புலிகளின் முக்கிய இரு தலைவர்கள் படையினரிடம் சரண் – பாதுகாப்பு அமைச்சு :எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை- விடுதலைப்புலிகள்

dayamaster.jpgஎல்.ரி.ரி.ஈ.  இயக்கத்தின் முக்கிய தலைவர்களான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் ஆகிய இருவரும் இன்று பிற்பகல் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசித்துள்ள இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவினரிடம் புதுமாத்தளன் பகுதியில் வைத்து இவர்களிருவரும் சரணடைந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயா மாஸ்டர் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் ஊடகத்துறைப் பெறுப்பாளராகவும் அதன் பேச்சாளராகவும் செயல்பட்டு புலிகள் இயக்கத்துக்குப் பெரும் சேவையாற்றியவராவார்.

geargemaster.jpgஜோர்ஜ் என்பவர் ஆங்கில மொழியில் சரளமாக பேசக்கூடியவர். இவர் எல்.ரி.ரி.ஈ. தலைவரான பிரபாகரனின் மொழி பெயர்ப்பாளரகவும் செயல்பட்டு வந்தார். அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் கடந்ட 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த காலத்தில் பிரபாகரனுடனான பேட்டியின்போது இவர் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

எங்கள் தலைவர்கள் சரணடையவில்லை-ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்: விடுதலைப்புலிகள்

புது மாத்தளன் பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் 2 பேர் தங்கள் குடும்பத்தினருடன் சரண் அடைந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவரான வேலாயுதம் தயாநிதி என்கிற தயாமாஸ்டர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தார்.

மற்றொரு தலைவரான வி.கே.பஞ்சரத்தினம் என்கிற ஜார்ஜ், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக பணிபுரிந்து போரில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் உதவியாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தயா மாஸ்டர் மற்றும் ஜார்‌ஜ் ஆகியோர் தாங்களாக முன்வந்து சரணடையவில்லை என்றும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து போது இலங்கை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றுவிட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply to padamman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • padamman
    padamman

    நல்ல முடிவு அனைவரும் சரண் அடைந்தால் மக்கள் எல்லோரும் நின்மதி இருப்பர்கள்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அதுசரி அரசும் அப்பப்போ பீலா விடுகின்றது போல, காரணம் சில வாரங்களுக்கு முன்னர் இதே தயா மாஸ்டரை கொழும்பில் வைத்து கைது செய்ததாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டனவே??

    Reply
  • murugan
    murugan

    வீட்டில் சமையலை நேரத்திற்கு முடிக்கிறார்கள் இல்லை. தீபம் ஜிரிவி புதினம் தேசம் தேனி என மாறி மாறி கொம்யுட்டரோடு தான் மினக்கெடுகிறார்கள். சீக்கிரம் அவர்கள் சரணடைந்து விட்டால் நல்லது. சாப்பாடு கேட்க பயமாக இருக்கிறது!

    Reply
  • மாயா
    மாயா

    சாகிறதை விட சரணடையிறதில அதிக சனமாவது மிஞ்சும்

    Reply
  • rajan
    rajan

    ஜோஜ் சம்பளத்திற்கு வேலை செய்த வேலையாள். புலிகளின் முக்கிய தலைவர் என்பதெல்லாம் அரசு எல்லோருக்கும் விடும் றீல்…..

    Reply
  • ross
    ross

    ஜோர்ஜின் (பஞ்சரட்ணம்) மகளும் இங்கிருந்த வங்கிகைள சுருட்டி அவுஷ்திரேலியா சென்றவர். பலரை ஏமாத்தி பகடாக வாழ்ந்தவை. கஸ்டபட முடியல. சரண் அடைந்திட்டார்.

    Reply
  • பூனை
    பூனை

    தலைவர் எப்பவோ எஸ்கேப் என்பதற்கு நிரூபணம் வேண்டுமா?
    http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=46778

    Australia intercepts Lankan refugee boat

    A boat from Sri Lanka carrying 32 male asylum seekers was intercepted Wednesday off Australia’s west coast. It was the seventh boat to arrive this year, the same number of boats that arrived in the whole of 2008. The men were taken aboard HMAS Wollongong and are to be taken to Australia’s Indian Ocean territory of Christmas Island for processing.

    Last week there was an explosion aboard an Indonesian fishing vessel carrying mostly Afghan asylum seekers off Australia’s west coast. Five died and dozens were injured when the wooden boat went up in flames while being escorted to Christmas Island by a navy vessel.

    There were reports that those on board the boat doused it with petrol to intimidate the Australian Navy into taking them aboard the escort vessel. Fourteen boats have arrived since the government of Prime Minister Kevin Rudd softened Canberra’s treatment of illegal arrivals.

    Reply
  • மாயா
    மாயா

    புலிகளை வெளிக்கிட்டா குறைகள் கொத்து கொத்தா வரும். புலிகளோடு இன்றுவரை இருந்த போது அதைச் சொல்ல இல்ல? நாங்க உங்கள ஸ்டடி பண்ணி வெகு நாளாகிட்டுது. அப்ப புலிகளோடு இருக்கிறது எல்லாம் கள்ளரோ? வன்னித் திருடர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்றைய பிபிசி செய்தியில் புலித்தேவனிடம் தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் இருவரும் சரணடைந்தது உண்மையா என்ற கேள்விக்கு, அவர்களிருவருக்கும் தாம் எப்போதோ ஓய்வு கொடுத்து விட்டோமென்ற சமாளிப்புப் பதில் தான் வந்ததே தவிர, அவர்களிருவரும் வைத்தியசாலையிலிருந்த போது கைது செய்யப்பட்டதாக கூறவில்லை. இதிலிருந்தே புலிகளின் தடுமாற்றங்கள் நன்கு புரிகின்றது.

    Reply
  • thurai
    thurai

    புலிகளின் பயங்கரவாத போக்கிற்கும்,தமிழர் பிரச்சினைகளிற்கும் எந்த சம்பந்தமும் அன்றும் இன்றும் இல்லை இருக்கப்போவதும் இலலை. புலிகளின் உலக வலைப்பினனல் அமைப்பில் தலைவர் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புலிகள் கடமைய்யைச் சரியாகச் செய்தாலே போதும்.

    சிங்களவரை தமிழனின் எதிரியாகக் காட்டுவதன் மூலமே புலிகளால் புலத்தில் வாழமுடியும். ஏமாறும் புலத்துத்தமிழர் வாழும் வரை புலிகழும் வாழும்.

    துரை

    Reply