மாணவி தினுஷ்காவின் படுகொலையைக் கண்டித்து மட்டக்களப்பில் மூன்று நாட்கள் எதிர்ப்பு நடவடிக்கை

thinu.jpgகடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி தினுஷ்காவின் கொலையைக்கண்டித்து பாடசாலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டும் வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறும் பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  இன்று திங்கட்கிழமை முதல் மூன்று தினங்களுக்குள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு மட்டக்களப்பு வாழ் நலன் விரும்பிகள் என்ற பெயரில் இந்த பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியான இந்த சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இந்த கொடூரமான படுகொலையை அனைவரும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதனைக் கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்று திரண்டு இந்த சிறுமியின் படுகொலைக்கான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக்கோரி இன்று முதல் 3 நாட்களுக்கு வர்த்தக நிலையங்களை மூடி பகிரங்கமாக எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்.

நேற்று சிறுமி வர்ஷா. இன்று தினுஷிகா. நாளை யார்? அதேவேளை இன்று திங்கட்கிழமை அனைத்து பாடசாலை மாணவர்களும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு படுகொலையினைக் கண்டிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இன்று திங்கட்கிழமை முதல் மூன்று நாட்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது தவிர்த்து இக் காட்டுமிராண்டித்தனமான படுகொலையைக் கண்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

Show More
Leave a Reply to sangu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • sangu
    sangu

    அமைதியாக இருக்கிறேன் இவர்களின் தலையில் இடி விழாதோ?

    Reply