பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, உள்துறை மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு முதல் அமைச்சர் கருணாநிதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம் தந்தி அனுப்பியுள்ளார்.
அதில், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் என்பவர் ஓர் இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதியைப் போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் நேரடியாக பங்கேற்று ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்திய அரசியல் சாசன சட்டப்படியும், சர்வதேச பாஸ்போர்ட் விதிகளின்படியும் ஒரு நாட்டைச் சேர்ந்த எவரும் வேறொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. இந்த அடிப்படை நெறிமுறையை மீறி சிவாஜிலிங்கம் என்ற இலங்கை எம்.பி. தற்போது தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் இல.கணேசனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
அதோடு மட்டுமில்லாமல், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றியும், மத்திய மற்றும் தமிழக அரசுகள் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பிரசாரத்தில் விமர்சனங்கள் செய்து வருகிறார். அவரது இச்செயல் இந்திய அரசு அமைப்பு சட்டத்திற்கும், சர்வதேச பாஸ்போர்ட் விதிமுறைக்கும் முற்றிலும் எதிரானதும், கடுமையான தண்டனைக்கு உரியதும் ஆகும்.
எனவே, இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் பாஸ்போர்ட்டை உடனடியாக ரத்து செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது
sivaji
இலங்கைக்கும் போக முடியாது இந்தியாவிலும் ஒழுங்கா இருக்கத் தெரியாது இது தலைவற்ற பிலோசபி ஒரு இடமும் இல்லாமல் (ச)கடிக்கப் போகிறியளா?
ramesh
இவரை இந்தியாவிலிருந்து நாடுகடத்தி மீண்டும் இலங்கையிலுள்ள தமிழர்களின் நிம்மதியை தொலைப்பதைவிட பிடித்து உள்ளே போட்டால் இந்த உலகில் ரொம்பப்பேர் நிம்மதியாக இருப்பார்கள். இவர் தமிழர்களுக்கு ஒரு “வேஸ்ட்”. அதிக சம்பளத்துக்காகவும் சலுகைகளுக்காகவும் வாழும் அதிசய தமிழர்.
Constantine
why take this guy seriously? just leave him alone – he will allply for benifits and live abroad. Who is going to employ him apart from ltte.?
chandran.raja
வன்னிமக்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள். மிகுதிமக்களையும் சிறை மீட்பது மனிதநேயம் உள்ளவரின் மனச்சாட்சியாகும். சிவாஜிலிங்கமோ சுகந்திரமாகப் பறந்து திரிந்து லண்டன் மாநகரத்தில் கூட ஊர்வலம் கூட்டி முன்வரிசையில் நின்று சிறைப்பிடித்தவன் பக்கம் நியாயம் கேட்கிறார். மனச்சாட்சியுள்ளவர்களே மனிதநேயம் மிக்கவர்களே உங்கள் மனசாட்சி என்ன? சொல்லுகிறது.