பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசுகளுக்கு விடுதலைப் புலிகள் ‘பாராட்டு’

pr-con.jpgபிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர்கள் சென்ற வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது தொடர்பில் விடுதலைப் புலிகள் அவர்களைப் பாராட்டியுள்ளனர். இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அரசாங்கம், விடுதலைப் புலிகள் என்று இருதரபினரிடமும் அமைச்சர்கள் தமது பயணத்தின்போது வலியுறுத்தியிருந்தனர்.

இலங்கையின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் அக்கறை காட்டியமைக்காக வெளியுறவு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, போர்நிறுத்தம் செய்வதையே தாங்களும் விரும்புவதாக விடுதலைப் புலிகளின் அறிக்கை ஒன்றில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • palli
    palli

    இந்த ஆடம்பரம்தான் யாரும் எமக்கு உதவ தயங்குகிறார்கள். அரசுக்கு நல்ல ஒரு விடயம் இரு நாடு மீதும் குற்றம் சுமத்த.

    Reply
  • accu
    accu

    நீங்கள் போர்நிறுத்தம் கேட்டால் என்ன போர்முழக்கம் புரிந்தால் என்ன உங்கள் அழிவு தடுக்கமுடியாதது. புலிகளின் பின்னான காலம் எப்படியிருக்குமென மக்கள் பேசத்தொடங்கிவிட்டனர். அதன் அர்த்தம் உங்கள் முடிவு மக்கள் மனதில் உறுதியாகிவிட்டது. புலம்பெயர் நாடுகளில் உங்கள் இறுதிக்கிரியைக்கு ஒப்பாரி நடந்துகொண்டிருக்கிறது.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    போனவர்கள் யுத்தத்தை நிறுத்த வரவில்லை என்று சொன்னது பங்கரில் இருப்போருக்கு தெரியாது. அதுதான் பாராட்டு.

    Reply
  • msri
    msri

    புலிகள் பாராட்டு! உங்களின் புலம்பெயர்வுகள் (பிரான்சு பிரிட்டன் வெளிநாட்டமைசர்களை) தெருநாடகம் போட்டு கிணடலடிப்பு> அதற்கு யி.ரி;வி.தொலைக்காட்சியில் ஓளிபரப்பு> இந்நிகழ்ச்சி முடிய> சர்வதேச சமூகமே வன்னிநில மக்களைக் காப்பாற்று என ஓப்பாரி! இதுமுடிய உண்ணாவிரதத்திற்கு ஆள்பற்றாககுறை (சமைக்காதீர்கள்-ரி.வி பார்ககாதீர்கள்!) ஓடி வாருங்கள் என புலம்பெயர் மக்களுக்கு அழைப்பு! கருணாநிதியை விடுவம்! உங்களின் கோமாளித்தனம்தான் என்னே?

    Reply
  • thurai
    thurai

    வன்னியில் புலிகள் யாருக்காவது பாராட்டக்கூடிய நிலையிலில்லை. புலத்துப் புலிகளின் ஒப்பாரியைக்கேட்டு போய் வந்தவர்களிற்கு சிறு நன்றி தெரிவிப்பேயாகும். பராட்டு நினைத்த கருமத்தை வெற்ரியுடன் செய்து முடித்தவர்களிற்கே உரித்தாகும்.

    துரை

    Reply