறப்போவதில்லை. பதவி மோகமே தமிழீழ கோசத்தின் ஆணிவேர்.
Rohan
அம்மான் பச்சை பிரதேச வாதம் வேறு பேசியிருக்கிறார்! இவர்கள் கிளினிச்சியில் இருந்து வந்தவர்களாம். அந்தப் பக்கத்திலிருந்து வந்தவர்கள் வலு – உறுதி அற்ற்வர்களாம்!
“It is not possible to appoint them as members of parliament as they are not hardcore LTTE cadres and especially because they are from Kilinochchi.
People from that area are not strong.” Minister Muralitharan said.