ஈழத் தமிழர்கள் மீதான அக்கறையைவிட திமுக எதிர்ப்புதான் ராமதாஸ் மற்றும் வைகோவுக்கு முக்கியம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக போராடும் அணிதான் எங்கள் அணி என்று சொல்லி டாக்டர் ராமதாஸ் என்னை அதிமுக அணிக்கு அழைத்தபோது, ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்தான் ஜெயலலிதா.
எனவே ஒருபோதும் அதிமுக அணி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானது என்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது என்று கூறி அந்த அணிக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டேன். வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தமிழர் நலனில் உள்ள அக்கறையைவிட இந்தத் தேர்தலில் திமுகவை தோல்வியடைய செய்வதுதான் முக்கியமாக உள்ளது என்றார்.
thurai
ஈழத்தமிழர் பற்றி புலிபடையினரிற்கே அக்கறையில்லையென்பது உலகறிந்த விடயம். புலிப்படையினரின் நிலமையை இன்னமும் அறியாது ஆதரவு வழங்குவோர் அப்பாவிகள் அல்லது சந்தர்ப்பவாதிகள்.
துரை
மாயா
சரியாச் சொன்னீர்கள் துரை.
ஈழத் தமிழர்களை அல்ல புலித் தலைமையை வாழ வைப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இதில் சாதாரண மக்கள் குறித்து ஏன் கவலைப்படப் போகிறார்கள்? அனுதாபத்தை வைத்து பிச்சைக்காரர்கள் போல் அல்லது சண்டியர்கள் போல் தமிழீழம் கிடைக்கும் என நினைப்பபவர்கள். திருமா போன்றவர்கள் விளங்கிக் கொள்ள இன்னும் காலம் எடுக்கும்.