மிருக வெறிகொண்டு ராணுவம் தாக்குகிறது:கருணாநிதி தைரியமான முடிவெடுக்காதது வேதனை அளிக்கிறது: ஜெயலலிதா.

jayalalitha.jpgஇலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை ராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை ராணுவம் விரட்டி அடித்துக் கொள்கிறது.

அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை தரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி தெளிவான முடிவை, தைரியமாக எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். பல நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் கருணாநிதி உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல், நிமிடத்திற்கு ஒரு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் தந்தி கொடுப்பதுதான் கருணாநிதிக்கு தெரிந்த ஒரே தீர்வு போலும்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த நிமிடத்தில் நமது ஒரே முழக்கம். அதற்கு அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதை இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். அதற்கு தமிழக முதலமைச்சரின் பங்கு என்ன என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி.

இந்த நேரத்திலாவது கருணாநிதி ஒரு முதலமைச்சராக செயல்பட்டு மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லையெனில் வரலாறு எப்படி அவரை மன்னிக்கும்? ’’என ஜெயலலிதா கூறியுள்ளார்.

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஒருவேளை மிருகவெறி என்றால் எப்படி என்பது உங்களுக்குத் தெரிந்த அளவிற்கு, கருணாநிதிக்கு தெரியவில்லைப் போல….

    Reply
  • BC
    BC

    கருணாநிதியை கெட்டிதனமாக மடக்கிவிட்டாவாம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நான் சொல்லுவது புது கணக்கு. இன்று தமிழ் மக்களின் அடிப்படை உரிமையைக்காக்க போரிடுவது சிங்கள அரசு. புலிகள் அல்ல. இது பலருக்கு வெறுப்பு ஊட்டுவதாகவே இருக்கும். இதுவே மறக்கமுடியாத உண்மை. மிகுதியை வரும் காலங்களே பதில் சொல்லவேண்டும்.

    Reply
  • accu
    accu

    அப்பாவி மக்களின் உயிரிழப்பில் தேர்தல் இலாபம் ஈட்ட நினைக்கும் …… பிறப்புக்கள்.

    Reply
  • msri
    msri

    செயலலிதாவின் இம்சை (தொப்புள்கொடி உறவுகளுக்காக) தாங்கமுடியவில்லை! சீமானிடம் சொன்னால் இவவின் தேரதல்கால நடவடிக்கைகளை வைத்து ஓர்படமே எடுத்துவிடுவார்!

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    Life’s cycle moves on… April 21, 2009 10:31 pm

    While a father lost his only son, another moving episode in the cycle of life was unfolding as Sri Lanka Army medical troops had to help in the delivery of a baby to a 32-year-old Mrs. Vashikaran Vandanadevi in Puthukudirippu area while she was being taken to an IDP center in a bus on Tuesday (Apr. 21) evening at about 7.20.

    Both mother and infant were immediately rushed to the nearest hospital by the Army. Meanwhile, more civilians with severe gunshot injuries were immediately airlifted by Sri Lanka Air Force helicopters to Vavuniya and Anuradhapura Hospitals a few hours ago, reports the Army.

    Reply
  • rajan
    rajan

    செயலலிதா தேர்தலுக்காக பேசினாலும் சரியான விடயங்களை சரியான தருணத்தில் பேசுகின்றார் என்றே நினைக்கின்றேன். என்ன தான் இருந்தாலும் தமிழகததில் உள்ள சாக்கடை அரசியல்வாதிகள் சொல்வதை விட தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவி சொல்வது உலகத்துக்கு கேட்கத்தானே செய்யும்.
    ஈழத்தில் டக்ளசார் கருணா சித்தார்த்தன் உதயன் சங்கரியார் என இன்னும் பலர் பேசாமால் இருந்து காலம் கடத்துவதை விட செயலலிதா சொன்னதில் பிழையிருப்பதாக கருதிவிட முடியாது

    Reply