லண்டன் தமிழ் இளையோரின் தமிழ்தேசிய எழுச்சி : மயூரன் (லண்டன்)

Protest_Londonவன்னியில் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மிகப்பெரும் மனித அவலத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கைத் தாண்டி தற்போது ஆயிரம் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால் புலம் பெயர்ந்து வாழும் மக்களில் பெரும்பாலானோர் தமது உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இது இவர்கள் மனதில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தி அவர்களுக்குள் இருக்கும் தமிழ்த் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பி விட்டிருக்கிறது. இந்தத் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி உலகின் தலைநகரங்கள் எங்கும் ஈழத்தமிழர்கள் நகர வீதிகளில் இறங்கி போக்குவரத்துக்களை ஸ்தம்பிதம் அடையச் செய்து உலக நாடுகளின் பார்வையை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்ததோடல்லாமல் இலங்கை அரசாங்கத்தை புலம்பெயர் தமிழர்களுடன் குறிப்பாக மாணவர்களுடன் சர்வதேச அரசியற் களத்தில் போராடும் நிலைக்கும் இட்டுச்சென்றிருக்கின்றது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி முதன் முதலாக பிரான்ஸ் வாழ் எம்முறவுகளால் பாரீஸின் மையப்பகுதியில் ஒரு சாலைமறியல்ப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இது ஒரு சில மணிநேரங்கள் மட்டுமே இடம்பெற்றாலும் இதுவே புலம்பெயர் நாடுகளில் நடக்கும் வீதி மறிப்புப் போராட்டங்களுக்கு அத்திவாரம் இட்டது எனலாம். அதனைத் தொடர்ந்து லண்டன், நோர்வே என இச் சாலைமறியல்ப் போராட்டங்கள் விரிவடைந்தன.

கடந்த ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து இலங்கையின் சுதந்திர தினமான நான்காம் திகதி வரை சுழற்ச்சி முறையிலான உண்ணாவிரதத்தினை பாராளுமன்றத்தின் முன்னுள்ள சதுக்கத்தில் பிரித்தானிய தமிழ் இளையோர்கள் மேற்கொண்டிருந்தனர். இதில் பலர் தமது ஆதரவினைத் தெரிவித்ததோடு அவ் உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஜனவரி மாதம் 31ஆம் திகதி லண்டனில் முதலாவது வரலாhறு காணாத எழுச்சிப் பேரணியையும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 125,000 மக்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது தெரிந்ததே. 
அந்த எழுச்சிப் பேரணியானது லண்டனின் மத்திய பகுதிகளில் ஒன்றான மில்பாங்க் என்னுமிடத்திலிருந்து ஆரம்பமாகி பாராளுமன்றம் முன்பாகச் சென்று ரெம்பிள் பிளேஸ் என்ற இடத்தில் முடிவடைந்திருந்தது. இதற்கான ஒழுங்கமைப்பினை இயையோர்களாகிய தமிழ் மாணவர்களே முன்னின்று செய்திருந்தனர்.  இந்த எழுச்சிப் பேரணிக்கான அனுமதி மதியம் 1.30 இருந்து மாலை 4 மணிவரையே கிடைத்தது. ஆனால் மக்கள் வெள்ளம் அலை மோதியதனால் மாலை ஐந்து மணியாகியும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் வெஸ்மினிஸ்ரர் பாராளுமன்றத்தைத் தாண்டிச் செல்லவில்லை. இதனால் காவல்த்துறையினர் அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. ஆகவே அங்கு கலந்து கொண்ட SAGT அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வீதியை மறித்து வீதிக்குக் குறுக்கே அமர்ந்தனர். இதனால் அங்கு வந்த மக்களும் வீதியில் அமர்ந்தனர். இவ்வாறு விதியை மறித்தவர்களை கலைப்பதற்கு பிரித்தானிய காவல்த்துறையினர் தடியடிப்பிரயோகம் மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. இதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கீத்வாஸ் அவர்களின் தலையீட்டின் பேரில் மக்களாகவே கலைந்து சென்றனர்.

இதுவே பிரித்தானியாவில் நடந்த முதலாவது வீதி மறியல்ப் போராட்டமாகும். இவ்விதி மறியல் போராட்டத்தை அன்றைய தினம் முன்னின்று நடாத்தியவர்கள் இந்த சாக்ரி (SAGT) அமைப்பினரே. முதலில் இந்த சாக்ரி அமைப்பினர் என்றால் யார் என நோக்கினால். தமிழர் இனப் படுகொலைக்கெதிரான மாணவர் இயக்கம் (Student Against Genocide of Tamil)  என்பதாகும். இதன் சுருக்கமே SAGTஎனப்படுகிறது.  இது கடந்த ஜனவரி மாதம் முதல் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக இன்றுவரை தனது பணிகளை முன்னெடுத்து வருகிறது.
 
மேலும் இலங்கையின் சுதந்திர தினமாகிய பெப்ரவரி நான்காம் திகதி பாராளுமன்றச் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை பிரித்தானிய இளையோர் அமைப்பு மேற்கொண்டிருந்தது. இதிலும் கிட்டத்தட்ட 12 யிரம் வரையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 28 திகதி வரை சுழற்ச்சி முறையில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டமும், இனப்படுகொலைகளைச் சித்தரிக்கின்ற கண்காட்சிகளும், இனப்படுகொலை தொடர்பான புரிந்துணர்வுக் கலந்துரையாடல்களும் இடம் பெற்றன. இதன்மூலம் மாணவர்கள் தமிழ் இனப்படுகொலைகளை பல்கலைக்கழக ரீதியில் கொண்டுசென்றனர். இந்த நிகழ்ச்சி நிரலையும் தமிழர் இனப் படுகொலைக்கெதிரான மாணவர் இயக்கமே SAGT ஒழுங்கு செய்திருந்தது.

பின்னர் வன்னியில் நடக்கின்ற இனப்படுகொலையானது நூற்றுக் கணக்கில் உயர்ந்த போது பொங்கி எழுந்த தமிழ் இளையோர்கள் கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 03 மணியளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் அணிதிரண்டு திடீரென அந்த வீதியை மறித்து வீதிக்குக் குறுக்கே அமர்ந்தனர். இதன்பின்னர் அவ்விடத்தில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு காவல்த்துறையினர் மேலதிகமாகக் குவிக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் பிரித்தானிய காவல்துறையினரால் அவர்களை ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை. இச்செய்தியைக் கேள்விப்பட்ட மக்கள் தமது வேலைகளையும் விட்டுவிட்டு அங்கு சென்று சாலைமறியல்ப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் இணைந்தனர். இதனால் காவல்த்துறையினர் செய்வதறியாது தவித்தனர். இது இவ்வாறு இருக்க மறுநாள் செவ்வாய்கிழமை (07.04.09) அதிகாலையில் மக்கள் தம் காலைக் கடன்களையும் வேறு வேலைகளையும் பார்ப்பதற்காக கலைந்தனர். இதனால் அங்கு 1500 வரையான மக்களே இருந்தனர்.

இச்சந்தர்ப்த்தைப் பயன்படுத்திய காவல்த்துறையினர் காலை எட்டு மணியளவில் அந்த பாராளுமன்ற வீதிக்கு விரைந்த காவல்த்துறையினரும், கலகத் தடுப்புப் பிரிவினரும் அங்கிருந்த மக்களின் மீது தடியடிப்பிரயோகம் செய்தனர். இதன்போது மாணவர்கள் மக்கள் எனப் பலர் கை, கால் முறிவுகளுக்கும் காயங்களுக்கும் உள்ளானார்கள். இருந்தும் மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லவில்லை. அடிவாங்கியும் நகராது இருந்தனர். காவல்த்துறையினருக்கு வேறுவழி தெரியவில்லை. உடனே அவர்கள் நாங்கள் உங்களுக்கு பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தை ஒதுக்கித் தருகின்றோம் அதற்குள் இருந்து உங்கள் ஆர்ப்பாட்டத்தினைத் தொடரலாம் என்றனர். இம்முடிவின் பேரில் மாணவர்கள் மக்களை அவ்விடத்திலிருந்து அகலச்செய்து பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்திலிருந்து தங்களது கண்டணத்தை வெளிப்படுத்த ஏற்பாடுசெய்தனர். அது இன்றுவரை தொடர்கின்றது.  இதேபோல்த்தான் நோர்வேயிலும், பிரான்சிலும் இளையோர்கள் சாலைமறியல்ப் போராட்டத்தில் இறங்கினர். இருந்தபோதும் அவர்களை காவல்த்துறையினர் அங்கிருந்து அகற்றிவிட்டனர்.
 
இது இவ்வாறு இருக்கையில் அன்று மாலை (07.04.09) 05 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 21 வயதுடைய சிவகுமாரவேல் சிவதர்சன்;, 28 வயதுடைய சுப்பிரமணியம் பரமேஸ்வரன் ஆகிய இரு இளைஞர்களும் சாகும் வரை நீராகாரமின்றி உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டனர். இதற்கு ஆதரவாக பல உறவுகள் இரவு பகலாக அங்கிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிரித்தானிய தமிழ் மாணவர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்கள் நான்கு நாட்களாகியும் வீடு செல்லாது அங்கேயே படுத்துறங்கி உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களு ஆதரவு வழங்கியதனை என்னால் காணமுடிந்தது.  இவ்வாறு உண்ணாவிரதம் இருந்தவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சைமன் கியூஸ் சந்தித்ததனைத் தொடர்ந்து அவர்கள் நீர் மட்டும் அருந்தி தமது உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டனர். இருந்த போதும் பிரித்தானிய இளையோர் அமைப்பு, உண்ணாவிரதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
 
இதன் பயனாக பாராளுமன்ற உறுப்பினர் செரோன் மக் டொனால்ட் அவர்களால் கொடுக்கப்பட்ட உறுதி மொழியை அடுத்து சிவகுமாரவேல் சிவதர்சன் என்பவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை 10.04.09 கைவிட்டார். அதாவது செரோன் மக்டொனால்ட் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை பிரித்தானிய அரசு. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் அமைப்பிற்கும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கும் அழைத்து செல்வதாக வாக்குறுதி வழங்கப்பட்டதை அடுத்தே சிவதர்சன் போராட்டத்தைக் கைவிடார்.

ஆனால் சுப்பிரமணியம் பரமேஸ்வரன்  இன்றுவரை போராட்டத்தினைத் தொடர்கின்றார். பரமேஸ்வரன் அவர்களிடம் உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்றுவரை தொடர்ந்திருப்பதற்கான காரணத்தை வினாவியபோது என்னை இங்கிருந்து அகற்றுவதற்காக நான் எப்போது சுயநினைவை இழப்பேன் எனபிரித்தானிய காவல்த்துறையினர் எதர்பார்த்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் முடிவு கிடைக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால் எமது கோரிக்கைகள் நிறைவேறாது எனது உயிர் பிரிந்துதான் இதற்கு ஒரு முடிவு கிடைக்குமாக இருந்தால் அதற்கும் நான் தயாராக இருக்கின்றேன். எமது போராட்டத்திற்கு சர்வதேசம்தான் பதில் கூறவேண்டும். சர்வதேச நாடுகள் போருக்குப் பின்புலமாக நிற்பதை நிறுத்தி தமிழ்மக்களைக் காப்பாற்ற வேண்டும். எமக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உறுதிமொழி வழங்கியுள்ளனர். அவை அமுலாக்கப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றார். பிடிவாதமாக இன்றுவரை தியாக தீபம் திலீபன் அண்ணாவின் வழியில் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றார்.

பரமேஸ்வரன் முதல் நான்கு நாட்களும் நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்தார். அதன்பின்னர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க தண்ணீரைப் பருகுகின்றார். தற்போது இவருக்கு நாடித்துடிப்பும் இரத்த அழுத்தமும் குறைந்துகொண்டுவருகிறது. அதேநேரம் தண்ணீர் போதியளவு அருந்தாததனால் சிறுநீரகம் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலை தொடர்வதால் இவரது நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அத்துடன் கடந்த 21ஆம் திகதி பரமேஸ்வரன் மேலும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தமது சொந்த நிலங்களை விட்டு அகதிமுகாம்களில்  இலங்கை அரசு மக்களை அடைத்திருப்பதனால் அங்கு அடைபட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிலையும், மக்களின் மனோநிலைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சர்வதேச நாடுகள் இதில் தலையிட்டு அந்த மக்களை உடனடியாக தமது சொந்த நிலங்களில் குடியேற்ற ஆவனை செய்ய வேண்டும் என்றார். தமிழர்கள் அல்லாத பிற நாட்டவர்களும் அங்குவந்து கண்ணீர் விட்டு அழுதனர். ஒரு ஸ்பானிஸ் பெண்மணி கண்ணீர் மல்க உயிருக்கு எவ்வளவு மதிப்பிருக்கின்றது. எனவே இவர்களது உயிர்முக்கியம் எனவே உண்ணாவிரதத்தை விட்டு அமைதிவழியில் மேற்கொள்வதே சிறந்தது என்றார்.

அத்துடன் கடந்த 11ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ளச் சென்றவேளை பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரனுக்கு உதவியாக வெறும் இருபது மாணவர்களே இருந்தனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய பிரித்தானிய காவல்த்துறையினர். அந்த மைதானத்தில் உள்ள புற்கள் உங்கள் ஆர்ப்பாட்ட மூலம் அழிக்கப்படுகின்றது எனக் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்றி புற்களைச் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்தனர். இருந்தும் மக்களை அந்த புற்றரைகளுக்கு அப்பால் இருந்து உண்ணாவிரதத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் மேற்கொள்ளுமாறும் கூறினர். முன்னர் 400 பேர் மட்டும் இரவு பகலாக அங்கு தங்கியிருக்க அனுமதித்த காவல்த்துறையினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதிமுதல் வெறும் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் ஏனையோர் அங்கு வந்து உண்ணாவிரதியைப் பார்த்துவிட்டு அகன்றுவிடவேண்டும் என்றும் கூறினார்.

இதனை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றுவரை செய்கின்றனர். எவ்வாறாவது காவல்த்துறையினர் மக்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அங்கு கலந்து கொண்டிருப்பவர்கள் யாரும் ஒலிபெருக்கி பயன்படுத்தமுடியாது. என்று அறிவித்தனர். இதனால் ஆத்தரமடைந்த 4000 இற்கும் அதிகமான மாணவர்களும் மக்களும் ஈஸ்டர் தின விடுமுறையான திங்கட்கிழமை (13.04.09) மாலை 03 மணியளவில் வேகுண்டெழுந்து மீண்டும் வீதியைத் தடைசெய்தனர். அன்றையதினம் விடுமுறை என்றதனால் பல காவல்த்துறையினர் கடமையில் இல்லை. இதனால் அவர்கள் ஒருகணம் சங்கடப்பட்டாலும் எதுவும் செய்யமுடியவில்லை. அவர்களும் மக்களை எதுவும் செய்யவில்லை. இரவு 09 மணியளவில் பிரித்தானிய தமிழ் மாணவர்களின் பணிப்பின் பேரில் மக்கள் தாமாகவே வீதியை விட்டகன்று வீதியை வாகனங்களின் போக்குவரத்திற்காக திறந்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் திகதி ஸ்கொட்லண்ட் யாட் காவல்த்துறையினர் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனைச் சந்தித்துவிட்டு 20ஆம் திகதி காலை தமது முடிவினை அறிவிப்பதாக கூறியபின்னர். பரமேஸ்வரன் ஊடகங்களினூடாக மக்களுக்கு பணிவான வேண்டுகோள் ஒன்றைவிடுத்தார். அதாவது அனைவரையும் 20ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள சதுக்கத்தில் காலை ஒன்றுகூடுமாறு மன்றாடி வேண்டினார். இதனால் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் இற்கு மேற்பட்ட மக்கள் காலை அவ்விடத்தில் கூடினர். இதனால் அவ்விடம் நிரம்பி வழிந்தது. மக்கள் நிற்பதற்கே இடமில்லாது போனது. இதனால் கடந்த 11ஆம் திகதி பிரித்தானிய காவல்த்துறையினரால் புற்களைச் சுற்றிப் போடப்பட்ட கம்பிவேலிகளை உடைத்தெறிந்து கொண்டு மக்கள் புற்தரைக்குச் சென்றனர். இதன்பின்னர் காவல்த்துறையினரே அங்கு ஏற்கணவே போடப்பட்ட கம்பிகளை அவ்விடத்திலிருந்து அகற்றினர்.

இதன் பின்னர் மூன்றாவது தரமாகவும் வீதிகளை மறிப்பதற்கு தமிழ்மாணவர்கள் திட்டம் தீட்டினர். அதனடிப்படையில் மாணவர்கள் காலை 9.30 மணியளவில் அங்கிருந்த மக்களையும் அழைத்துக்கொண்டு பாராளுமன்றத்திற்கு முன்னால் செல்லும் பிரதான மூன்று வீதிகளை பிரித்தானியப் பொலீஸாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஊடறுத்துச் சென்று வீதியின் நடுவில் அமர்ந்து கொண்டனர். இதனால் எதுவுமே செய்யமுடியாத காவல்த்துறை வெறும் கைகளை மட்டும் கட்டிநின்று நடப்பதை அவதானித்துக்கொண்டிருந்தனர். இந்த நிகழ்வினை Skynews,Bbc முதலான தொலைக்காட்சிகளும் மெற்ரோ, ஈவினிங் ஸ்ராண்டட் முதலான பத்திரிகைகளும் காட்சிப்படுத்தின. தொடர்ச்சியாக காவல்த்துறையினர் மக்களை வீதிகளை விட்டகன்று சதுக்கத்திற்குள்ளும், புற்றரைகளுக்குள்ளும் செல்லுமாறும் நீங்கள் புற்றரைகளை எதிர்வரும் மே மாதம் 11 திகதிவரை பயன்படுத்தலாம் என்று உறுதியளித்தும் மக்கள் கலைந்து செல்வதாக இல்லை. மாறாக விரியம் கொண்ட மக்களின் போராட்டத்தினால் காவல்த்துறையினர் மௌனமானார்கள்.

நேரம் இரவு 10 மணியையும் கடந்து சென்றது. மக்கள் வீதியை விட்டகல்வதாக இல்லை. இருந்தும் நேரம் நள்ளிரவு 12 மணியைத் தொடும்போது  அங்கிருந்த மக்களின் தொகை வெறும் 1500 ஆகவே இருந்தது. அங்கிருந்த மாணவர்கள் மக்களை அவ்விடத்தைவிட்டகன்று புற்றரைகளுக்குச் செல்லுமாறு வேண்டினர் காரணம் அங்கிருந்தவர்களின் எண்ணிக்கையையும், மக்கள் காவல்த்துறையினரால் தாக்கப்படாதிருக்கவுமே அவர்களை வீதியை விட்டகலுமாறு மாணவர்கள் வேண்டினர். அதனடிப்படையில் நள்ளிரவு 12 மணிக்கு தாயகத்தில் இறந்தவர்களுக்காகவும் அன்று பிரித்தானிய மகாராணியின் பிறந்ததினம் என்பதனாலும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செய்துவிட்டு வீதியை விட்டகன்றனர். இங்கு முக்கியமாக மக்கள் வீதியை விட்டகலும் போது வீதியில் உள்ள குப்பைகளை அகற்றி வீதிகளை நன்கு துப்புரவு செய்ததன் பின்னரே புற்றரைகளிற்குச் சென்றனர். காலை 9.30 ற்கு பிரதான மூன்று விதிகளை மறித்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கே வீதிகளை விட்டகன்றனர்.

அதன்பின்னர் கடந்த செவ்வாய்கிழமை பிரித்தானிய தமிழ் மாணவர்களால் 40 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்திப்பொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வழைப்பிதழை ஏற்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே சமூகமளித்திருந்தனர். இதனால் வெறுப்படைந்த மாணவர்கள் மீதமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கும் முயற்ச்சிகளில் தற்போது இறங்கியுள்ளனர். அத்துடன் உண்ணாநிலைப் போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் தமிழ் மாணவர் அமைப்பு கவனிக்க. SAGT(Student Against Genocide of Tamil) என்ற இயக்கம் அதற்கு வெளியே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பல அமைப்புக்களுக்கும் அரசியல் ரிதியிலான விளக்கங்களையும் அழுத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

அதாவது 24 பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்திருக்கும் இந்தச் சாக்ரி SAGT இயக்கம் பிரித்தானிய மனிதஉரிமைகள் அமைப்பின் மாணவர்கிளையின் ஆதரவையும் பெற்றுள்ளது. அத்துடன் யுனிசண் Unison என்கின்ற தொழிற்சங்கத்திற்கும் எமது அவலத்தினைத் தெரியப்படுத்தி அவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளனர். இதனால் யுனிசன் தொழிற்சங்கம் பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்தியத் தூரதரத்திற்கு ஒரு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. இதில் நீங்கள் அப்பாவித் தமிழ்மக்களைக் கொல்வதற்கு ஆதரவு வழங்குகிறீர்கள். அத்துடன் அபாயகரமாக கிளாஸ்ரர் குண்டுகளையும், இரசாயண வாயூக்களை இலங்கை இராணுவம் பயன்படுத்துவதற்கும் நீங்கள் நேரடியாக உதவுகின்றீர்கள் என இந்தத் தொழிற்சங்கம் நம்புகின்றது. எனவே இவற்றை முடிந்தவரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் பிரித்தானிய ஆசிரியர் தொழிற்சங்கமும் (Union for teacher) தனது ஆதரவினை இந்த சாக்ரி அமைப்பிற்கு வழங்கியுள்ளது. மேலும் அரச வர்த்தகத்துறைச் தொழிற்சங்கமும் (Civil and Commercial Works Union) தனது ஆரதவினை இந்த மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கியுள்ளனர். அத்துடன் பிரித்தானிய மாணவர்களின் அமைப்புடன் (National Union of Student) ச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சாக்ரி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆகவே இவைகள் அனைத்தும் பிரித்தானிய தமிழ் மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

மேலும் 22ஆம் திகதி தமிழ் மாணவர்கள் அனைவரும் பாடசாலைச் சீருடையுடன் பாடசாலைகளுக்குச் செல்லாது பிரித்தானிய நாடாளுமன்றச் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமையை காணக்கூடிதாக உள்ளது. இதில் 10ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து ண்டிருந்தனர். ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு கடந்த திங்கட்கிழமை ஒரு தொகுதிப் மாணவர்களின் பிரதிநிதிகள் சென்று திரும்பியிருக்கின்றனர். அத்தோடு செவ்வாய்கிழமை கொமன்வேல்ட் நாடுகளின் ஒன்றியததின் காரியாலயமான பிரான்சுக்கும், வியாழக்கிழமை (23.04.09) வோஷிங்டனுக்கும் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதனுடைய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு ஒரு புறம் உடனடி யுத்த றுத்தத்திற்காக சர்வதேச நாடுகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்திலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

ஆகவே ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது எல்லாத் தரத்திலுமுள்ள தமிழ் மாணவர்கள்களை இளையோர் அமைப்பு, தமிழ் மாணவர் ஒன்றியம், சாக்ரி இயக்கம் ஆகியவற்றினூடாக இணைத்து அதை ஒரு நிறுவன ரீதியாக ஒருங்கிணைத்து அதனூடாக மிகப்பெரிய தமிழ்த் தேசியஎழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். எனவே ஒட்டுமொத்த இளையவர்களும் தாயகத்திற்கான பணியில் உங்களால் இயன்ற பங்கினை இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்துள் செய்து தமிழர் சுயநிர்ணயத்திற்கான நீண்ட வரலாற்றுப் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

Show More
Leave a Reply to viji Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

22 Comments

  • thevi
    thevi

    உலகமே தமிழ் தேசிய போராட்டம் பயங்கரவாத போராட்டம் என பிரகடனப்படுத்தி இலங்கை அரசின் பின் அணிதிரண்டு நிற்கும் நிலயை கண்டும் புத்தி வரவில்லை. இனியென்ன முழு உலகையும் எதிர்த்து போராடி அழியுங்கள்!

    Reply
  • மாயா
    மாயா

    ஒரு காலத்தில், உலகத்தை படையெடுத்து வென்றவர்கள் ஈழத் தமிழர்கள் என்று இணையத்தில தமிழில எழுதி வைக்கக் கூடிய புண்ணாக்குகள் இவர்கள்.

    Reply
  • viji
    viji

    கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் என்ற பெயரில் தேசம்நெற் தரும் தொல்லை தாங்கமுடியவில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அதானே Viji போன்றவர்களுக்கு மனச்சாட்சியை உறுத்தும் வகையில், கருத்துக்களை பதிய இடம் கொடுக்கும் தேசம் நெற்றை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மயூரன்
    நீங்க பந்தி பந்தியாக என்னதான் ரீல் விட்டாலும் உலகம் உங்களைக் கணக்கிலே எடுக்கப் போறதில்லை. நீங்க தலையைக் காப்பாற்ற போராடாமல், அங்கு அல்லறுரும் மக்களுக்காக போராட்டம் நடத்தியிருந்தால் உலகமே உங்கள் பின்னால் திரண்டிருக்கும். உங்க தலையோ தன் பிள்ளைகளை பட்டதாரிகளாக்கி, உங்களைத் தறுதலைகளாக்க முடிவு கட்டிய புண்ணியவான். இது புரியாமல் அவருக்காக கொடி பிடிக்கும் உங்களை நீங்களே ஒருமுறை மறுபரிசோதனை செய்து கொள்ளுங்கள். அப்போது சிலவேளை புத்தி தெளியலாம். இலண்டனில் உண்ணாவிரதமிருந்த சிவதாசனுக்கு செரோன் மக்டொனால்ட் அளித்த உறுதி மொழியை அடுத்து அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டதாகச் சொன்னீர்கள். உறுதியளித்தபடி சிவதாசன் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு சுற்றுலா போய் வந்து விட்டாரா?? ஏன் முடியவில்லை என்ற விளக்கத்தையும் தந்திருக்கலாமே?? உங்க சகபாடியொருவரே தீபத்தில் சிவதாசன் பொய் பெயரில் பதிந்துள்ளார், அதனால் இன்னொருவரை எமக்குள் தெரிவு செய்ய முடிவெடுத்துள்ளோம் என்றார். அப்போ இன்னொருவரை தெரிவு செய்து விட்டீர்களா என்ற கேள்விக்கு இன்னுமில்லை எங்களுக்குள்ளும் நிறைய விசக்கிருமிகள் இருப்பதால் இழுபடுகின்றதென்றார். இதைவிட தெளிவாக உங்க ஒற்றுமை பற்றி விளக்கம் கொடுக்க முடியாது. கண்கெட்ட பின்பு சூரியனை பார்க்க முடியவில்லையே என்று வருந்துவது போல், உங்க படிப்புகளை பாழாக்கி நாளை நடுரோட்டில் நின்று ஒப்பாரி வைப்பதற்கு முன்பே சிந்தித்துச் செயற்படுங்கள். உண்மையில் வன்னியிலுள்ள அந்த அப்பாவி மக்கள் மீது உங்களுக்குக் கரிசனையிருந்தால் அந்த மக்களுக்காக ஏதாவது சேகரித்து அதனை செஞ்சிலுவைச் சங்க மூலம் அனுப்பி வையுங்கள். அதன் மூலம் கிடைக்கும் அந்த மக்களின் வாழ்த்து, உங்களை என்றென்றும் வாழ வைக்கும்.

    Reply
  • suban
    suban

    மயூரனின் கருத்துக்கு முதலில் மதிப்பளிக்கவேண்டும். இந்த இழையயோர் போராட்டத்தின் பலாபலன்களை தெளிவாக அலசவேண்டும்.

    இழையோரை நினைக்க ஒரே ஒரு முக்கியகவலை. இவர்கள் ஜீரிவியை தாண்டி வரவேண்டும். ஈழவரலாற்றை தெரிந்து கொள்ளவேண்டும். ஜனநாயகம் என்றால் என்ன? ஏகப்பிரதிநித்துவம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். உலகநாடுகள் எங்களை ஏன் பயங்கரவாதிகளாக பார்க்கிறார்கள்? நாங்கள் எங்கே தவறிழைத்தோம் என அவர்கள் தமக்குள் உரையாடவேண்டும். தமக்கு எதிரான விமர்சனங்களை அலட்சியம் செய்யாது கவனத்தில் கொள்ளவேண்டும். தமக்குள் நிறைய நிறைய விவாதிக்கவேண்டும். அப்போதுதான் இந்த மாணவர் சக்தி பலம்பெறும். இல்லையேல் வெற்று உணர்ச்சிக்கூட்டமாகி இதுவும் சீரளியும்.

    இந்த இழையோரை நெறிப்படுத்த ஆளில்லை.

    இந்த இடத்தில் விமர்சனங்கள் இருப்பினும் தோழர் இரத்தினசபாபதி நினைவிற்கு வந்து போகிறார். தோழர் ரட்ணாவுக்கு இன்னுமொரு அஞ்சலி.

    Reply
  • mugunthan
    mugunthan

    மயூரன் நீங்கள் முன்வந்து இந்த கருத்துக்களத்திற்கு எழுதவும் எமது கருத்துக்களை கேட்கவும் உடன்பட்டதிற்கு நன்றிகள்.

    இந்த லண்டனில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி நிறையவே சந்தேகங்கள் உள்ளன
    1. இந்த ஆர்ப்பாட்டம் பிரபாகரனை பாதுகாக்கவே அன்றி மக்களுக்காக அல்ல இல்லை இது மக்களுக்கானது என்றால் இந்த ஆர்ப்பாட்டங்களில் புலிகளை மக்களை விடுதலை செய்யும் படி கேட்டிருக்கலாம் சரி இனிமேல் என்றாவது கேட்டிருக்கலாம் நீங்கள் ஒழுங்கு செய்தவர்கள் இந்த கோசங்களை சரியாக முன்வைத்திருக்க வேண்டும். புலிகளளை அப்படிகேட்க ஜநா தொடக்கம் இந்தியா வரை கேட்டாச்சு ஏன் நீங்கள் கேட்கவில்லை பதில் தரவும்? இதைவிட உண்மை புலிகள் தான் மக்களை தடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது பாரிய மண்அணையை இராணுவம் உடைத்ததும் மக்கள் வெள்ளம் போல் பாய்ந்து ஓடியதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

    2. மக்கள் பட்டினியாலும் பசியாலும் குண்டுகளாலும் பாதிப்படைந்து இருக்கும் போது பிரபாகரனின் படங்கள் ஏன் முதன்மைப்படுத்தப்பட்டது இது வெட்கம் கெட்ட விடயமாக தெரியவில்லையா? மக்களின் துன்பத்திலும் பிரபாகரனுக்கு கட்டவுட் கொண்டு போவது இது புலிகளை பாதுகாக்கவும் – பிரபாகரனை முதன்மைப்படுத்தவுமே செய்யப்பட்டது. ஏன் நீங்கள் ஏற்ப்பாட்டாளர்கள் இதை கவனிக்கவில்லையா? பதில் தர முடியுமா?

    3. எங்கள் தலைவர் பிரபாகரன் என்ற கோசம் இதன் முக்கியத்துவம் என்ன ? இதை கோசித்தால் மக்களின் பிரச்சினைகள் மாற்றும் பெற்றுவிடும் என்றா நம்பினீர்கள் இதவும் மக்கள் மிகவும் கேவலமாக உடல்சிதைந்து கிடக்கும் நேரத்திலா உங்களக்கு தேவைப்பட்டது? பதில் தர முடியுமா?

    4. நீங்கள் பல்கழைக்கழக மாணவர்கள் அறிவுள்ளவர்கள் ஜரோப்பிய நாட்டின் சமூக ஜனநாயக நடைமுறைகளை அறிந்தவர்கள் இந்த மேற்கூறிய மூன்று விடயங்களுக்கும் மக்கள் துன்பப்படும்போது இந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததிலிருந்து உங்களை உங்கள் முயற்ச்சின் நோக்கத்தை நாம் சந்தேகிப்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்!!

    ///ஆகவே ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது எல்லாத் தரத்திலுமுள்ள தமிழ் மாணவர்கள்களை இளையோர் அமைப்பு, தமிழ் மாணவர் ஒன்றியம், சாக்ரி இயக்கம் ஆகியவற்றினூடாக இணைத்து அதை ஒரு நிறுவன ரீதியாக ஒருங்கிணைத்து அதனூடாக மிகப்பெரிய தமிழ்த் தேசியஎழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். எனவே ஒட்டுமொத்த இளையவர்களும் தாயகத்திற்கான பணியில் உங்களால் இயன்ற பங்கினை இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்துள் செய்து தமிழர் சுயநிர்ணயத்திற்கான நீண்ட வரலாற்றுப் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.///மயூரன்

    5 நீங்கள் ஒரு பெரிய எழுச்சியை ஏற்ப்படுத்தியுள்தாக கூறுகின்றீர்கள் இந்த எழுச்சியினால் என்ன மாற்றம் ஏற்ப்பட்டது என்பதை விளக்க வேண்டும் உலகம் ஏற்கனவே தமிழர் பிரச்சினைகளை நன்கு அறிந்து கொண்டுதான் உள்ளது இந்த விடயத்தை கையாளுவதற்கு தமிழர்களிடையே சரியான தலைமை இல்லாததால் இதை கையாளமுடியாமல் போனதும் புலிகளை தடைசெய்வதன் மூலமே மாற்றுத்தலைமையை உருவாக்க முயற்ச்சி செய்தும் பின்னர் இந்த இராணுவ நடவடிக்கைகளi செய்கினறனர் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

    இந்த இராணுவ நடவடிக்கைகளில் புலிகள் அடிபட்டுப்போகும் அபாயம் வரும் வரையில் நீங்கள் எந்த தமிழர் அமைப்புக்களும் இந்த மாதிரியான ஆர்ப்ட்டங்களை செய்யவில்லை ஏன் இது போன்ற பல சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது புலிகளக்குள்ளேயே கொலைகள் நடைபெற்றபோதும் நீங்கள் முன்வரவில்லை? காரணம் என்னவென்றால் முன்பு புலிகள் செய்யும் எல்லாவற்றையும் சரிஎன்றே ஆக்கப்பட்டது அதனாலேயே ஆனால் இப்போத அந்த புலிஅமைப்புக்கும் அதன் தலைமைக்கும் ஆபத்து என்பது உங்கில் பலரின் பல அமைப்புக்களின் ஆதங்கம்.

    உங்களுடன் சேர்ந்து வேலை செய்யும் மற்ற தமிழ் அமைப்புக்களுக்கும் புலிகளுக்கும் உள்ள தொடர்பு இதன் இணைப்பாளர்கள் யார் இவர்களுக்கும் புலிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை உலகில் உள்ள எல்லா அரசுக்கும் குறிப்hக பிரித்தானி பொலீசாருக்கும் நன்கு தெரிந்த விடயம் இதற்கு நல்ல உதாரணம் கடந்த காலங்களில் புலிகளக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தியபின்பு லண்டன் பொலீசார் யாருடைய வீட்டுக்கெல்லாம் தட்டி விசாரித்தனர் வீடுகளை சோதனையிட்டனர் என்பத தெரிந்திருந்தால் நல்லது.

    பிரிஎப் ரி வையோ போன்ற அமைப்புக்களுக்கு ஒரு ஆர்ப்பாட்டத்தை அல்லது ஒரு புரோகிராமை ஆரம்பிக்க எங்கிருந்து ஆரம்பம் நடைபெறுகிறத என்பதை அறீவீர்களா? சரி யார்சரி சரியானதை சொன்னால் சரி என்று சொல்லலாம் பின்னால் நிதி வழி பார்ப்பதும் நல்லது.

    உண்ணாவிரதப் போராட்டம் பற்றியதும் அதில் பங்கு பற்றுபவரில் ஒருவர் கடந்த 3கிழமையாகத்தான் பிரித்தானியாவில் வசிப்பவர் என்ற பேச்சு உங்களையும் எட்டியிருக்கும் கேள்வி என்ன என்றால் 250 000 மக்கள் உள்ள லண்டனில் போராட்டத்திற்கு இலங்கையில் இருந்தா உண்ணாவிரதம் இருக்க ஆள்வரவேண்டும் இதன் உண்மைநிலைமையை வெளித்தர முடியுமா? (அறப்போராட்ம் நடாத்தும் அந்த போராளிக்கு எனது உளமார்ந்த நன்றியையும் ஆதரவினையும் நேரடியாக தெரிவித்துள்ளோம்.)

    கடந்த காலங்களில் உங்கள் முயற்ச்சியில் நடைபெற்ற பெரும் ஆர்ப்பாட்டத்தை பாராட்டும் அதே வேளை இதனால் என்ன பயன் கிடைக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை எந்த தமிழ் அமைப்பு தனது அரசியலாக்கி தமிழர்கான அரசியல் முதலீட்டாக்கியது என்பதை வெளிப்படுத்த முடியுமா?

    அன்புடன் மயூரன் இதுதான் அந்த முக்கியமான கேள்ளி என்பதை ஞாபபகம் வைத்திருக்கவும் ஏன் செய்தோம்? எப்படி இந்த முயற்ச்சி மக்களுக்கானது?

    கடந்த 30 வரடங்களுக்கான போராட்டம் நடாத்திய புலிகளின் உறுப்பினர்கள் மக்கள் பலி கொள்ளப்பட்டனர் இன்று இந்த இழப்புக்கொல்லாம் ஒரு சிறிய விடயத்தின் மூலம் புலிகள் மக்களின் விரோதிகளாயினர் புலிகள் தமிழ் மக்களை பலரை சுட்டுள்ளனர் தமிழ் மக்களை தமது உயிரைப் பாதுகாக்க கேடயமாக்கியுள்ளனர் இவற்றை வெளிபபடுத்தி உங்கள் போராட்டம் நடைபெறாது போனால் நீங்கள் செய்யும் எந்தப் போராட்டமும் வீணே தான் எனபதை மறக்க வேண்டாம்.

    எல்லாவற்றையும் மக்களே உருவாக்குகிறார்கள் அவர்களுக்காகவே போராட்ம் செய்யப்பட வேண்டும்.

    புலிகள் மக்களை சுதந்திரமாக வெளியே அனுமதிக்கும் படிகேட்டு கோசங்களை முன்வைக்கவும் உடனடியாக அல்லாது போனால் உங்கள் முயற்ச்சில் துரோகம் கலந்திருக்கும் என்றே நாம் கருதுகிறோம்.

    புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் போல் சிந்திக்கறீர்கள் என்ற நினைப்பை உங்கள் கட்டுரை எனக்கு தருகிறது.- தொடர்ந்து கருத்துக்களை பகிரத் தயாராக உள்ளோம்.

    Reply
  • london boy
    london boy

    இவ்வளவு காலமும் இணையத்தளங்களில் வந்த செய்திகளை தொகுத்து கட்டுரை என்ற போர்வையில் மயூரன் போட்டுள்ளார். மற்றும்படி புதிதாக எதையும் முன்வைக்கவில்லை. By the way யார் இந்த மயூரன்? தேம்ஸ் நதியில் பாய்ந்த நபரா??

    Reply
  • மாயா
    மாயா

    //viji on April 24, 2009 10:39 am கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம் என்ற பெயரில் தேசம்நெற் தரும் தொல்லை தாங்கமுடியவில்லை.//
    உங்களைப் போன்றவர்களுக்கு
    (21.04.2009 அன்று… சிறீலங்கா அரச படையினர் வன்னியில் அரங்கேற்றியிருக்கும் தமிழ் மக்கள்மீதான மனிதப்பேரவலத்தின் காட்சிகள்…) இப்படியான செய்திகள்தான் தாங்கக் கூடிய செய்திகள். யாராவது சாக வேணும் அதைப் பார்த்து சந்தோசப்பட வேணும். இல்லையென்றால் அழ வேணும். அந்த மனநோகள் தீருவது உடனடியாக கடினம்தான்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மயூரன்; இன்றும் உங்க இளையோர் அமைப்பு பேர்லினில் நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது சீனத் தூதுவராலயத்தின் மீது பல முட்டைகளை வீசி வீரதீர விளையாட்டுகள் காட்டியுள்ளரனாம். இப்படியான செயல்களுக்கு பாராட்டு விழாக்கள் நடாத்தி அவர்களுக்கு அவித்த முட்டைகள் வழங்கி கெளரவிக்கலாமே??

    Reply
  • jimmy
    jimmy

    புலிகளின் தலைவர் ஒருகாலத்தில் பல பிரச்சாரக் கூட்டங்களையும் மேடைப் பேச்சுக்களையும் அரசியலையும் செய்வதைவிட ஒரு இராணுவ நடவடிக்கை (சிங்கள இராணுவத்தினரை கொல்வதின் மூலம் பாரிய பெரிய பிரச்சாரம் தமது இயக்க்திற்கு வந்து விடும் என்பதில் நம்பிக்கை கொண்டு வேண்டும் என்நே இராணுவ நடவடிக்கைகளை உருவாக்கும் உங்கள் தலைவர் (உங்கள் கூட்டங்களில் எங்கள் தலைவர் பிரபாகரன் முழங்குகிறது – மரத்தில் வெளவால் புலிக்கு சவாலா என்றும் முழங்குகிறது)

    இப்ப ஏன் நீங்கள் பெரிய முன்னெடுப்புக்கள் செய்ததாக கூறுகிறீர்கள் அப்படியாயின் உங்கள் தலைவர் இன்னமும் பிரச்சார வேலைகள் தொடங்கவில்லையா? எபபடி ஆதுக்கு முன்பே இபபடி போயுள்ளார்.

    அதைவிட இவவளவு காலமும் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் நடாத்தவில்லையோ? ஒப்பந்தங்கள் ஏன் செய்யப்பட்டது?

    இனிமேலும் போராட்டம் என்று சுத்துமாத்து செய்ய வேண்டாம் முடியுமாயின் புலியினர ஆட்களிடம் சேர்த்த பணம் நிறையவே உள்ளது கண்ணீர் வெள்ளம்- புலிக்கு கடைசிக்கால அவசரநிதி- வணங்காமண் போன்ற நிதி சேகரிப்பில் கிடைத்த பணத்தை வன்னியில் பாதகாப்புபிரதேசத்hதி உள்ள மக்களுக்கு கொடுப்பதற்கு என்தானே சொன்னீர்கள் இப்போ இந்த மக்கள் மாற்றி உடுக்க உடுப்பில்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு கொடுத்து உதவ முடியுயாதா? இதற்காக ரிவைஓ பிரிஎப் போராடுமா?

    சேர்த்த காசை எங்கே என்று கேட்டு ஒரு கோசம் எழுப்புவீர்களா?

    வன்னியைவிட்டு பிரபா வலயத்தை விட்டு வெளியே வந்தபிறகு தமிழர்கள் தமிழர்கள் இல்லையா? பதிலை ரெடிபண்ணவும் !

    பிரிஎப ரிவைஓ பதில் தருமா? நிதி சேகரித்தவர்கள் எங்கே பதில் தரவார்களா?
    டீசன்றான இயக்கம் புலி இயக்கம் என்றார்கள் பதில் தருமா?

    மக்களுக்காகவா போராடுகிறீர்கள்? ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட மிகப் பெருபான்மையினரை மதிக்கிறோம் அவர்கள் மக்களைத்தான் மனதில் வைத்துள்ளனர் ஆனால் துட்டர்கள் இவர்களில் நிழலில் துரோகம் செய்கிறார்கள்!

    எல்லாம் மிக அவதானமாக பார்த்துக்கொண்டிருக்கும் பலரிடம் உள்ள கேள்விகள் இன்னும் வரும்.

    இந்த போராட்டம் நடாத்தும் அமைப்புக்கள் எப்படி எங்கேயிருந்து யாரால் முன்வைக்கப்படும் முடீவுகளால் தூண்டப்படுகிறது.

    கொடூர இலங்கை அரசை மக்கள் வெகுஜனப் போராட்டத்தினால் வென்றெடுக்கப்பட்ட பலரை கொன்றதைப் பற்றி கதைப்போமா?

    இன்று புலிகள் தமது பிடியில் வைத்திருக்கும் மக்களை விடுதலை செய்ய கோசங்களை முன்வைப்பீர்களா?

    உங்கள் அமைப்புக்களின் யாப்பை எங்கே பார்க்கலாம் என்றும் சொல்லுங்கள் எந்த அளவிற்கு சட்டரீதியானத என்றும் பார்க்க வேண்டிய தேவையுள்ளது.

    தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை சுயாதீனமாக சுதந்திரமா மககளுக்காக கண்டிக்கிறோம்.

    Reply
  • accu
    accu

    //ஆகவே ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது எல்லாத் தரத்திலுமுள்ள தமிழ் மாணவர்கள்களை இளையோர் அமைப்பு, தமிழ் மாணவர் ஒன்றியம், சாக்ரி இயக்கம் ஆகியவற்றினூடாக இணைத்து அதை ஒரு நிறுவன ரீதியாக ஒருங்கிணைத்து அதனூடாக மிகப்பெரிய தமிழ்த் தேசியஎழுச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். எனவே ஒட்டுமொத்த இளையவர்களும் தாயகத்திற்கான பணியில் உங்களால் இயன்ற பங்கினை இந்த நெருக்கடி மிகுந்த காலகட்டத்துள் செய்து தமிழர் சுயநிர்ணயத்திற்கான நீண்ட வரலாற்றுப் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.// மயூரன்.

    லண்டனில் போராட்டம் வெற்றியா? இங்கே கனடாவில் படுதோல்வி. பட்டொளி பறக்க புலி துப்பாக்கியுடன் பாயும் தமிழரின் தேசியக்கொடியுடன்? கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் தொடர் போராட்டம் நடத்தி அவடமெல்லாம் இயற்க்கை உபாதையால் நாறடித்து கனடிய ஊடகங்களால் கேவலப்படுத்தப்பட்டு எந்த அரசியல் கட்சி உறுப்பினராலும் கண்டு கொள்ளப்படாமல் பெருங்கோபம் கொண்டு வானொலிகளில் வந்து தமது அறிவுக்கெட்டிய மட்டில் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளில் அரைவாசிக்குமேல் நாடுகளையும் உலகிலுள்ள அத்தனை தொண்டு நிறுவனங்களையும் திட்டித்தீர்த்து கொஞ்ச வயது போனவர்களை உண்ணாவிரதமிருத்தி [அதில் ஒருவர் இலங்கையில் அமைச்சர் துடாவையின் வலது கை. கொம்னியூஸ்ரான அவர் பல …………. கனடா வந்தபின் சாயி பக்தரானவர். தனது பாவங்களை போக்கத்தான் உண்ணாவிரதமிருப்பதாக சிலர் பேசிக்கொண்டனர்.]

    இப்படி எதுவுமே வெற்றியளிக்காத நிலையில் எல்லா அரசியல் ஆய்வாளர்களும் ஆலோசகர்களும் [இதில் பலர் இலங்கையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்]ஒன்றுகூடி எங்கே பிழை நடந்தது என ஆராய்ந்து ஒரு புதிய திட்டத்துடன் வந்தனர். அதுதான் நாம் ஒருமுறை எமது தேசியக்கொடியையும் எமது தேசியத்தலைவரின் கட் அவுட்களையும் தவிர்த்து ஒரு பேரணி நடத்தவேண்டுமென்பது. அதன்படி கடந்த செவ்வாய் பேரணி நடந்தது. பழய எம்ஜிஆர் படங்களில் வில்லனை மடக்க எம்ஜிஆர் மாறுவேசத்தில் போவார் ஒரு பெரிய மீசை,தலைக்கு ஒரு முண்டாசு,கன்னத்தில் ஒட்டிய மச்சம். வில்லனுக்குதான் விளங்காது பட்ம் பார்க்கிற எல்லாருக்கும் தெரியும் உது எம்ஜிஆர்தான் என்று. அதுவும் குரலைக் கேட்டுவிட்டால் உடன விளங்கிவிடும். அப்படித்தான் இதுவும் இவர்கள் என்ன வேசத்தில் போனாலும் அங்கே போய் வாய்திறந்தவுடன் விளங்கிவிடும் இவர்கள் அதே பழய கோஷ்டிதான் என்றும் தலையை காப்பாற்றும் அதே திட்டத்துடன்தான் வந்துள்ளார்கள் என்றும். பழய குருடி கதவைத்திறவடி என எவருமே கண்டுகொள்ளவில்லை.

    பிறகென்ன புறமுதுகு காட்டி ஓடிவந்தவர்கள் ஐந்து வானொலிகளிலும் கனடாக்கு எதிராக போர்ப்பிரகடனம் செய்யாத குறை. கனடாக்கு கடைசி சந்தர்ப்பம் கொடுத்தாச்சு எண்டவன் ஒருபக்கம்,அவரவர் தங்களது தொகுதி பாராளமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு படையெடுக்க வேண்டுமென்றவன் ஒருபக்கம், தேர்தல் நேரம் வாக்குக் கேட்டு வருவார்கள்தானே அப்போ இருக்கு எண்டவன் ஒரு பக்கம், சாப்பாடு கோப்பி வாங்கியும் தங்களை அந்தக் கடைக்காரர்கள் மூத்திரம் பெய்ய விடவில்லை என்றவர்கள் பிரச்சனை ஒரு பக்கம் ஒட்டாவா அதிர்ந்துதோ இல்லையோ ரொரன்ரோ அதிர்ந்து அடங்கியது. கொஞ்சப் பெண்கள் இருக்கிறார்கள் அப்பப்பா அவர்களை ஊருக்கு அனுப்பினால் கேளாக்கேள்வி கேட்டே மகிந்தவின் இராணுவத்தை ஈழ எல்லைகளுக்கு அப்பால் கலைத்துவிடுவார்கள் போலுள்ளது. பிறகென்ன தொடர்ந்து இரண்டு நாட்கள் ஒரே சோகப்பாடல்கள். ‘உலகே உனக்குக் கண் இல்லையா?’ என்றது ஒரு வானொலி, ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ அடுத்தது. ராத்திரி வானொலியை திறந்தால் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற அழைப்பு. ‘ரஸியத் துணைத்தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் மன்னிக்கவும் அமரிக்கத் துணைத்தூதரகம் எல்லோரும் திரண்டுவருக.’ அவங்களுக்கே தடுமாற்றம் எல்லா நாடுகளும் புலியை பிழைசொல்ல எல்லாத்தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் செய்து எங்க போறம் வாறம் எண்டு மறந்து போய்விட்டது. காலையில் வானொலியை கேட்டால் இதோ அமரிக்கத்துணைதூதரகம் முன் நடக்கும் பேரணியில் ஒருவருடன் இணைப்பை ஏற்ப்படுத்துகிறோம் என அறிவிப்பாளர் கூற மறுமுனையில் மிகக் கடுப்புடன் பதில் ‘இங்க மூன்று மணித்தியாலமாய் மூன்று பேர்தான் நிற்க்கிறோம் உடனே சனங்களை வரச்சொல்லுங்கோ நூற்றுக்கணக்கில் இல்லாவிட்டாலும் பத்துக்கணக்கிலாவது வேண்டாமா?
    மயூரன் சொல்லுங்கோ எப்படி கனடாவின் நிலை?

    Reply
  • thurai
    thurai

    தமிழர்களையே தற்கொலைப்படையாக்கி, சிங்கள இராணுவத்தைக் கொல்லும்போது அதனை வரவேற்று மகிழ்ந்தவர்கள், அதனைத்தவறென்று சொல்வோரை துரோகிகள் எனக் கூறி மரண தண்டனை விதித்தவர்கள், இப்போது சமாதானத்தையும், மனித உருமை மீறல் பற்றியும் பேச என்ன தகமையுடையவர்கள்?

    வன்னிமக்களின் அழிவினை உலகிற்குக் காட்டி புலியின் தலைவர்களை காப்பது மட்டுமன்றி புலத்து புலியின் ஆதரவாளர்களின் செயல்கலிற்கும் ஆதரவு தேடவுமெ இளையோரின் எழுச்சி உதவியாகவிருக்கும்.

    தமிழ்த்தேசிய எழுச்சி புலத்தில் புலிகளின் எழுச்சியே. தமிழாலயம் பெற்ரெடுத்து வளர்த்த புலிக்குட்டிகளே இவர்கள்.

    துரை

    Reply
  • kullan
    kullan

    ஏன் உங்களால் மற்றப்பக்கம் பார்க்க முடியவில்லை. இன்றைய நிலையில் அரசாங்கம் போரை நிறுத்துவதை விட புலிகள் போரை நிறுத்துவதே சுலபமானது. காரணம் இவ்வளவு நிலப்பரப்பை இழந்த புலிகள் இதையும் விட்டுவிட்டு மறைவது எமது உயிர் இழப்புகளைக் குறைப்பதாக அமையும். இன்றும் கூட யுத்தநிறுத்த வலயத்துக்குள் வரும் மக்கள் புலிகளால் காலின் கீழ் சுடப்பட்டிருக்கிறார்கள். தமிழ்மக்கள் அரசை யுத்தநிறுத்தம் செய்யுமாறு கேட்பது புலிகளை மீண்டும் உயிர்பெறச்செய்து போரை மீண்டும் தொடர்த்து இலங்கையை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதாக அமையும் என்று போத்தபாய சொல்லியிருப்பது சர்வதாரணமாக யாரும் சிந்திக்கப் கூடிய ஒன்றுதான்.

    மற்றவனைக் கொலையாளி எனச் சுட்டிக்காட்டும் போது எமது கைகளில் இரத்தக்கறையின்றி இருப்பது முக்கியம். நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பலரால் பதில் சொல்ல முடிவதில்லை.

    1) இன்றையநிலையில் இலங்கை அரசு யுத்தநிறுத்தம் செய்வதை விட மக்களை விட்டுவிட்டு புலிகள் மறைவது மிக இலகுவானது. பாதிப்பும் உயிர் இழப்புகளும் எம்பக்கம் இருக்கும் போது எம்மக்களைக் காக்க வெளிநாட்டுத் தமிழார்கள் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாமே ஏன் செய்யவில்லை? பயமா? திராணியில்லையா?

    2) காசுகாசாய் கொட்டிக் கொடுத்தீர்களே அவை எங்கே போயின? கேட்க முடியுமா உங்களால்? புலிகளால்தான் கணக்குக்காட்ட முடியுமா?

    3) பாடசாலைகளை விட்டுப் 13வயதுக் குழந்தைகளைக் கூடப்பிடித்துச் சென்று கட்டாய இராணுப்பயிற்சி கொடுத்துக் கொலைக்களத்துக்கு அனுப்பும் புலிகள் தலைவன் தன்பிள்ளைகளை வெளிநாட்டில் மிகவசதியான வீடுகளில் வைத்துப் படிப்பித்தார். இவரது பிள்ளைகள் மட்டும் தான்பிள்ளைகள் மற்றவர்களின் பிள்ளைகள் எல்லாம் தொல்லையா?

    4) வெளிநாடுகளில் கொடிபிடிப்பவர்களே உங்களது 13வயதுப்பாலகனை புலிக்குத் தாரைவார்த்துவிட்டு வந்து கொடிபிடியுங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் தயாரா?

    5) இலங்கையரசை போரை நிறுத்துமாறு நோர்வேயை வற்புறுத்துபவர்களே. இலங்கைத் து}தரகத்தை பலவந்தமாக அடித்துடைத்துவிட்டு நோர்வேயில் பழிகளைப்போட்டுவிட்டு இருக்கிறீர்கள். நோர்வே இனி எந்த முகத்துடன் இலங்கை அரசுடன் கதைக்க முடியும்? ஒருநிமிடம் சிந்திப்பீர்களா? இதன் பின்னணியில் புலிகள் உள்ளார்கள் என்பதை யாராலும் மறுக்க இயலாது

    6) தமிழீழம் வேண்டாம் ஐக்கிய இலங்கை போதும் என்றுதானே புலிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தீர்கள். சில கிழமைக்கு முன்பாகவும் நடேசன் மூலம் உலகுக்கு அறிவித்தீர்கள். திம்புப்பேச்சு வாத்தையில் அன்று புலிகளால் மறுக்கப்பட்ட முடிவை எத்தனையோ வருடங்கள் கழித்து> பல உயிர்களைக் காவுகொடுத்த பின்பு ஏற்றுக் கொண்வதாக அறிவித்தார்கள். அதாவது ஐக்கிய இலங்கை போது என்று வெளிப்படையாக புலிகள் அறிவித்தபின்பும் வெளிநாட்டு தமிழர்கள் ஊர்வலங்களில் கத்துகிறார்கள்we want Tamil Eelam. அப்படியாயின் நீங்கள் புலிகளை எதிர்க்கிறீர்களா? ஏன் இரண்டு நாக்குகளால் கதைக்கிறீர்கள்.

    7) அரசாங்கம் இனவழிப்பைச் செய்வதற்காக தமிழ்மக்களைக் கொல்கிறார்கள் என்று உரக்கத் கத்துபவர்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுக் கேளுங்கள். புலிகள் எத்தனையாயிரம் தமிழ்மக்களை கொன்று குவித்தார்கள் இதை என்ன வென்று சொல்லது. இதையும் இனவழிப்பு என்று ஏன் கூறத் தயங்குகிறீர்கள். அன்று சகோதரப் படுகொலைகளுக்கெதிராக மக்கள் கிளர்ந்து எழுத்திருந்தாம் தமிழ் மக்களுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது. புலிகளும் திருந்தியிருப்பார்கள். மக்களின் கருத்துக்கள் காது கொடுக்கப்பட்டிருக்கும்

    8)புலிகளை எப்படி மக்களின் பிரதிநிதிகள் என்று எப்படிக் கூறமுடியும். எந்தத் தேர்தலில் நின்று மக்களின் ஆணையைப் பெற்றார்கள். மக்கள் ஆணைபெற்ற அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றோரைக் கொன்றார்கள். மக்களின் ஆணையைக் கொன்றவர்களை எப்படி மக்களின் பிரதிநிதி என்று கூற முடியும்.

    9) விடுதலைக்காகப் போராடுகிறோம்> மக்களைக்களைக் காக்கிறோம் என்று மக்களை ஏமாற்றியது போதும். மக்களைக் காப்பவர்கள் என்றால் யாழ்பாணத்தில் என்ன நடந்தது? கடசி நிமிடம் மட்டும் காசும் பவுணும் விடுதலையின் போரால் வெருட்டி வாங்கிக்கொண்டு தமக்குப் பாதுகாப்பாக யாழ்மக்களை அழைத்துச்சென்று சாவகச்சேரி> கொடிகாமம்> வன்னியெங்கும் நடுரோட்டில் விட்டுவிட்டு கொட்டிலுக்குக் காசு> கோவணத்துக்குக்காசு என்று தட்டிப் பறித்தார்கள். இல்லை என்று யாராலும் சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட புலிகள் மேல் பக்திவாதம் வைத்திருக்கும் மக்கள் உணராதவரை தமிழர்களுக்கு அழிவுதான். அன்று யாழ்பாணத்தில் இருந்து அழைத்தும் இழுத்தும் கொண்டுவரப்பட்ட மக்கள் இன்னும் தம் சொந்த இடத்துக்குப் போகாமல் புலிகளுக்குக் கவசாமாக்கப்பட்டு புதுமாத்தளன் வரையும் வந்து சாவுக்காகக் காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட புலிகளா இரட்சகர்கள்?
    உண்மையை எழுதினால் புலி எதிர்பாளர் என்பீர்கள். உங்களின் புலி மயக்கம் தெளியும்போது அங்கே மக்கள் இருக்கமாட்டார்கள். எலும்புக்கூடுகள் மட்டுமே மீர்ந்திருக்கும்.

    9) புலிகள் ஆயுதத்தில் மட்டும் நம்பிக்கை கொண்ட மனநோயாளர்கள் என்பதை இன்று உணரவில்லை என்றால் என்று தான் உணரப்போகிறீர்களோ? இந்தப்புலிகளின் ஆயுத மனநோய்க்கு எதிராக அன்று தமிழ்மக்கள் கொடி பிடித்திருந்தால் சிலவேளை புலிகள் தம்மைத் திருத்தியிருக்கலாம். இன்றும் கூட ஒரு புலித்தலைவனுக்காக ஒரு இனமே அழிகிறது. தலைவனே நீ என்ன செய்தாய் சொல்லு? அன்றில் இருந்து உனக்காக அழிந்த அழிந்து கொண்டிருக்கும் மக்களுக்காக என்ன செய்தாய்? அவர்களின வெளிநாட்டுப் பணத்தில்> வரிப்பணத்தில் உன்பிள்ளைகளுக்கு சொகுசு வாழ்க்கை கொடுத்தாய். உன்மகளை ரேசாப்பூவுடன் ரோசாவாகவே பார்த்தோம். உனக்கு இன்றும் கவசமாக இருக்கும் மக்களை என்றாவது எண்ணிப் பார்த்தாயா? உனது பிள்ளைகள் போர்சூழலில் வாழ்ந்த பிள்ளைகள் போன்றா இருக்கிறார்கள்?

    10) இன்று புலிகள் விட்டுவிட்டுப் போனால் என்ன நடக்கும் சிங்களவன் தின்றுவிடுவான் என்கிறீகளே. இந்தப்புலிகளும் தலைமைகளும் மக்களிடையே இருந்துதான் புறப்பட்டன. புலிகள் ஒரு தமிழர்களுக்கு ஆரோக்கியமான அமைப்பு இல்லை எனும் பொழுது அது அழிக்கப்படுவதில் பாவம் எதுவும் கிடையாது. இன்னும் மக்களை மனதில் கொண்டு போராடக்கூடிய சக்திகளும் வலுக்களும் மக்களிடையே எழுந்து வரும் என்பது திண்ணம். இல்லை புலிகள் தான் வேண்டும் என்றால் தமிழ்மக்களுக்கு சாவதான் பதில். ஒன்று சிங்களவனிடம் இருந்து இன்றேல் புலிகளிடம் இருந்து.

    11) டக்கிலஸ்> கருணா> பிள்ளையான்> சித்தாத்தன்> சங்கரி போன்றவர்களை மதித்தது கிடையாது. துரோகி என்று நான் யாரையும் கூறவிரும்பவில்லை. அப்படிக் கூறினேனாயின் புலிகளும் தமிழ் துரோகிகளே. உண்மையான மக்களையும் விடுதலையையும் நேசிக்கும் சரியான தலைவன் எம்மிடையே உருவாகவில்லை என்பது தான் உண்மை. அதுவரை தமிழ்மக்கள் சகிப்புடன் இருப்பதைத்தவிர வேறுவழியில்லை.

    12) இதை எழுதுவதற்காக சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு பணியவோ அல்லது துணைபோகவோ போவதில்லை. நல்ல தலைமையை உருகாக்க தமிழ்மக்கள் இன்றும் அடைகாக்க வேண்டியே இருக்கிறது. புலிகளின் வளர்ச்சி புற்றுநோய் போன்று ஆகியபின் சரியான தலைமையையும்> தெளிவையும் மக்கள் பெற்றிருந்தால் இந்தப் பாவப்பட்ட மக்களை மனதில் சுமக்கும் தலைவன் மக்கள் இடையே இருந்து உருவாக்கப்படுவான். ஒரினம் அழியும் போது சுரப்புக்கள் புத்துயிர் பெற்று தம்மினத்தைக் காப்பதுபோல் புத்துயிர்ப்பு என்பது ஒவ்வொரு ஜீவராசிகளிலும் உள்ளது. இப்போதுதான் தமிழ்மக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம். போலித்தலைமைகள் உங்கள் இக்கட்டானநிலையை புலிகள் போன்று பயன்படுத்தி தலைமைவகிக்க முயலும். உங்கள் தலைவிதியை நீங்கள் தீர்மானிப்பதால் உங்கள் தலைவனையும் நீங்களே தீர்மானிங்கள். புலித்தலைமை பிழைத்து விட்டது என்பதற்காக தீர்மானிக்கும் சக்தியை இழந்து விடாதீர்கள். மக்களே! உங்களால் புலிகளை மக்களுக்கான நல்ல தலைமையாக உருவாக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அவர்களை அழித்து உங்களியையே உள்ள உண்மையான நேர்மையான இராஜதந்திரமும் புத்திசாலித்திறனும் கொண்ட தலைமையை உருவாக்குங்கள். சோர்ந்து விடாதீர்கள். உங்களது எதிர்கால வாழ்வுக்கு புலிகளின் வாழ்வும் ஒரு பாடமாக அமையும். சொந்த மக்களையே சுட்டுத் தள்ளுபவர்களும்> பலாத்காரத்தை தம்மக்கள் மேல் பயன்படுத்துபவர்களும் என்றும் நல்ல தலைமையில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்பதை அறிக //Kullan on April 18, 2009

    Reply
  • Thirumalai vasan
    Thirumalai vasan

    குலனின் நீண்ட பின்னூட்டம் யதார்த்தமானது. அதற்கு மேலதிகமாக ஒரு கேள்வியையும் சேர்த்துக்கொள்ளலாம். இது தமிழர்களை நோக்கியல்ல. அன்ரி டைகர்> புரோ டைகர்> இரண்டு குழுக்களையும் விட நொன் டைகர் என்று ஒரு குழுவும் உள்ளது. இதில் புரோ டைகர் குழுவை தவிர்த்து மற்றைய இரு குழுநிலையில் கருத்தியல் ரீதியில் சிந்திப்பவர்களிடம் ஒரு கேள்வி. இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் காணப்படும் இந்த எழுச்சிப் பேரணியை கண்ணால் காண்கின்றோம். அத்தனைபேரும் புலி வால்கள் என்று பின்னூட்டமிடுபவர்கல் ஒதுக்கிவிடமுடியுமா? நொன் டைகர் குழுக்களில் பலர் இன்று புரோ டைகராக மிக வேகமாக மாறிவரும் யதார்த்தத்தை இன்றைய ஊடகங்கள் சமூக அக்கறையுடன் கவனிக்கத் தவறுவதேன். அதற்குக் கண்கண்ட சாட்சியாக தொலைக்காட்சிகளில் காணும் சனத்திறள் இருக்கின்றன. பேரெழுச்சிக்குச் சென்றுவரும் ஒவ்வொரு குடும்பத்துப் பெண்களும் பிள்ளைகளும் அவர்களது கணவர்களும் (இதுவரை அரசியல் கதைக்காத-சிந்திக்காத) இருக்கிறார்கள் என்ற உண்மையை தேசம் நெற் பின்னூட்டங்கள் உணரப் பிடிவாதமாக மறுத்து வருகின்றன. புலி விரோதம் என்ற கண்ணாடியை மாத்திரமே போட்டுக்கொண்டு இந்தப் பிரச்சினைகளை பார்ப்பதை விட்டு அதைக் கொஞ்சம் கழற்றிவவைத்துவிட்டு வெறும் கண்ணால் கண்ணாடிகளின் உதவியின்றிப் பார்த்தாலே இந்தப் புலியெதிர்ப்பு- புலிவிரொத-இன்றைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் (1958 கலவரம் உட்பட) புலிகளும் பிரபாகரன்களும் தான் காரணம் என்று சிந்திக்கும் முன்னாள் போராளிகளும்> இந்நாள் புத்திஜீவிகளும் தமது நியாயமான கருத்துகள் கூட எடுபடாமல் போய்விடுகின்றன என்று இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். துர் அதிர்ஷ்டம் என்னவென்றால்> குலனின் பின்னூட்டத்தையும் இதோ எனது குறிப்பையும்கூட அந்தப் புலி எதிர்ப்புக் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்க்கத் துணியாதவர்கள் இருக்கம் வரை நல்ல கருத்துக்களும் அடிபட்டுப் போய்விடவே செய்யும்.

    Reply
  • மாயா
    மாயா

    //இந்த எழுச்சிப் பேரணியை கண்ணால் காண்கின்றோம். அத்தனைபேரும் புலி வால்கள் என்று பின்னூட்டமிடுபவர்கல் ஒதுக்கிவிடமுடியுமா? நொன் டைகர் குழுக்களில் பலர் இன்று புரோ டைகராக மிக வேகமாக மாறிவரும் யதார்த்தத்தை இன்றைய ஊடகங்கள் சமூக அக்கறையுடன் கவனிக்கத் தவறுவதேன். அதற்குக் கண்கண்ட சாட்சியாக தொலைக்காட்சிகளில் காணும் சனத்திறள் இருக்கின்றன. பேரெழுச்சிக்குச் சென்றுவரும் ஒவ்வொரு குடும்பத்துப் பெண்களும் பிள்ளைகளும் அவர்களது கணவர்களும் (இதுவரை அரசியல் கதைக்காத-சிந்திக்காத) இருக்கிறார்கள் என்ற உண்மையை தேசம் நெற் பின்னூட்டங்கள் உணரப் பிடிவாதமாக மறுத்து வருகின்றன.- Thirumalai vasan //

    புலம் பெயர் போராட்டங்களில் இன்று புலி சாராதவர்கள் போகிறார்கள் என்றால் அதற்கு மறைமுக காரணங்கள் பல உண்டு. தாம் விரும்பாத திருமண வீட்டுக்கு போய் முகம் காட்டி விட்டு வருவோர் போல இப்படியான நேரத்திலாவது போகாது போனால் தமது நண்பர்கள் : உறவுகள் (அன்றும் இன்றும் புலிகள் – புலிகலல்லாதவர்கள் ஒரே குடும்பத்துக்குள்ளேயே உண்டு. இதை கருத்தாளர் புரிய வேண்டும். ) ஏதாவது நினைப்பார்கள் என்று போவோரும், நடப்பதை வேடிக்கை பார்க்கச் செல்வோரும் , இந்த நேரத்திலாவது ஒரு முறை போவோம் என்று போவோரும் உண்டு. ஆனால் அங்கு ஒருமுறை போனவர்கள் மறுமுறை செல்ல முயல்வதில்லை. புலிகளின் போர் இருந்தால்தான் நம்மால் இங்கு வாழ முடியும் என நினைப்போரும் போகின்றனர். இவை எல்லாம் தேர்தல் கூட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் போன்றது. தேர்தல் கூட்டத்துக்கு போவோரெல்லாம் அக் கட்சிக்கு வாக்களிப்பதில்லை என்பது போல இங்கு போவோரெல்லாம் மனசுத்தியோடு போவதாக கருத முடியாது. இவர்களது வருகை முன்பை விட குறைந்தே உள்ளது.

    நாளை இதே கூட்டம் எதிர்த்து நிற்கும்.அது தமிழ் மக்களிடம் காலா காலமாக காணக் கூடிய ஒரு பலவீனம். தமது தேவைகளுக்காக பசுத் தோல் போர்த்திக் கொண்டு நடமாடுவோரால் எந்த பிரயோசனமும் இல்லை. அதை விரைவில் உணருவீர்கள்.

    Reply
  • thevi
    thevi

    தமிழ் மக்கள் அரசியலை நிதானமாக கற்றுக் கொள்ளாவிட்டால் எல்லாம் இப்படித்தான் புறக்குடத்திற்கு வார்த்த நீர் போல ஒருவருக்கும் பயன்படாது. கட்டுரையோடு இரண்டு படங்களையும் போட்டிருந்தால் தீபம் ரிவி ஜிரிவி பார்த்த மாதிரி இருந்திருக்கும்.

    Reply
  • BC
    BC

    kullan, னின் மிக நியாயமான கேள்விகள். புலிகள் ஆயுதத்தில் மட்டும் நம்பிக்கை கொண்ட மனநோயாளர்கள்.வெளிநாடுகளில் புலிக்கொடி கொடிபிடிப்பவர்கள் புலிகள் மீது நம்பிக்கை கொண்ட மனநோயாளர்கள்.
    வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கு TV Serial பார்ப்பது, கோவிலுக்கு போதவதோடு இப்போ ஊர்வலத்துக்கு போய் புலி கொடி பிடிப்பதும் சேர்ந்துள்ளது.இவர்கள் முன்பு உந்த மோட்டு சிங்களவனுக்கு பாடம் படிப்பிக் அவன் மாதிரி(பிரபாகரன்)ஒருவன் கட்டாயம் தேவை தான் என்று சொன்னவர்கள். புலிகள் பேச்சுவார்த்தை நாடகம் நடத்தி ஐக்கிய இலங்கை என்ற போது அது தானே தமிழீழம் சரிவர கூடியவிடயம் அல்ல என்றார்கள். வித்தியாசம் முன்பு புலிக் கொடி பிடிப்பது இல்லை. ஊர்வலத்துக்கும் போவதில்லை. இப்போ புலிக் கொடி பிடித்து ஊர்வலம் போகிறார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உந்த இளையோரின் குத்தாட்டப் பாட்டொன்று “பனைமரத்திலை வெளவாலா? புலிகளுக்கே சவாலா”? என்பது. அதுசரி பனைமரத்திலை வெளவால் இருப்பதற்கும், புலிகளுக்கு சவால் விடுவதற்கும் என்னப்பா சம்மந்தம்?? யாராவது விளக்குங்கப்பா….

    Reply
  • மாயா
    மாயா

    அந்த ……. காசி எழுதின வரி
    “பாடையில படுத்துறங்கினாலும்
    பைந்தமிழில் பாடவேணும்” வரி உண்மையாகி எல்லாத் தமிழனையும் படையில வைத்து அழுகிறார்கள்.

    வந்த ஆமி பனை மரத்தில எண்டு (மேலயிருந்துதானே செல் விழுது) புலிகள் கீழ இருந்து கத்துறதா தமிழீழ ஆஸ்தான கவிஞர் யாராவது எழுதி பொடிகள் கையில குடுத்திருப்பார்கள். பொடிகள் கிளிபிள்ளை போல கத்துதோ என்னவோ?

    Reply
  • thevi
    thevi

    “வெறுமனே ஓநாய் வருகிறது என்று கூச்சல் போட்டு உலகத்தை ஏமாற்றிய போதெல்லாம் உங்கள் அவலக் குரல் கேட்டு உதவிக்கு ஓடி வந்த சகலரையும் அவமானப்படுத்தியதால். இன்று உண்மையான ஓநாய் வரும் போது உங்கள் கூச்சலைக் கேட்க யாரும் இல்லைஇ வெறி கொண்ட ஓநாய் கடித்துக் குதறும் போது உங்கள் அவலக் குரலை நம்ப யாரும் தயாராக இல்லை”

    தாயகம்.

    Reply
  • thevi
    thevi

    வன்னியில் மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து கடந்த 20ம் திகதி முதல் வந்துசேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு வருவதால், வவுனியா நகரம் இடம்பெயர்ந்த வன்னி மக்களால் நிரம்பி வழிகிறது. பஸ்களிலும், வீதியோரங்களிலும், பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட பல கட்டடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்ட வண்ணம் உள்ளனர்.

    உடைமைகள் அனைத்தையும் இழந்து, பல மாதங்களாக வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் போதிய உணவு, மருத்துவ வசதிகளின்றி வாழ்ந்த களைப்புடன், கடுமையான பசியும், தாகமும் வாட்ட, சீரான உடைகள் எதுவுமின்றி நடைப்பிணங்கள் போல இவர்கள் வவுனியாவை வந்தடைந்துள்ளனர்.

    “ஒரு பெரும் பிச்சைக்காரக் கூட்டமே வந்திறங்கியிருப்பதுபோல் இவர்களைப் பார்க்க மிகவும் பரிதமாக இருக்கிறது. இதையெல்லாம் பார்ப்பதற்கு உயிரோடிருப்பதைவிட செத்துப்போயிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது” என்று இந்த அவலத்தை வர்ணித்தார், வவுனியாவிலிருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர்.

    கூட்டம் கூட்டமாக அழைத்துவரப்படும் இந்த மக்கள் தொகையில் சிறுவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருப்பதாக மற்றுமொரு தொண்டு நிறுவனப் பெண் பணியாளர் தெரிவித்தார் “10 முதல் 15 வயது மதிக்கத்தக்க பெண் பிள்ளைகள் ஆடைகள் எதுவுமின்றி வெறும் உள்ளாடையுடன் வந்ததைக் காண மனம் பதைக்கிறது. எங்கள் மக்களுக்கு ஏனிந்த அவலம்” என்று அழுகையை அடக்க முடியாத சோகத்துடன் அவர் எம்மிடம் தகவல் தெரிவித்தார்.

    பலர் இன்னமும் அவர்கள் அழைத்துவரப்பட்ட பஸ்களிலேயே தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், சில தற்காலிக தங்குமிடங்களில் வயோதிபர்கள் சிலர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடலை அகற்றவும் வசதியில்லாத நிலையில் மக்கள் இருப்பதாகவும் அந்தத் தொண்டு நிறுவனப் பணியாளர் கூறினார்.

    ஏற்கனவே கடந்த பல மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு வந்த சுமார் 70ஆயிரம் பேர் வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதிலேயே அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளன.

    பெரும்பாலான முகாம்களில் போதிய இடவசதியின்மை, மலசலகூட வசதியீனம், சீரான நீர் விநியோகம் இல்லாத நிலை என்று மக்கள் ஏற்கனவே பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், திடீரென ஓரிரு தினங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதால், இவர்களுக்கு வேண்டிய அவசர உதவிகளைச் செய்ய முடியாமல் அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் திண்டாடுவதாக தொண்டு நிறுவனப் பணியாளர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

    “வவுனியாவின் வழமையான மொத்தச் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சனத்தொகைக்கு அளவான அடிப்படைக் கட்டுமான வசதிகளே இங்குள்ளது” என்று தெரிவித்த வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுடன் நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் பெயர் குறிப்பிட விரும்பாத தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர். இப்போது திடீரென மேலதிகமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டிருக்கும் சுமார் ஒன்றரை இலட்சம் பேருடன் சேர்த்து அங்கிருக்கும் மூன்றரை இலட்சம் பேருடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான அடிக்கட்டுமான வசதிகள் வவுனியாவில் கிடையாது என்று குறிப்பிட்டார்.

    சுமார் இரண்டு இலட்சத்தை அண்மிக்கும் தொகையான மக்களுக்கு நாளாந்தம் உண்பதற்கு உணவு வழங்குவதென்பது சாத்தியமில்லாத காரியம் என்று தெரிவித்த அவர், போதியளவு உணவுப்பொருள் இருந்தாலும், அவற்றை ஒன்றரை இலட்சம் பேருக்கும் விநியோகம் செய்வது பெரும் சிரமமான காரியம் என்று தெரிவித்தார். “ஆனால், உணவுப்பொருள்களும் போதியளவுக்கு இங்கு இல்லை என்பதுதான் துயரம்” என்று தெரிவித்த அவர், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களே இந்த மக்களுக்கு உதவுவதற்குத் தம்மிடம் போதிய நிதி வசதிகள் இல்லை என்று கைவிரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

    இவ்வளவு தொகை மக்களுக்கும் உணவு சமைத்து வழங்குவது சாத்தியமில்லை என்பதால், அவர்களை சுமார் 250 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்துஇ பெரிய சமையல் பாத்திரங்களையும், அரிசி மற்றும் மரக்கறிகளையும் வழங்கி, தாமே சமைத்து உண்ணும் நிலைமையை ஏற்படுத்த முனைவதாக ஐ.நா. தொண்டுப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

    “குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவேனும் இவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கே இப்போது நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார் அவர்.

    உடனடிப் பசியையும், தாகத்தையும் போக்குவதற்கு பிற்கட் பெட்டிகளும், போத்தலில் அடைக்கப்பட்ட நீரும் வழங்குவதே மிகவும் பொருத்தம் என்று குறிப்பிட்ட அவர், இந்த மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் இவற்றை பெருந்தொகையாக வாங்கியோ, அல்லது அதற்கான பணத்தைக் கொடுத்தோ உதவி செய்யலாம் என்றும் தெரிவித்தார். தற்போதைய நிலையில், அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களை மாத்திரம் நம்பியிராமல், அவலப்பட்டுள்ள இந்த மக்களுக்கு உதவுவதற்கு இந்த நாட்டிலுள்ள மக்களும், புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் முன்வரவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    இங்குள்ள இளையோருக்கு இதுவெல்லாம் கண்ணில்படாது. கொழுப்பேறிய புலித்தலைமைதான் முக்கியம்.

    Reply