கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு கொடுங்கள்-ஜெ

j-j-j.jpgகருணாநிதியைப் பார்ப்பதற்கு எனக்கு பயமில்லை. அவருக்குத் தான் என்னை நேருக்கு நேர் சந்திக்க பயம். நான் சட்டசபைக்கு வருகிறேன் என்று தெரிந்தாலே என்னைப் பார்க்கப் பயந்து கொண்டு தனக்கு முன்பு ஏராளமான கோப்புகளை அடுக்கி வைத்து முகத்தை மறைத்துக் கொள்வார் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

இன்று காலை பத்திரிகைகளில் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அது என்னவென்றால், நேற்று சென்னை விமான நிலையத்தில் நானும், கருணாநிதியும் நேருக்கு நேராக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவானது. இதை எப்படி தவிர்ப்பது என்று காவல் துறை அதிகாரிகள் பதற்றமடைந்தார்கள், கவலை அடைந்தார்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஏன், கருணாநிதியும், நானும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டால் என்ன? அதனால் என்ன ஆகப் போகிறது? நேருக்கு நேராக கருணாநிதியைப் பார்ப்பதற்கு எனக்கொன்றும் பயம் கிடையாது. ஆனால், நேருக்கு நேர் என்னை சந்திப்பதற்கு கருணாநிதி தான் பயப்படுகிறார்.

அதனால்தான் சட்டப்பேரவையில் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் எதிரெதிரே அமரும் வகையில் இருந்த இருக்கையை 15 அடி தொலைவுக்கு மாற்றிவிட்டார். நான் பேரவைக்கு வருகிறேன் என்று தெரிந்தாலே என்னைப் பார்க்கப் பயந்து, தன் முன்பு ஏராளமான கோப்புகளை அடுக்கிவைத்துக் கொள்வார் கருணாநிதி.

கருணாநிதியால் இப்போது கடமையாற்ற முடியவில்லை. முதலமைச்சர் செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியவில்லை. ஆகவே, நீங்கள் கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு அளிக்க வேண்டும். என்றார் ஜெயலலிதா.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • ponnu
    ponnu

    இன்ன நைநா இது, எதோ….. சமச்சாரம் போலல்லா கீது. இல்லாட்டி என்ன பூனையும் எலியும் வெளையட்டா?

    Reply
  • msri
    msri

    இவவுக்கு தானொரு “நிரந்தரச் செல்வி” என்ற நினைப்பு!

    Reply
  • கடாசு
    கடாசு

    //கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு அளிக்க வேண்டும். என்றார் ஜெயலலிதா//.இதே மாதிரத்தான் ஆனந்த சங்கரிக்கு ஜெயபாலன் முன்பே சொல்லியுள்ளார்

    Reply
  • மாயா
    மாயா

    முன்னர் ஜெயா வந்தால் என்ன செய்வாவோ எண்டு புலி ஆதரவாளர்கள் பீதியோடு இருந்தவை. அவவும் தமிழீழம் அமைக்க புறப்பட்டதால…… இப்ப அது விட்டு போயிட்டு. சிறீலங்காவில தமிழரை விட தமிழீழம் அமைக்கிறதுல உள்ள கரிசனை இந்தியாவில அதிகரிச்சிட்டுது?

    Reply