பேர்லினில் இலங்கை தூதரகம் மீது வியாழன் இரவு கைக்குண்டு வீச்சு

germany.jpgஜேர்மனியின் பேர்லின் நகரிலுள்ள இலங்கைத்தூதரகம் மீது கடந்த வியாழக்கிழமை இரவு கைக்குண்டுத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தூதரகப்பகுதிக்கு வந்த சிலர் இரு கைக்குண்டுகளை தூதரகத்தின் மீது வீசியுள்ளதாக பேர்லின் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு குண்டுகளில் ஒன்றே வெடித்துள்ளது. மற்றது வெடிக்கவில்லை. இக்குண்டுவெடிப்பால் கட்டிடத்திற்கு சிறிதளவு சேதமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அங்கிருந்த எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே இந்தக் குண்டுத்தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தாங்கள் கருதுவதாக இலங்கைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேர்லின் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்தமூன்று மாதங்களுக்கு முன்னரும் இந்தத் தூதரகம் மீதுதாக்குதல் நடத்தப்பட்டதும் தெரிந்ததே.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அதானே எத்தனை நாளைக்குத் தான் நம்ம இளையோர் முட்டையை மட்டும் வீசிக் கொண்டிருப்பது?? வன்னியலை போய் செய்ய முடியாவிட்டால் என்ன வாழுற நாட்டிலை செய்து விட்டால் போதுமென நினைக்கினம் போல….

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கடந்துபோன காலங்களை நினைத்துப் பார்த்தால் புலம்பெயர்ந்த புலிக்குட்டிகளில் ஆத்திரம் ஆவேஷசம் வந்தாலும் உண்மையில் அவர்கள் அப்பாவிகள். அவர்களுக்கு பிறந்தவீட்டு அரசியலையோ புகுந்தவீட்டு அரசியலையோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இனியும் புரிந்து கொள்வார்கள் என்பது அறிவீனம். அப்படியென்றால்…?

    Reply
  • Thirumalai vasan
    Thirumalai vasan

    இளையோர் அமைப்பபினர் இலங்கை அரசியல் பற்றியதும் கடந்து வந்த விடுதலைப்போராட்டம் பற்றியதும்> இயக்கச் சண்டைகள் பற்றியும் அவர்களது சுயநலன்களுக்காக தமிழ் மக்களை கொள்ளையடித்தது பற்றியயதுமான தகவல்களை இயக்கசார்பற்ற முறையில் இனியாவது ஒருவர் முன்வந்து எழுதுவாரா? யானை விழுந்தால் தவளையும் புறங்காலால் இடிக்குமாம். அதுபோல பரஸ்பரம் வியாக்கியானம் வழங்கிக்கொண்டிராமல் அத்தகைய ஆய்வுக்கட்டுரைகளை எழுதி விநியோகித்தால் அவர்களுக்கு அறிவூட்டலாம். உருப்படியாக இந்த அரசியல் அனுபவ அறிஞர்கள் ஏதும் சமூகத்துக்குச் செய்தமாதிரியும் இருக்கும். முந்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறுமலர்ச்சிக் கழகம் சின்னதாகப் பல புத்தகங்களை எழுதியதாக அறிவோம். புகலிடத்திலும் அப்படி அங்கிலத்தில் எழுதப்படவேண்டும். அதை விட்டு புரிந்துகொள்வார்களா மாட்டார்களா என்பது வெட்டிப் பேச்சு.

    Reply
  • palli
    palli

    யார் யானை?? யார் தவளை? என்பதை இந்த பாளாய் சிந்திக்கும் பல்லிக்கு யாரும் சொல்லபடாதா???

    Reply
  • uma
    uma

    திருமலைவாசன் உங்கள் கருத்தை நான் வரவேற்கின்றேன் சிறு திருத்தங்களுடன். நீங்கள் குறிப்பட்ட இளையோருக்கு புலியும் பிரபாவும் சிங்களவனும்தான் தெரியும். அவர்கள் பிறக்கமுதல் இருந்த புலிஅமைப்பு உருவான வரலாறோ அன்றி மாற்று இயக்கம் பற்றியோ எதுவுமறியாதவர்கள். ஆகவே பழையவர்களே இதை முன்னெடுக்க வேண்டும்.

    இரண்டாவது நான் தேசத்தில் பல தடவைகள் பல இயக்கத்தவர்கள் (புலி தவிர்ந்த) தமது இயக்கத்தினுள் நடந்த உட்படுகொலைகள் சரி பிழைகள் தவறுகள் பற்றி விமர்சித்ததையும் கண்டித்ததையும் மன்னிப்பு கேட்டதையும் வாசித்துள்ளேன். அவற்றைவிட பலமடங்கான விடயங்கள் வெளிவராதும் உள்ளது. காரணம் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இல்லாதது அல்லது இருந்தும் அவைபற்றி எதையும் முன்வைக்காது மெளனிப்பது. இவர்கள் தாம் முன்வந்து சொல்ல விரும்பாததை தன்னை இனங்காட்டாமலே கட்டாயம் வெளியிட வேண்டும். அவர்கள் அவ்வாறு மெளனிப்பது சகோதரங்களுக்கு புரியும் துரோகமாகும்.

    இதை பதியும் நேரத்தில் இவ்விடயம் ஞாபகம் வந்தது. சில மாதங்களின் முன்பாக தேசம் குழுவினரின் வேட்டையாடு விளையாடு பற்றிய விமர்சனத்தில் பங்குபற்றிய சிறார்கள் பற்றி எதிர் விமர்சனங்களளை இட்டவர்கள் மற்றும் எதிர்க்கட்டுரை வரைந்தவர்கள், தற்போதைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கும் சிறார்கள் பற்றி எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை. இது போன்ற பக்கச் சார்பான மனங்கொண்ட நிலை மாறும் போதுதான் திருமலை வாசன் நீங்கள் எதிர்பார்க்கும் விடயம் அரங்கேறும் என்பதில் ஜயமில்லை. நீங்கள் சொல்லும் விடயங்கள் சிறிது சிறிதாக எழுத்தாக்கம் பெறும், வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

    நிறைவாக ஒருசொல். நீங்கள் எடுக்கும் உவமானத்தால் உங்கள் கருத்து அடிபட்டுப் போகும் நிலையை காண்கிறேன்.

    Reply