ஐக்கிய நாடுகள் சபைக்கு முடியாவிட்டால் யாரால் வன்னி மக்களை காப்பாற்ற முடியும்: தமிழீழ விடுதலைப்புலிகள்

nadesan-10.jpgபொது மக்களின் இழப்புகளை தடுக்கும் ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, வன்னியில் உள்ள மக்களை காப்பாற்ற முடியாதுவிட்டால் யாரால் அவர்களை காப்பாற்ற முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கேள்வி எழுப்பினார்.
 
வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை தெரிந்து கொள்வற்காக இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர்.

நம்பியார் வன்னிக்கு வந்தால் உண்மை நிலை தெரியவந்து விடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவரின் வன்னி வருகையை தடுத்துள்ளதாக நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply to Stalinistmao Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

17 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஏன் ஐ.நா, நீங்க நினைத்தாலே வன்னி மக்களைக் காப்பாற்ற முடியுமே.

    1) வன்னி மக்களை வெளியேற அனுமதியுங்கள்.

    2) நீங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரனடையுங்கள்.

    இதில் நீங்கள் எதைச் செய்தாலும் வன்னி மக்களும் காப்பாற்றப்படுவார்கள். மற்றும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் விடிவும் கிடைக்கும்.

    Reply
  • accu
    accu

    என்ன நடேசண்ணை எம்ஜிஆர் இல் தொடங்கிய போராட்டம் இப்ப நம்பியாரில் வந்து நிற்க்கிறதா? உங்களுக்கு தெரிகிறதல்லவா வன்னி மக்களை காப்பாற்ற புலிகளால் முடியாதென்று. பிறகு சும்மா கேள்வி எழுப்பிறதை விட்டிட்டு உங்கட தலை உந்த ஏரியாவில் நிக்கமாட்டார் என்றுதான் நினைக்கிறன் எதுக்கும் தேடிப்பாருங்கோ கண்டு பிடிச்சா விசயத்தை விளங்கப்படுத்துங்கோ புலன் பெயர்ந்தோர் போராட்டங்கள் எந்த வித பலனையும் தரவில்லை தரப்போவதுமில்லை மாறாக மேலும் இறுக்குமாப்போலதான் தெரிகிறது. எனவே கையைத்தூக்கிறதைத் தவிர வேறுவழி இல்லையென்று. அந்த பாவப்பட்ட மக்களாவது பிழைக்கட்டும்.

    Reply
  • thurai
    thurai

    உங்கள் தலைவர் கோவிலில் உயிர்பிச்சை கேட்டு கும்பிட்டோரையே போட்டுத்தள்ளியவர். அவரையேதான் இன்னமும் புலத்துத்தமிழர் கடவுளாக வணங்குகின்றனர்.

    கடவுள்தான் ஈழத்தமிழரைக் காக்கவந்தாலும் உங்கள் தலைவரைக் கண்டதும் ஓடி ஒழித்து விடுவார்.

    துரை

    Reply
  • Sethurupan
    Sethurupan

    புத்தளத்தில் உள்ள முஸ்லீம் உறவுகளின் நிலைதான் வன்னி தமிழருக்கு ஏற்படபொகின்றது.

    புத்தளத்தில் முகாம்கள் வைத்து அந்த முகாங்களை காட்டி இலங்கை அரசு கடந்த 15 வருடமாக உலக முஸ்லீம் நாடுகளிடம் இருந்து பணம் கறப்பது போல -வவுனியா அகதி முகாம் உலக நாடுகளின் காட்சி பொருளாக வைத்து பணம் கறக்கும் ஒரு வியாபாரமாக மாறப்போகிறது.

    இந்த சதிக்கு வன்னி மக்கள் பலியாகி தமிழனின் எதிர்காலம் சீரளியபோகிறது.

    Reply
  • பாஸ்கரன்
    பாஸ்கரன்

    மாவீரர் உரையினிலே நீ பேசுகின்ற போது
    மாயமாய் நீ மறைந்து போவாய்
    என்று தெரிந்திருந்தால்?
    கள்ளன் நீ என்றும் தெரிந்திருந்தால்..
    கல்லறையில் புதைப்பதற்காய்
    நாங்கள் வளர்த்த எங்கள் பிள்ளைகளை
    உனக்கு தந்திருக்க மாட்டோமே..
    எங்கே போய் நீ ஒழிந்து இருக்கின்றாய்
    நாங்கள் காணாமல் தவிக்கின்றோம்
    கள்ளா நீ எங்கே இருக்கின்றாய்!
    நமக்கு தெரிந்தால்; உன்னை கல்லால் திரத்தியடிப்போம்
    கார்த்திகை மாதமே! கார்த்திகை மாதமே!
    கடைசியாய வேகமாய் நீ வந்து மலராயோ?
    கார்த்திகை மாதமே கார்த்திகை மாதமே
    கடைசியாய வேகமாய் நீ வந்து மலராயோ?…
    கி.பாஸ்கரன் -சுவிஸ்

    Reply
  • Kullan
    Kullan

    ஏன் உங்களால் மற்றப்பக்கம் பார்க்க முடியவில்லை. இன்றைய நிலையில் அரசாங்கம் போரை நிறுத்துவதை விட புலிகள் போரை நிறுத்துவதே சுலபமானது. காரணம் இவ்வளவு நிலப்பரப்பை இழந்த புலிகள் இதையும் விட்டுவிட்டு மறைவது எமது உயிர் இழப்புகளைக் குறைப்பதாக அமையும். இன்றும் கூட யுத்தநிறுத்த வலயத்துக்குள் வரும் மக்கள் புலிகளால் காலின் கீழ் சுடப்பட்டிருக்கிறார்கள். தமிழ்மக்கள் அரசை யுத்தநிறுத்தம் செய்யுமாறு கேட்பது புலிகளை மீண்டும் உயிர்பெறச்செய்து போரை மீண்டும் தொடர்த்து இலங்கையை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதாக அமையும் என்று போத்தபாய சொல்லியிருப்பது சர்வதாரணமாக யாரும் சிந்திக்கப் கூடிய ஒன்றுதான்.

    மற்றவனைக் கொலையாளி எனச் சுட்டிக்காட்டும் போது எமது கைகளில் இரத்தக்கறையின்றி இருப்பது முக்கியம். நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பலரால் பதில் சொல்ல முடிவதில்லை.

    1) இன்றையநிலையில் இலங்கை அரசு யுத்தநிறுத்தம் செய்வதை விட மக்களை விட்டுவிட்டு புலிகள் மறைவது மிக இலகுவானது. பாதிப்பும் உயிர் இழப்புகளும் எம்பக்கம் இருக்கும் போது எம்மக்களைக் காக்க வெளிநாட்டுத் தமிழார்கள் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாமே ஏன் செய்யவில்லை? பயமா? திராணியில்லையா?

    2) காசுகாசாய் கொட்டிக் கொடுத்தீர்களே அவை எங்கே போயின? கேட்க முடியுமா உங்களால்? புலிகளால்தான் கணக்குக்காட்ட முடியுமா?

    3) பாடசாலைகளை விட்டுப் 13வயதுக் குழந்தைகளைக் கூடப்பிடித்துச் சென்று கட்டாய இராணுப்பயிற்சி கொடுத்துக் கொலைக்களத்துக்கு அனுப்பும் புலிகள் தலைவன் தன்பிள்ளைகளை வெளிநாட்டில் மிகவசதியான வீடுகளில் வைத்துப் படிப்பித்தார். இவரது பிள்ளைகள் மட்டும் தான்பிள்ளைகள் மற்றவர்களின் பிள்ளைகள் எல்லாம் தொல்லையா?

    4) வெளிநாடுகளில் கொடிபிடிப்பவர்களே உங்களது 13வயதுப்பாலகனை புலிக்குத் தாரைவார்த்துவிட்டு வந்து கொடிபிடியுங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் தயாரா?

    5) இலங்கையரசை போரை நிறுத்துமாறு நோர்வேயை வற்புறுத்துபவர்களே. இலங்கைத் து}தரகத்தை பலவந்தமாக அடித்துடைத்துவிட்டு நோர்வேயில் பழிகளைப்போட்டுவிட்டு இருக்கிறீர்கள். நோர்வே இனி எந்த முகத்துடன் இலங்கை அரசுடன் கதைக்க முடியும்? ஒருநிமிடம் சிந்திப்பீர்களா? இதன் பின்னணியில் புலிகள் உள்ளார்கள் என்பதை யாராலும் மறுக்க இயலாது

    6) தமிழீழம் வேண்டாம் ஐக்கிய இலங்கை போதும் என்றுதானே புலிகள் பேச்சுவார்த்தைக்கு வந்தீர்கள். சில கிழமைக்கு முன்பாகவும் நடேசன் மூலம் உலகுக்கு அறிவித்தீர்கள். திம்புப்பேச்சு வாத்தையில் அன்று புலிகளால் மறுக்கப்பட்ட முடிவை எத்தனையோ வருடங்கள் கழித்து> பல உயிர்களைக் காவுகொடுத்த பின்பு ஏற்றுக் கொண்வதாக அறிவித்தார்கள். அதாவது ஐக்கிய இலங்கை போது என்று வெளிப்படையாக புலிகள் அறிவித்தபின்பும் வெளிநாட்டு தமிழர்கள் ஊர்வலங்களில் கத்துகிறார்கள்we want Tamil Eelam. அப்படியாயின் நீங்கள் புலிகளை எதிர்க்கிறீர்களா? ஏன் இரண்டு நாக்குகளால் கதைக்கிறீர்கள்.

    7) அரசாங்கம் இனவழிப்பைச் செய்வதற்காக தமிழ்மக்களைக் கொல்கிறார்கள் என்று உரக்கத் கத்துபவர்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுக் கேளுங்கள். புலிகள் எத்தனையாயிரம் தமிழ்மக்களை கொன்று குவித்தார்கள் இதை என்ன வென்று சொல்லது. இதையும் இனவழிப்பு என்று ஏன் கூறத் தயங்குகிறீர்கள். அன்று சகோதரப் படுகொலைகளுக்கெதிராக மக்கள் கிளர்ந்து எழுத்திருந்தாம் தமிழ் மக்களுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது. புலிகளும் திருந்தியிருப்பார்கள். மக்களின் கருத்துக்கள் காது கொடுக்கப்பட்டிருக்கும்

    8)புலிகளை எப்படி மக்களின் பிரதிநிதிகள் என்று எப்படிக் கூறமுடியும். எந்தத் தேர்தலில் நின்று மக்களின் ஆணையைப் பெற்றார்கள். மக்கள் ஆணைபெற்ற அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றோரைக் கொன்றார்கள். மக்களின் ஆணையைக் கொன்றவர்களை எப்படி மக்களின் பிரதிநிதி என்று கூற முடியும்.

    9) விடுதலைக்காகப் போராடுகிறோம்> மக்களைக்களைக் காக்கிறோம் என்று மக்களை ஏமாற்றியது போதும். மக்களைக் காப்பவர்கள் என்றால் யாழ்பாணத்தில் என்ன நடந்தது? கடசி நிமிடம் மட்டும் காசும் பவுணும் விடுதலையின் போரால் வெருட்டி வாங்கிக்கொண்டு தமக்குப் பாதுகாப்பாக யாழ்மக்களை அழைத்துச்சென்று சாவகச்சேரி> கொடிகாமம்> வன்னியெங்கும் நடுரோட்டில் விட்டுவிட்டு கொட்டிலுக்குக் காசு> கோவணத்துக்குக்காசு என்று தட்டிப் பறித்தார்கள். இல்லை என்று யாராலும் சொல்ல முடியுமா? இப்படிப்பட்ட புலிகள் மேல் பக்திவாதம் வைத்திருக்கும் மக்கள் உணராதவரை தமிழர்களுக்கு அழிவுதான். அன்று யாழ்பாணத்தில் இருந்து அழைத்தும் இழுத்தும் கொண்டுவரப்பட்ட மக்கள் இன்னும் தம் சொந்த இடத்துக்குப் போகாமல் புலிகளுக்குக் கவசாமாக்கப்பட்டு புதுமாத்தளன் வரையும் வந்து சாவுக்காகக் காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட புலிகளா இரட்சகர்கள்?
    உண்மையை எழுதினால் புலி எதிர்பாளர் என்பீர்கள். உங்களின் புலி மயக்கம் தெளியும்போது அங்கே மக்கள் இருக்கமாட்டார்கள். எலும்புக்கூடுகள் மட்டுமே மீர்ந்திருக்கும்.

    9) புலிகள் ஆயுதத்தில் மட்டும் நம்பிக்கை கொண்ட மனநோயாளர்கள் என்பதை இன்று உணரவில்லை என்றால் என்று தான் உணரப்போகிறீர்களோ? இந்தப்புலிகளின் ஆயுத மனநோய்க்கு எதிராக அன்று தமிழ்மக்கள் கொடி பிடித்திருந்தால் சிலவேளை புலிகள் தம்மைத் திருத்தியிருக்கலாம். இன்றும் கூட ஒரு புலித்தலைவனுக்காக ஒரு இனமே அழிகிறது. தலைவனே நீ என்ன செய்தாய் சொல்லு? அன்றில் இருந்து உனக்காக அழிந்த அழிந்து கொண்டிருக்கும் மக்களுக்காக என்ன செய்தாய்? அவர்களின வெளிநாட்டுப் பணத்தில்> வரிப்பணத்தில் உன்பிள்ளைகளுக்கு சொகுசு வாழ்க்கை கொடுத்தாய். உன்மகளை ரேசாப்பூவுடன் ரோசாவாகவே பார்த்தோம். உனக்கு இன்றும் கவசமாக இருக்கும் மக்களை என்றாவது எண்ணிப் பார்த்தாயா? உனது பிள்ளைகள் போர்சூழலில் வாழ்ந்த பிள்ளைகள் போன்றா இருக்கிறார்கள்?

    10) இன்று புலிகள் விட்டுவிட்டுப் போனால் என்ன நடக்கும் சிங்களவன் தின்றுவிடுவான் என்கிறீகளே. இந்தப்புலிகளும் தலைமைகளும் மக்களிடையே இருந்துதான் புறப்பட்டன. புலிகள் ஒரு தமிழர்களுக்கு ஆரோக்கியமான அமைப்பு இல்லை எனும் பொழுது அது அழிக்கப்படுவதில் பாவம் எதுவும் கிடையாது. இன்னும் மக்களை மனதில் கொண்டு போராடக்கூடிய சக்திகளும் வலுக்களும் மக்களிடையே எழுந்து வரும் என்பது திண்ணம். இல்லை புலிகள் தான் வேண்டும் என்றால் தமிழ்மக்களுக்கு சாவதான் பதில். ஒன்று சிங்களவனிடம் இருந்து இன்றேல் புலிகளிடம் இருந்து.

    11) டக்கிலஸ்> கருணா> பிள்ளையான்> சித்தாத்தன்> சங்கரி போன்றவர்களை மதித்தது கிடையாது. துரோகி என்று நான் யாரையும் கூறவிரும்பவில்லை. அப்படிக் கூறினேனாயின் புலிகளும் தமிழ் துரோகிகளே. உண்மையான மக்களையும் விடுதலையையும் நேசிக்கும் சரியான தலைவன் எம்மிடையே உருவாகவில்லை என்பது தான் உண்மை. அதுவரை தமிழ்மக்கள் சகிப்புடன் இருப்பதைத்தவிர வேறுவழியில்லை.

    12) இதை எழுதுவதற்காக சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு பணியவோ அல்லது துணைபோகவோ போவதில்லை. நல்ல தலைமையை உருகாக்க தமிழ்மக்கள் இன்றும் அடைகாக்க வேண்டியே இருக்கிறது. புலிகளின் வளர்ச்சி புற்றுநோய் போன்று ஆகியபின் சரியான தலைமையையும்> தெளிவையும் மக்கள் பெற்றிருந்தால் இந்தப் பாவப்பட்ட மக்களை மனதில் சுமக்கும் தலைவன் மக்கள் இடையே இருந்து உருவாக்கப்படுவான். ஒரினம் அழியும் போது சுரப்புக்கள் புத்துயிர் பெற்று தம்மினத்தைக் காப்பதுபோல் புத்துயிர்ப்பு என்பது ஒவ்வொரு ஜீவராசிகளிலும் உள்ளது. இப்போதுதான் தமிழ்மக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம். போலித்தலைமைகள் உங்கள் இக்கட்டானநிலையை புலிகள் போன்று பயன்படுத்தி தலைமைவகிக்க முயலும். உங்கள் தலைவிதியை நீங்கள் தீர்மானிப்பதால் உங்கள் தலைவனையும் நீங்களே தீர்மானிங்கள். புலித்தலைமை பிழைத்து விட்டது என்பதற்காக தீர்மானிக்கும் சக்தியை இழந்து விடாதீர்கள். மக்களே! உங்களால் புலிகளை மக்களுக்கான நல்ல தலைமையாக உருவாக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அவர்களை அழித்து உங்களியையே உள்ள உண்மையான நேர்மையான இராஜதந்திரமும் புத்திசாலித்திறனும் கொண்ட தலைமையை உருவாக்குங்கள். சோர்ந்து விடாதீர்கள். உங்களது எதிர்கால வாழ்வுக்கு புலிகளின் வாழ்வும் ஒரு பாடமாக அமையும். சொந்த மக்களையே சுட்டுத் தள்ளுபவர்களும்> பலாத்காரத்தை தம்மக்கள் மேல் பயன்படுத்துபவர்களும் என்றும் நல்ல தலைமையில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்பதை அறிக

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகள் இலங்கையில் தமிழ் மக்களைச் சீரழித்தது போதாது என்று புலத்திலும் புலிவால்களை வைத்து புலத்திலுள்ள தமிழர்களையும் சீரழித்துக் கொண்டிருக்கின்றது. சேதுவிற்கு இவை தெரியாது போல.

    Reply
  • ramesh
    ramesh

    திரு.நடேசன் அவர்களே! தம்பணை வழியாக இராணுவம் முன்னேறி வந்தபோது தட்சனாமருதமடுவில் ஐ.நாவின் பாதுகாப்பிலிருந்த அகதி முகாமில் நெடுங்காலமாக வாழ்ந்துவந்த பல ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் பலாத்காரமாக மந்தைகளைப் போன்று இழுத்துச் செல்லப்பட்டு இன்று வன்னிப்போரில் மனிதகேடயமாகி அல்லல்படுவதை அன்று அங்கிருந்த ஐ.நா அதிகாரிகளால் தடுத்து காப்பாற்ற முடியவில்லை என்பதை மறந்துவிட்டீர்களா? இலங்கையில் இனிமேல் அகதிகளைக் ககாக்க ஐ.நாவால் முடியாது.விடுவிக்க நீங்களே போதுமே… சிந்தித்துப் பாருங்கள்-புரியும்:

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    whats happening now the ltte tails making the westren/american tamil youths as westren/american muslim youths
    they allready spoiled the next genaration in srilanka/tamileelam now they start in foreign ltte/ltte tails are the sin for the tamils

    Reply
  • Stalinistmao
    Stalinistmao

    “ஐக்கிய நாடுகள் சபைக்கு முடியாவிட்டால் யாரால் வன்னி மக்களை காப்பாற்ற முடியும்?”

    புலிகளின் தலைவர் பிரபாகரனால் முடியாவிட்டால் யாரால் வன்னி மக்களை காப்பாற்ற முடியும்?

    புலிகளின் ஆட்சிக்காலத்தில் புலி எதிர்ப்பாளர்களும் புலிக்கு
    கப்பம் கொடுக்க மறுத்தவர்களும் உள்ளே நுளைய முடியாத வன்னிக்குள் இலங்கை அதிபரும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தற்போதய முதல் எதிரியுமான ராஜபக்ச இலகுவா போய் உயிருடன் திரும்பியுள்ளார்.

    சக தமிழர் போக முடியாத தமிழரின் தாயகத்திற்குள் சிங்கள எதிரி அதுவும் புலிகளின் தலைநகருக்குள் போய் வந்தது எந்த மானமுள்ள புலி ஆதரவாளர்களாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இது புலிகளின் “தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு ஒரு நீதி” என்னும் மாற்றாம் தாய் மனப்பான்மை என புலப்படுகிறது.

    புலிகளின் தலைவர் பிரபாகரனால் தனது 2008 பிறந்த நாள் உரையிள் குறிப்பிட்து போல ராஜபக்ச கனவில்தான்
    வந்தாரா.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    எதற்கும் ஒரு நேரம் உண்டு.காலம்உண்டு.இவையெல்லாம் திரண்டு வரும் போது
    அதை வன்னிமக்களே நிறைவேற்றி வைப்பார்கள்.
    பாஸ்கரனின் கவிதை வரிகளுக்காக…..
    “நமக்கு தெரிந்தால் உன்னை கல்லால் துரத்தியடிப்போம்”.

    Reply
  • ajeevan
    ajeevan

    “நமக்கு தெரிந்தால் உன்னை கல்லால் துரத்தியடிப்போம்”. எனக்கு தமிழ்- தெலுங்கு பட கடைசி காட்சி நினைவுக்கு வருது. வில்லனை, கதாநாயகன் கொல்ல மாட்டார். நம்பின ஆட்களே துரத்தியடிச்சு கொல்லுவாங்க. அதை நினைச்சன்…..கி..கீ..கீ

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    “நமக்கு தெரிந்தால் உன்னை கல்லால் துரத்தியடிப்போம்” என்று எல்லோரும் ஆர்வமாய்த் தான் உள்ளோம். ஆனால் “கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்றல்லவா தொடர்கின்றது.

    Reply
  • ajeevan
    ajeevan

    //பார்த்திபன் on April 19, 2009 9:53 am “நமக்கு தெரிந்தால் உன்னை கல்லால் துரத்தியடிப்போம்” என்று எல்லோரும் ஆர்வமாய்த் தான் உள்ளோம். ஆனால் “கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்றல்லவா தொடர்கின்றது.//

    எல்லாரும் நினைக்கிறது மாதிரி நடக்காது.
    பிரபாகரன் தன்னை தக்க வைத்துக் கொள்வார் என்றே நம்புகிறேன்.
    அவரது கடந்த கால தப்பல்கள் அப்படியே நடந்துள்ளதை அவதானிக்கலாம்.

    சினிமாவை விட எதிர்பாராத திருப்பங்கள் பலர் வாழ்வில் நடக்கின்றன.
    அப்படி ஏதாவது நடக்கலாம்.

    “நமக்கு தெரிந்தால் உன்னை கல்லால் துரத்தியடிப்போம்”
    எனும் வரிகள் சாத்தியமா? மனதுக்குள் சிரிக்கத்தான் முடிகிறது?

    Reply
  • BC
    BC

    “நமக்கு தெரிந்தால் உன்னை கல்லால் துரத்தியடிப்போம்”

    தெரிந்தால் துரத்தியடிப்போம் என்று தான் சொன்னார்கள்.மக்கள் தலைவர் மக்களுக்கு பயந்து ஒளித்து திரிவதை நினைத்து மனதுக்குள் சிரித்தீர்களோ?

    Reply
  • வன்னிகரன்
    வன்னிகரன்

    உனக்கல்லக் கண்மணீ!
    சயனைற்
    ஊரவள் பிள்ளைகளுக்குத்தான்.
    நான் அழகுக்காய்;
    அதனை அணிந்து கொள்வேன்.
    எங்கள் குளிர்பதனப்பெட்டிகளும்
    உயர்ரக புட்டிகளைத்தான்
    அணைத்துக்கொள்ளும்.
    தமிழா! தமிழா!!
    நீ நா வரண்டு மடிந்தால் போதும்.
    தமிழச்சிகளின் தாலிகளும் – அவர் தம்
    உச்சித்திலகங்களும்
    நிலத்தில் சிந்தட்டும் – நான்
    உண்டு கொழுப்பேன்!
    தொந்தி பெருப்பேன்!!
    எல்லோரும் பேயர்! எல்லோரும் மடையர்!!
    -வன்னிகரன்-

    Reply
  • Thirumalai vasan
    Thirumalai vasan

    குலனின் நீண்ட பின்னூட்டம் யதார்த்தமானது. அதற்கு மேலதிகமாக ஒரு கேள்வியையும் சேர்த்துக்கொள்ளலாம். இது தமிழர்களை நோக்கியல்ல. அன்ரி டைகர்> புரோ டைகர்> இரண்டு குழுக்களையும் விட நொன் டைகர் என்று ஒரு குழுவும் உள்ளது. இதில் புரோ டைகர் குழுவை தவிர்த்து மற்றைய இரு குழுநிலையில் கருத்தியல் ரீதியில் சிந்திப்பவர்களிடம் ஒரு கேள்வி. இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் காணப்படும் இந்த எழுச்சிப் பேரணியை கண்ணால் காண்கின்றோம். அத்தனைபேரும் புலி வால்கள் என்று பின்னூட்டமிடுபவர்கல் ஒதுக்கிவிடமுடியுமா? நொன் டைகர் குழுக்களில் பலர் இன்று புரோ டைகராக மிக வேகமாக மாறிவரும் யதார்த்தத்தை இன்றைய ஊடகங்கள் சமூக அக்கறையுடன் கவனிக்கத் தவறுவதேன். அதற்குக் கண்கண்ட சாட்சியாக தொலைக்காட்சிகளில் காணும் சனத்திறள் இருக்கின்றன. பேரெழுச்சிக்குச் சென்றுவரும் ஒவ்வொரு குடும்பத்துப் பெண்களும் பிள்ளைகளும் அவர்களது கணவர்களும் (இதுவரை அரசியல் கதைக்காத-சிந்திக்காத) இருக்கிறார்கள் என்ற உண்மையை தேசம் நெற் பின்னூட்டங்கள் உணரப் பிடிவாதமாக மறுத்து வருகின்றன. புலி விரோதம் என்ற கண்ணாடியை மாத்திரமே போட்டுக்கொண்டு இந்தப் பிரச்சினைகளை பார்ப்பதை விட்டு அதைக் கொஞ்சம் கழற்றிவவைத்துவிட்டு வெறும் கண்ணால் கண்ணாடிகளின் உதவியின்றிப் பார்த்தாலே இந்தப் புலியெதிர்ப்பு- புலிவிரொத-இன்றைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் (1958 கலவரம் உட்பட) புலிகளும் பிரபாகரன்களும் தான் காரணம் என்று சிந்திக்கும் முன்னாள் போராளிகளும்> இந்நாள் புத்திஜீவிகளும் தமது நியாயமான கருத்துகள் கூட எடுபடாமல் போய்விடுகின்றன என்று இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். துர் அதிர்ஷ்டம் என்னவென்றால்> குலனின் பின்னூட்டத்தையும் இதோ எனது குறிப்பையும்கூட அந்தப் புலி எதிர்ப்புக் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்க்கத் துணியாதவர்கள் இருக்கம் வரை நல்ல கருத்துக்களும் அடிபட்டுப் போய்விடவே செய்யும்.

    Reply