இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சரியான முன்னெடுப்பினை எதிர்பார்த்திருப்பதாக லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 28 வயதான பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
20 நாட்களாக தொடர்ந்து உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர், தொடர்ந்து கருத்து வெளியிடும் போது, “இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பை நிறுத்தி, மோதல் தவிர்ப்பை அறிவிக்குமாறு வெள்ளை மாளிகை வலியுறுத்திய போது, இலங்கை அரசாங்கம் அதனை ஏற்காது தொடர்ந்து கொடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 10,000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்பினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுமுள்ளனர். இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பொது மக்களும், சர்வதேச கண்காணிப்பு இன்றி அல்லற்படுகின்றனர். இந்த நிலையிலேனும் அமெரிக்கா ஒரு சரியான, காத்திரமான முன்னெடுப்பினை மேற்கொள்ள வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.
தமக்குச் சரியான தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தமது போராட்டத்தினை எவராலும் தடுக்க முடியாது என பரமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Kullan
உபாமாவுக்கு இலங்கைப்பிரச்சனை மாத்திரம் தான் பிரச்சனையில்லை. அமெரிக்க கறுப்பின சிறுபான்மை இனம் தேசம் தெரியா தேசங்களில் யார் யாரோ செய்த உடன்படிக்கையின்படி வெளிநாட்டுத் தெருக்களில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உபாமா அதைப்பார்ப்பாரா அன்றி பரமேஸ்வரன் தன் உலகின் உயரிய ஜீவன் இவருக்காக உபாமா இலங்கை அரசுக்கெதிராக படைஅனுப்ப தம்மக்களை அழிப்பாரா? கதைக்கும் போது யோசித்துக் கதைக்க வேண்டும். மக்கள் அழிவைத்தடுக்க இலகுவான சுலபமான வழி புலிகள் மக்களை விட்டுவிட்டு மறைவது மட்டுமே. இதை ஏன் கேட்கப் பயப்படுகிறீர்கள். நீங்கள் எல்லோருக்கும் புத்துயிர் கொடுக்க முயற்சிக்கிறீர்களே தவிர மக்களைப்பற்றி எண்ணம் இருந்தால் மக்கள் நேயம் இருந்திருந்தால் புலிகளுக் கெதிராக சத்தியாக்கிரகம் இருங்கள். உண்மையான மக்கள் நேயம் உள்ளவர்கள் என்றால் இதைத்தான் செய்வார்கள்
ajeevan
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவுடன் பேசத் தயார் என்றால் மாற்றம் ஒன்று வரலாம். வேறு எதுவுமே பலனிளிக்காது. அதிபர் உலக நாடுகளிடம் பிரபாகரனோடு ஒரு மணி நேரம் பேச நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
thurai
தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதமிருந்து, இறக்கும் புலிகளிற்கு குழுக்கோஸ் ஏற்றுவதற்கு முயலவேண்டாம். கொலைகாராப் புலிகளிற்கு பணம் கொடுத்து வளர்த்த புலத்துத்தமிழர். உங்களால் 100000 க்கு மேல் சிஙகளவ்ரிடம் தண்ணீருக்கு கை நீட்டுகின்றார்கள். ஒருவர் தண்ணீர் குடிக்காமலிருப்பது பெரிய விடயமல்ல.
துரை
azan
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 10000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்பினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுமுள்ளனர். இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பொது மக்களும் சர்வதேச கண்காணிப்பு இன்றி அல்லற்படுகின்றனர்/
பரமேஸ்வரன் இந்த மக்களுக்காகக் குரல் குடுங்கோ. நான் தடுக்கேலை. புலி கொன்ற தமிழர் தொகை இதைவிடக்கூட. அவைக்கென்ன சொல்லப் போகிறியள்.
மற்றது இப்ப அல்லல்படும் சனங்கள் உங்கட ஆதிக்க காலத்தில அரசபோக வாழ்க்கையோ வாழ்ந்தவை. மத்தளம் மாதிரி அடி வாங்கிற சனத்தை வைச்சு நடத்துற உங்கட பிழைப்பை விட்டிட்டு அவங்களுக்கு போய்ச் சேரக்கூடிய மாதிரி ஒரு அலுவலை நடத்திக் காட்டுங்கோ பாப்பம்.
chandran.raja
ஒபாமாவுக்கும் ராஜயபக்சாவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒருவருக்கு பின்லாடன் உண்டு. மற்றவருக்கு பிரபாகரன் உண்டு. இருவருமே அரசியல் கட்சிகளுக்கோ நாட்டு மக்களுக்கோ தெரியாமல் மறைந்து வாழ்பவர்கள். இருவரிடமும் தற்கொலைப்படை உள்ளது. இல்லாதது அரசியல். இருப்பது வெறியுணர்வு கொலைகள். ஒருவர் மதத்தைப் பிரநிதிப்படுத்துபவர். மற்றவர் மொழியைப் பிரதிநிதிப்படுத்துபவர். இருவருமே மக்களின் அடிப்படை தேவைகளைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாதவர்கள். இருவரையும் மகிழ்சியூட்டுவது வெடிகுண்டுகள். மறைந்திருந்து காரியம் ஆற்றுபவர்கள். இருவருமே தேர்தல் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். இருவருமே பெரும்பகுதி மக்களின் கண்களுக்கு அறிமுகமாகாமல் புகைப்பட மூலமாக பிரசித்தி பெற்றவர்கள். இருவருமே நாட்டு மக்களைவிட பிற உலகத்திலேயே தமது பொருளாதார வசதிகளை பலதுறைகளிலும் ஏற்படுத்தி வைத்திருப்பவர்கள். இருவருமே இறந்துபோன பழைய உலகமான நிலப்பிரபுத்துவ மன்னர் ஆட்சியையும் பழக்க வழக்கங்களையும் மீட்டெடுக்க விரும்புபவர்கள்:
ஒரேஒரு வேறுபாடு:உண்னாவிதரம் இருந்து சாவதற்கும் ஆட்கள் உண்டு. மற்றவர்ருக்கு இல்லாதது. இருவருமே ஏணிவைத்து ஆகாயத்தில் இருக்கும் வெள்ளியை புடுங்கி பையில் போட்டு இறங்க நினைப்பவர்கள்.
கவலைக்குரிய விஷயம் மக்கள் அடிப்படைஉரிமைகளை இழந்து உடமை உயிர்களை பறிகொடுத்து கந்தலாகி கண்ணீர்ரோடு விழிபிதுங்க பார்த்து ஏங்கிநிற்பது
thamilen
உலக நாடுகளில் நடைபெற்ற சரியான அல்லது பிழையான போரட்டங்கள் எவ்வித்துலும் உலகநாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதனை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால் விடுதலைப்புலிகள் நினைத்தது போன்ற ஓர் விளைவைக் கொடுக்கவில்லை. இன்று உண்ணாவிதமிருக்கும் பரமஸ்வரனை இறப்பதுக்கு அனுமதிப்பது புலம்பெயர்வாழ் தமிழரின் வக்கிரம் அல்லது இவரின் இறப்பை வைத்து அரசியல் நாடாத்த விழையும் புலத்து புலிகளால் மேற்கொள்ப்பட விருக்கும் மாபெரும் தவறு. இதனை வரலாறு எப்போதும் மன்னிக்காது. இனியாவது பரமேஸ்வரனின் உண்ணாவிரதத்தினை நிறுத்தி தமிழ்மக்களது எதிர்காலங்களில் நடைபெறவிருக்கும் உரிமைப் போரட்டங்களில் ஈடுபடவைத்தல் வேண்டும்
chandran.raja
பரமேஸ்வரன் அவர்களே!
நீங்கள் குறைந்தது இருபது நாட்களின் மாற்றத்தையாவது புரிந்து கொள்ளுங்கள். இருபது வருடங்களுக்கு மேல் நடந்த போராட்டத்தில் புலிகளால் அர்த்தம் இல்லாமல் அழிவை மட்டும் பிரதிநிதிப்படுத்துவதை அறிந்து கொள்வீர்கள். மனிதஉயிர் மகத்தானது. அர்த்தத்துடன் உயிர்விடுவது இன்னும் பெருமை சேர்ப்பது. தவறான கொள்கைகளும் இலட்சியத்திற்கும் தன்னைத்தானே வருத்தி உயிரை விடுவது மிகமிக கொடுமையானது. ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல அனுமதிக்க முடியாதும் கூட.
ஒரு முறை உங்கள் விரதத்தை இடைநிறுத்தி இரண்டு லட்சத்தை தாண்டப்போகிற உமது உறவுகளின் கண்ணீர் கதைகளை கேளுங்கள். வவுனியா நலன்புரிமுகாமுக்கு சென்றால்தான் உங்கள் உணர்வுகளை நீங்களே புரிந்து கொள்ளமுடியும். அதன் பிறகு முடிவெடுங்கள் தாங்கள் யாருக்காக உயிர்விடுவது பற்றி. மகத்தான மனிதஉயிரை அர்தப்படுத்துங்கள்.
பார்த்திபன்
பரமேஸ்வரன் கிட்டத்தட்ட 3 வாரங்களாக தண்ணீர் மட்டுமே அருந்தி உண்ணாவிரதமிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியிருந்தும் எப்படி இவ்வளவு தெளிவாகவும் தெம்பாகவும் இவரால் இருக்க முடிகின்றது என்ற இடக்கு முடக்கான ஒரு கேள்வியை நான் முன் வைக்க விரும்பவில்லை. ஆனால் இன்று உண்ணாவிரதமென்றும் ஆர்பாட்டம் என்று முன்னெடுக்கும் இளையோர் அமைப்பினர் அமெரிக்க ஐ.நாச் சுற்றுலா, அந்தச் சுற்றுலா, இந்தச் சுற்றுலா என்று போகப் போறமெண்டு முழங்குவதை முதலில் நிறுத்திவிட்டு, உங்களில் ஒரு குழு அமைத்து முதலில் வன்னிக்குச் செல்லுங்கள். அங்கு புலிகளிடமிருந்து மீண்டு வந்துள்ள அந்த மக்களைச் சந்தியுங்கள். அவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் காது கொடுத்துக் கேளுங்கள். அப்புறம் என்ன செய்ய விரும்புகின்றீர்கள் என்பதை தெரிவியுங்கள்.
அத்துடன் இன்னொரு கேள்வி ஒபாமாவின் சரியான முன்னெடுப்பை எதிர் பார்ப்பதாக கூறியுள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் பிரித்தானியப் பிரதமர் இளையோர் அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நேரம் ஒதுக்கி அழைத்தபோது ஒருவரும் கலந்து கொள்ளவில்லை என சென்ற ஞாயிற்றுக்கிழமை நடா மோகனின் இலண்டன் தமிழ் வானொலி தெரிவித்து ஏன் இவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லையென்ற கேள்வியையும் நடா மோகனே எழுப்பியிருந்தார். ஆனால் இதுவரை எவரும் அதற்கு பொறுப்பான பதில் வழங்கவுமில்லை. அப்படி பிரித்தானிய பிரதமரின் அழைப்பை இளையோர் அமைப்பு ஏற்று கலந்து கொள்ளவில்லையென்றால் உங்கள் போராட்டமென்பது போலித்தனமானதாக மற்றவர்கள் நினைப்பதில் என்ன தவறு???
mukilvannan
is that true its pointless demonstration on london street.am so angry about this.
mano
இங்கேயும் செத்தார்கள். திலீபன்> மட்டக்களப்பில் ஒரு அன்னை பூபதி. அந்த உயிர் இழப்பில் சாதித்தது என்ன? நீங்கள் இறந்தால் என்ன கிடைக்கும் என்று உங்களுக்கே தெரியாது என்று நினைக்கிறேன்.
இங்கே இடம்பெயரும் மக்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கொடுக்க> எப்படி சிரமப்படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமோ? நீங்கள் சிங்கள இராணுவம் என சினக்கும் அந்த இராணுவம் மிக சிரமப்பட்டுத்தான் அந்தத் தண்ணியைக் கொடுக்குது.
போராடுங்கள் அது தவறில்லை. உங்களால் இப்போது முடியுமா? புலிகளிடம் சிக்கியுள்ள மக்களை உடனடியாக புலிகள் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராட முடியுமா? அந்தக் கோரிக்கையை வைத்தீர்கள் என்றால் உங்களைச் சுற்றிநிற்கும் இந்தக் கூட்டம் விலகி விடும். நீங்களும் உங்கள் படுக்கையிலிருந்து தனியே கிளம்பி வீட்டுக்குப் போக வேண்டியது தான். அப்போது தெரியும் தமிழின உணர்ச்சியைப் பற்றி.